ஆழ்வார்கள் அளித்த அமுதம் அனுபவிப்போம் வாருங்கள்

பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பு
உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு

(பொய்கை ஆழ்வார்)

நதி கடலையே நோக்கும். தாமரைப்பூ சூரியனை நோக்கும். உயிர் எமனை நோக்கிச் செல்லும். உணர்வு மட்டும் பகவானைச் சென்றடையும் என்னும்போது ஆத்மா என்பது அழிவில்லாதது, அதன் குறிக்கோள் பகவானைச் சென்றடைவது என்கிற அடிப்படை இந்தக் கருத்து வெளிப்படுகிறது.

ஆழ்ந்த கருத்துகளை அழகான தமிழ் மொழியிலே அளிக்கிறார் பொய்கை ஆழ்வார்.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு