தமிழில் நகைசசுவை

பிரபல வித்வான் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வாக் ஜாலத்தில் கில்லாடி . இதோ அவருடைய சொற்கள் விளையாடும் நகைசசுவை ஒன்று. இது ஒரு பிரபல வித்வான் சொல்லக்கேட்டது

பாலமுரளி கச்சேரிக்கு சென்று திரும்பிய சிஷ்யன் ஒரு ராக ஆலாபனை செய்துகொண்டிருந்தான்.இதை கேட்டுக்கொண்டிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் சிஷ்யனிடம் "என்னராகம்டா இது புதுசா இருக்கே " என்றார். சிஷ்யன் "அண்ணா இது இன்று கச்சேரியில் முரளி சார் பாடினார் ராகத்தின் பெயர் சுநாத வினோதினி". மகாராஜபுரம் சிரித்துக்கொண்டே " அவர் நன்னாத்தான் பாடியிருப்பார் ஆனா நீ பாடியதில் சுனாதம் இல்லை விநோதமாகத்தான் இருக்கு" என்றார்.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends