Thirukadavur temple part 1 to 10

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Courtesy:Sri.Kovai G.Karuppasamy

Continues


*திருக்கடவூர்.*
*(3)*
中中中中中中中中中中中中中
ஆலகாலம் பெருகிய சுவடேயன்றி நிசப்தமாயிருந்த பாற்கடலின் மையப் பகுதியில் திடீரென மேருவை உராய்ந்து திருகி மேலெழுந்தது பேரலையொன்று.
பால்நுரைகளில் மிதந்த பதுமலர் மேலே பொன்னிறத் திருமேனி பேரொளி போல் வீசியது. மின்னற் கொடி போலும், முத்துச்சுடர் போலும் தென்றல் நடைபோலும் தேனின் மழைபோலும் அலைமகளாம் திருமகள் அசைந்து விரைந்து கரை வந்தாள்.
கரையிறங்கிய கருமுகில்போல் கனிந்துநின்ற கார்வண்ணனின் கண்கலந்த விநாடியில் செம்மை கன்னங்களில் கோலமிட ஒசிந்து நின்றாள் திருமகள்.
அந்நேரம் பாற்கடலிருந்து மெல்ல மெல்ல மேலெழுந்தன அரிய அற்புதங்கள். ஆனைகளின் வடிவான ஐராவதம், பசுக்குல காமதேனு, குதிரை வர்க்க உச்சைர்வம், விருட்சங்களின் அற்புதமாகிய கற்பகம், இவைகளுடனே சிந்தாமணி, கெளஸ்துப மணி, சூடாமணி ஆகியவை ஒவ்வொரு முறயும் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு வந்தது. கரையோரமெங்கும் ஆனந்தம் பொங்கிய ஆரவாரம் நில்லா ஒலித்தன.
வானில் மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் மின்னின. தகதகவென பூரண நிலவு பால்போல பொங்கிப் பொழிந்தன. மரணமிலாப் பெருவாழ்வின் மாமருந்தாய் வானவர் தம் பெருவிருந்தாய் கிளர்ந்தெழுந்த அமுதக்கலசத்தை தாங்கி முன் வந்தார் அப்சா.
இதுவரை நடந்த யுத்தங்களில் அசுரர் குலம் பெருத்ததாயும், அமரர்கள் கூட்டம் சிறித்ததாயும், இருந்த நிலை மாறி ஆலகால நஞ்சும் வாசுகியின் நஞ்சும் வெளியானதில் அசுரர்களில் பெரும் கூட்டத்தினர் அழிந்தொழிய மிகச் சொற்ப மானவர்களே எஞ்சியிருந்தனர். அந்த எஞ்சியவர்களில் ஒருவன் ஆவேசம் தலைக்கேறியதோடு திருமாலை நோக்கி பாய்ந்து வந்தான்.
வாசுகியின் தலைப்பகுதியை பிடித்திழுத்து கடைந்தால் அமுதம் வந்து சேருமென்று தேவர்களுக்கு நீதான் சொன்னாய். இவ்வரகசியத்தை தெரிந்து கொண்ட நாங்கள் தலைப்பகுதியை திரண்டு பிடித்தோம். ஆலகாலம் பெருகி வந்தது. அசுரன் முடிவுக்கு முன் அமரர்கள் பக்கமிருந்து ஆரவாரச் சிரிப்பு வந்தன.
முட்டாள் அரக்கனே!" உன் சூழ்ச்சி நிலையறிந்து, ரகசியம் என்பது போல உணக்கு உணர்த்தவதற்காக, திருமால் அதை ரகசியம் போலச் சொன்னார். அதில் ரகசியம் ஏதும் இல்லை. அது உங்களுக்கு நீங்களே விரித்த வலை.
ஒன்றுமே செய்ய முடியாதென ஆற்றாமையால் அமுதக் குடத்திலாவது உரிமைப் பங்கை பெற்று விடுவதென முடிவெடுத்தனர் அசுரா்கள்.
எல்லாம் முடிந்ததும் அமுதம் கிடைக்க துணைசெய்த மேருவையும், வாசுகியையும் வரிசையாக வந்து வழிபட்டாா்கள் தேவர்கள்.
நடந்ததெல்லாம் ஏதோதொரு வியப்பே? என வியந்தவர்களை பாா்த்துச் சொன்னார் திருமால்.......,,,,
*"பாற்கடலினடியில் மேரு ஊன்றிருக்க அது நிலைநின்று ஒவ்வொரு சுற்றுக் கடைசலின் போது சறுக்க, நானே ஆமை வடிவெடுத்து கடலாழம் புகுந்து மேருவை நேர் செய்து தாங்கினேன். அதன்பின்தான் மேரு நிலை கொண்டு சாியானது என திருமால் மலர்ந்தருளினார்.
அது போதும்!" *"எங்கள் பங்கு அமுதம் எங்கே?"* காலந்தாழ்த்தியது போதும்!" *"அமுதத்தை பங்கிடுங்கள்"* கூச்சலிட்டார்கள்......அசுரா்கள்.
செய்வதறியாது திகைத்தனர் தேவர்கள். திருமாலைத் தேடிப் பரபரக்க அசுரர்களின் செவிகளில் அமுதமாய் கேட்டன சலங்கையொலியை. ஒலி வந்த திசையை நோக்க கண்களில் மோகக் கனல் தீ பற்றின.
தரையிலிறங்கி குளிர்நிலவாகத் தளுக்கி தளுக்கி நடந்து வந்தாள் மோகினியொருத்தி. புதைந்து கிடந்த பேரழகு, புண்முறுவல், சுந்தரவன பொன்னழகு, இவ்வளவும் கண்ட அசுரர்கள் நெஞ்சம் தடுமாறினார்கள் அசுரர்கள். அசுரர்களுக்கு காமப் பித்து பிறந்து உழன்றனர். மோகினியின் மோகப் பாா்வை மட்டுமே அசுரர்கள் கண் முன் நின்றன. அந்தப் பாா்வையினால் மோகினியின் பின்னே நடந்தார்கள் அசுரர்கள்.
'நடமாடும் அமுதமா இதானிருக்க!"........ குடத்திலமிழ்ந்திருக்கும் அமுதமெதற்கு?".......என்றான் அசுரர்களிரொருவன்.
'ஆமாம்!" பேரழகான கனியிதழ்களை காணுங்கள்!" அதில் தேனும் பாலும் கலந்திணைந்திருக்கிறது!" இதைமடுத்து வேறென்ன இனிமை இருக்குதோ?"....என்றான் மற்றொரு அசுரனொருவன்.
கண்கள் போதையாகி, கால்நடை தளரப் பின்ன பின்ன, மயக்கும் பேரழகியின் பின்னால் வரிசை கொண்டு போயினர்.
"அசுரர்களானவர்களே!" நான் வந்திருப்பது உங்கள் பங்கு அமுதத்தை வாங்கித் தரவே.! அமுதம் கிடைக்கும் வரை அமைதி காப்பீா்களாக!" என கிரங்கரிக்கும் குரலில் மோகினி கூறினாள்.
மோகினி ஏற்படுத்திய மாய கிரக்கத்தில் அவ்வசுரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். திருமாலெடுத்த மோகினி வுருவுக்கு மயங்கியவர்கள் அவர்கள் தெளிந்தெழும்வரை இருந்து, பின் தன் மாயத்தோற்றத்தினை விலக்கி தன்னுருவு கொண்டார்.
அமுதக் கலசத்தை மாா்போடணைத்து தன் விருப்பத்தின் வண்ணமே அமுதத்தை அமரர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஆவலாக வந்தவர், ஆலகாலத்தை அள்ளியுண்டு அமரர் குலம் காத்த ஆதிநாதனாம் பரமசிவனுக்கு நன்றி நவில விழைந்தார்.
எப்போதும்போல் தேவதேவர் இருவருடன் தேவர்குலம் முழுவதும் சிவ பூஜை புரிந்து அமுதம் உண்ணும் ஆவலுடன் திரும்பி வந்து பாா்த்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி!!!!!!!!!!,,,
அங்கே......
中中中中中中中中中中中中中
*திருக்கடவூர்.*
*(4)*
中中中中中中中中中中中中中
வாசுகியைக் கொண்டு மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின் உள்ளங்களை கலக்கம் கடைந்தது. அரிதின் முயன்று பெற்ற அமுதக்கலசம் அவர்களின் ஞான திருட்டிக்கும் அகப்படாத எல்லையில் இருப்பது மட்டும் தெரிந்தது.
அதிர்ந்து நின்ற அமரர் தலைவனை அருகே அழைத்தார் அச்சுதன்......."நாம் அவசரத்தில் தவறிழைத்து விட்டோம்...."ஆம்!" நாம் ஆனைமுகனை வணங்க மறந்ததால் வந்த விணையே அமுதக் கலசம் மறைந்து போகக் காரணம்.
இவ்விதம் சொன்னதும் தேவேந்திரனுக்கு சிரிப்பு வந்தது.....'அதலானென்ன? , அவர் தந்தஔயை வணங்கச் சென்றோம் என்று கூறினால் போதுமே! அமுதக் குடத்தை ஆனைமுகன் தந்துவிடமாட்டாரா? என்ன!..என்றார்.
அதிர்ந்து சிரித்தார் அத்துழாய் மார்பன். "நீ கணநாதனை குழந்தையென்று கருதிக் கொண்டிருக்கிறாய். முப்புரங்களை எரிக்கும் முனைப்பில், தன்னை வணங்காமல் புறப்பட்டார் என்பதற்காக சிவபெருமான் சென்ற தேரின் அச்சையே முறித்த அதிதீரர் ஆனைமுகத்தன். அவரை முறைப்படி பணிந்து மன்னிப்புக் கேட்டால் மனமிரங்குவார்."
ஆனைமுகத்தனைத் தேடி தேவர்குழாம் நாடிப் போனார்கள். ஆனைமுகன் கிழக்கு நோக்கி வீற்றிருந்தார். பெருத்த திருவயிற்றுடன் வளைந்த துதிக்கையுனுள் அமுதக் கலசம் பொதிந்து வைத்திருந்ததை யாராலும் கண்டு கொள்ள முடியவில்லை.
'விநாயகா!,......இவ்விடத்தில் கலசமொன்றிருந்ததே! அது எங்கே உருண்டின கூறுங்களேன் என்றார் திருமால்.
அம்மானின் அகடவிகடம் அறிந்திருந்தும் ஏதுமெதும் தெரியாதவர் போல, "என்ன குடம்? என்ன கலசம்?" எனறார் விநாயகன்.
'அடியார்களின் துயர் ஒழிப்பவன் நீ!"....உம் தும்பிக்கையைத் தொட்டுத் துதிக்கும் வரம் வேண்டி தவமியற்றியது தங்கக் குடமொன்று. அதனுள் உள் புகுந்திருக்கும் அமுதம் உன் பிரசாதமே!" அது தேவர்களுக்கு கிடைத்திடின் அதன் பலன் பலமடங்கு பெருகியருளுமே!"
மாலின் சூசகமான ஒளிந்திருந்த நயமான சொற்களைக் கேட்ட விநாயகன் சிரித்த முகத்துடன் துதிக்கையை அவர்கள் முன்னே நீட்டினார். நீட்டிய வளைந்த துதிக்கையில் பொதிந்திருந்த பொன்குடமொன்று பிரகாசத்தோடு பேரொளி பரவ காட்சி தந்தது அமுதக் குடம்.
சங்கடம் போக்கும் சசிவர்ணா! எங்கள்கண் பிழைகள் பொறுத்தருள வேண்டும்! பணிந்து வணங்கிய தேவர்களிடம் கனிந்து அருளாளியிருந்த நாபிக் கமலனை ரசித்து புண்ணகையித்தார் மால், அவர் திருமுன் வந்து நின்று, இதுவரை தீர கணபதியாகவே உன்னை வணங்கி வந்தோம்!", இனிமேல் உம்மை,சோர கணபதியென்றே அழைத்து வணங்குவோம் என்றார்.
*"கள்ள வாரணம்!*
*"கள்ள வாரணம்!* என்று கைகூப்பி தொழுத வண்ணம் அமுத பொன்குடத்தை உச்சி மோந்து சிருசு மேல் வைத்து வணங்கி நீங்கினர் தேவர்கள்.
தேவர்களுக்கு உண்டருள பரிமாறப்பட்ட அமுதத்தை பக்தியுடனும், பேராந்தத்துடனும் வடிந்தொழுக உண்ட தேவர்களை வரிசையாக கண்காணித்துக் கொண்டே வந்த மாலன்....
திடீரென அவ்விடத்தில் தன் பார்வையை அகலாது நிறுத்தினார். அவ்விடத்தில் அதைக் கண்டுவிட்ட அவனின் கமலக் கண்களின் பார்வை அவ்விடத்திலேயே நிலைத்து அகலாது நிற்க, பார்வை மேலும் கூர்மையானது.
அவர் கண்ட அவ்விடத்திலே இரண்டு ஜோதிப் பிழம்புகள் பரந்தாமனுக்கு எதையோ உணர்த்தி விட்டது.
*'அங்கே என்ன நடந்தது?"*
*புதிதாக ஒரு பிரட்சினை உருவானதோ?"*
*யாது.....????????....அது என்ன? *நாளை............பிரட்சினை*
*தெரியும்.*