Announcement

Collapse
No announcement yet.

Thirukadavur temple part 1 to 10 Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukadavur temple part 1 to 10 Continues

    Courtesy:Sri.Kovai G.Karuppasamy


    *திருக்கடவூர்.*
    *(08)*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை நினைத்தேங்கியது. மிருகண்டு முனிவரின் தந்தை மிருக கண்டூயர். அவருடைய தந்தைதான் குச்சகர்.
    கடகம் எனப்படும் திருக்கடவூரில் வாழ்ந்தவர் அவர். தன் மகனுக்கு குச்சகர் இட்ட பெயரென்னவோ கெளச்சிகர்தான். பிரம்மச்சர்யப் பருவத்தில் பிரம்மம் தேடிப் பெருந்தவம் மேற்கொண்டார் கெளச்சிகர். ஊண் மறந்து துயில் மறந்து அசைவிலாத் தவத்திலிருந்தவரைக் கல்லென்று நினைத்து ஆவினங்கள் உரசிப் போயின. அத்தகைய கற்களுக்கு ஆதீண்டு குற்றியென்று பெயர்.
    தன்னைக் கடந்த தவத்திலாழ்ந்த குச்சிகருக்கு, திருமால் தரிசனம் தந்தார். " *"மிருகங்கள் உன்னை உரசிப் போனதால் இனி உன் பெயர் மிருககண்டூயன். சிவபெருமானின் பூரண அருளுக்கு நீ பாத்திரமாவாய்"* என்றருளினார்.
    அடுத்த படிநிலையாகிய இல்லறத்தில் தன் மகனை ஈடுபடுத்த நினைத்த குச்சகர், சோழ தேசத்தில் அநாமயம் எனும் வனத்திடையே ஆசிரமம் அமைத்து அருந்தவ வாழ்க்கை நடத்திய உசத்திய முனிவரின் உத்தமப் புதல்வியாம் விருத்தையை மகனுக்கு மணம்பேசினார். குச்சகர் அநாமயத்தில் தங்கியிருந்த காலத்தில் தோழியருடன் நீராடித் திரும்பும்போது மத யானை துரத்த, புதர் மூடிய கிணற்றில் விழுந்திறந்தாள் விருத்தை.
    குச்சகர் கலங்கிட வில்லை. *"இவளின் மேனியைத் தயிலத்திலிட்டு வையுங்கள். இவளின் உயிரைத் தவம் செய்து மீட்பேன்"* என்று தனியிடம் புகுந்தார்.
    எமனை நினைந்து தவம் புரிந்த குச்சகர் மருமகளின் உயிரை வரமாகப் பெற்றார். தைலமாடிய மயிலொன்று துயில்நீங்கி எழுவதுபோல் எழுந்தாள் விருத்தை. மிருககண்டூயருடன் விருத்தை நடத்திய இல்லறத்தில் பிறந்தவர் மிருககண்டு.
    தவபலமும் அருள்பலமும் இயல்பாக வாய்க்கப் பெற்ற மிருகண்டு முனிவரின் மனைவி மருத்துவ வதி. இவர் முற்கல முனிவர் பெற்ற பொற்கலம். அந்தப் பொற்கலத்தில் பிள்ளைக் கனியமுதம் வேண்டிப் பெருந்தவம் புரிந்தார் மிருககண்டு முனிவர். காசித்திருத்தலம் அடைந்து, கங்கைக் கரையோரம் மணிகர்ணிகையில் ஓராண்டு காலம் தவம்புரிந்த மிருகண்டு முன்னர் சிவபெருமான் தோன்றினார்.
    "மிருகண்டு! உனக்குப் பிறக்கப் போவதோ ஒரு மகன்தான். அவன் திருமகனாய் விளங்க வேண்டுமா?" வெறும் மகனாய் இருக்க வேண்டுமா?" என்பது உன்கையில் இருக்கிறது. வாணாளை வீணாளாய்க் கழிக்கும் பயனிலாப் பிறவியாய், பூமிக்கும் பாரமாய், பக்தி செலுத்தாத பாவியாய், நூறாண்டு வாழும் மகன் வேண்டுமா? சிவபக்தியில் சிறந்தவனாய், சீலங்கள் நிறைந்தவனாய், பதினாறாண்டுகளே வாழ்கிற மகன் வேண்டுமா?"
    மறுவிநாடியே பதில் சொன்னார் மிருகண்டு முனிவர். *"பரமனே! உன் பனிமலர்ப் பாதங்களில் பத்திமை பூண்டு பதினாறாண்டுகளே வாழ்கிற பிள்ளை போதும். மண்டிக் கிடக்கும் முட்புதரை விட, மலர்ந்து மணம்வீசி உன் மேனியில் விழுகிற மருக்கொழுந்து போதும். நெருடி வருத்தும் நெருஞ்சியை விட மலர்ந்து மறைகிற குறிஞ்சி போதும்."*
    கேட்ட வரமருளினார் கண்ணுதற் கடவுள். பயன் மிக்கதொரு பிறவியைத் தருவிக்க அன்று உதவிய திடசித்தம் இன்று தடுமாறியது மிருகண்டு முனிவருக்கு. சிவசிந்தனையும் மூத்தோர் வந்தனையும் உயிரியல்பாய்க் கொண்ட உத்தமச் செல்வன் மார்க்கண்டேயனுக்கு பதினாறாம் அகவை நெருங்கி வந்த தருணம். மருகினார் மிருகண்டுவும், மருத்துவ வதியும்.
    பெற்றோரை உற்று கவனித்து வந்த மார்க்கண்டேயனுக்கோ உள்ளூர மனதில் ஏதோ உறுத்தியது. தன்னை நேரே கண்டால் மகிழ்வதும் தனியிடம் வந்து அழுவதும் அதிகரிந்துக் கொண்டே வருகிறதே!
    தந்தையிடம் திரும்பத் திரும்பக் கேட்டபோது தயங்கித் தயங்கி உண்மையைச் சொன்னார் மிருகண்டு முனிவர். மாா்க்கண்டேயர் முகத்தில் முறுவல் மலர்ந்தது.
    "தந்தையே! உங்கள் பாட்டனார் குச்சக முனிவர் செய்த தவம், மரணமடைந்த உங்கள் அன்னையின் உயிரை மீட்க வில்லையா? பரமன் அருளால் மரணத்தை வெல்வது நம் பரம்பரைப் பழக்கம். கவலை வேண்டாம். இன்று தொட்டு, நூற்றெட்டு சிவாலயங்களை வழிபட்டு சிவப்பரம் பொருளின் அருள்பெற்று தங்களிடம் திரும்முவேன்.".....மைந்தனின் மனவுறுதியில் மகேசனே பேசுவதாய் உணர்ந்தார் மிருகண்டு முனிவர். சிவாலயக் கோயில் சென்று வர மகனுக்கு விடை கொடுத்தனர் பெற்றோர்.
    காசியிலிருந்து புறப்பட்ட மார்க்கண்டேயர் ஒவ்வொரு தலமாய் ஒப்புயர்வற்ற சிவவழிபாடு நிகழ்த்தி, சிவசிந்தனையிலும் சிவதரிசனத்திலும் சித்தம் குளிர்ந்து வந்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர். அன்று மஹா சிவராத்திரி. தன்னுடைய சங்கல்பத்தில் மார்க்கண்டேயர் வந்து சேர்ந்த நூற்றியெட்டாவது திருத்தலமாக திருக்கடவூர் வந்தார்.
    முக்கண் முதல்வனுக்கு மூன்றாம் சாம பூசனையினை மனமுருகிச் செய்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர். மனமுருகி சிவபூஜை செய்து தொழுது கொண்டிருந்த மார்க்கண்டேயரின் செவிகளில் குதிரைகளின் காலடிக் குழம்புச் சத்தம் கேட்டது. எந்நேரமும் சிவத் தியானத்தில் இருக்கும் மார்க்கண்டயரைப் பலமுறை அணுக முயன்று தோற்ற எமதூதர்கள் மீது சினம் கொண்ட கூற்றுவன், தானே சூலாயுதம் ஏந்தி, பாசமும் பற்றி எருமைக்கடா மீதமர்ந்து எரிதழலனைய கண்களில் சினம் கனல சிவசந்நிதி நோக்கி வந்து கொண்டிருந்தான்.
    *"அரும்பரம்பொருளே! அபயம்! அபாயம்!!*
    *ஆலமுண்டவனே! அபாயம்! அபாயம்!!*
    *கருவருவித்தாய்! அபாயம்! அபாயம் !!*
    *கருணை வடிவே! அபாயம்! அபாயம்!!* என்று மார்க்கண்டேயர் அழுதார் .....அரற்றினார்......புரண்டார்.......,,,,,,,
    எமனா?......மார்கண்டேயனுக்கு என்ன,விளைந்தது!....
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    திருக்கடவூர்.
    (5)
    அங்கே பார்த்த பார்வையில் இரண்டு ஜோதிப் பிழம்புகளை அவர் கண்டதும், அவருக்கு எதையோ உணர்த்த பார்வையைக் கூர்மையாக்கினார்.


    சந்திர சூரியரே அந்த சூரியப் பிழம்புகள். இருவருக்குமிடையே ஒரு மாயத்தோற்றம். அமரர் போல் வேடமிட்டுக் கொண்டிருந்தனர்.


    அசுரர்குலத் தோன்றலாகிய ராகுவை அடையாளம் கண்ட மாலன் சிறிதும் தாமதிக்காமல் தன் சக்ராயுதத்தை ஏவினார். தலை துண்டாகித் தரையில் வீழ்ந்தான் ராகு.


    ராகு கீழே விழுந்தானொழிய, அவனுயிர் அவனைவிட்டொழியவில்லை. சக்ராயுதம் தலையைத் தான் பிரித்ததே தவிர அவன் மாண்டு போகவில்லை. காரணம்",...அவன் அமுதம் உண்டருந்தியிருந்தானே!" ஆக அவனுக்கு மரணமேது?...


    வல்லமை மிக்க நாகமொன்றின் தலையைத் துண்டித்து, அதனுடலில் ராகுவின் தலையையும், ராகுவின் உடலில் அந்த நாகத்தின் தலையையும் பொருத்தி விட்டார் மாலன்.


    அமுதத்தை உள்ளீடாய் அருந்தியிருந்த இந்த இருவரே ராகு கேது ஆனார்கள்.


    சந்திர சூரியரை வஞ்சம் தீர்க்க வஞ்சினம் உரைத்து வெளியேறிய ராகு கேதுக்களையே வெறித்துப் பார்த்த மாலன், பால் வீதியை நிமிர்ந்து பார்த்ததும் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையிலோ ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்திருந்தன.


    அமிர்தம் உண்டருந்தி நிமிர்ந்த அமரர்களின் கண்களில் அலையலையாய் மின்னல்கள் ஒளிச்சிதரல்கள் தோன்றின. பக்திப் பெருக்கொண்டு தானாகவே கைகள் உயரெழும்பி தலைமேல் குவிந்தன. அவர்களுக்கான அமுதத்தைத் தாங்கித் தந்த குடம் பூமியுடன் அழுந்தி அழகான லிங்கத் திருமேனியுரு பொலிந்தது. கலகலவென வெங்கல மணியோசைகள். பரபரவென்று பஞ்ச வாத்திய முழக்கங்கள். ஹர ஹர வென சிவாய மந்திரங்கள் மலர்ந்தன. நான்கு மறைகள் நின்று "நமசிவாய" வென முழக்கங்கள் அதிர்ந்தன. பஞ்ச பூதங்களிலும் கலந்தொலித்தது பஞசாட்சர மந்திரம்.


    பிரபஞ்சத்தின் மூலமாய், புரிதல் கடந்த ஞானமாய், ஆலகாலம் உண்ட அமுதமாய், அருவுருவாய் நின்ற அமுத கடேசனை தேவரும் யாவரும் பணிந்தனர்.


    ஹர ஹர சுந்தரம்!"
    "ஹர ஹர சுகானந்தம்" என வாழ்த்தொலி புவனமுழுவதும் வியாபித்தது.


    நெடிதுயர்ந்த செழுஞ்சுடரை நெருங்கி இழைந்த நீலச்சுடர் மாலன் கேட்டார்..............,


    "நாதா!"....... இந்நாடகம் நிகழ்ந்தேற இந்த சம்பவங்களின் தாத்பர்யத்தை நான் தெரிந்து கொள்ள முடியுமா?


    "சியாமளா!"....ஒரு வித்து தன்னை விரித்தோங்கெழும்போது, அது "மா" விருட்சமா வெளிக்கொணர்ந்தாகப்படும். இதுவே நம்முன் ஒரு சம்பவமாக நிகழும்போது, அந்த சம்பவத்துனுள் பொதிந்துள்ள மூல தத்துவம் புலர்ந்து வெளிப்படும். ஒவ்வொரு உயிரிலும் அமுதம் உள்புகுந்திருக்கும். அதை அடைந்து வெளிக் கொணரப்படுவதே பிறவிப்பிறப்பு.


    வாசி வழியாக மேருவாக முதுகெழும்பாகக் கொண்டு கடையப்பட்ட போது வினைக் கட்டுகள் கசந்து நஞ்சாக பிறந்தது. வெளியுடலும் உள்மனமும் இரண்டுக்குமுன்டான உயிர்பாலம் ஒன்றாகப் பொருந்தி ஆமைத்தன்மை ஐம்புலன் அடங்கி உள்முகமாக ஒடுங்கிட அமுதம் உயிரெழும். நாடிகள் அனைத்தும் அமுதம் பெருக உடம்பு அமுதக் குடமானது.


    புலனடக்கத்தின் குறியாய் கூர்ம வடிவெடுத்த மாலன் அமுதம் உயிர்ப்பெற பெருந்துணை புரிந்தார். இந்த வாசியோகத்தின் சூட்சுமம், 'கூர்மநாடி' எனவழைக்கப்படும்.


    ஓங்காரம் ஒற்றை எழுத்தல்ல!. அது பிரபஞ்ச உருவாக்கத்தின் மகாமந்திரம்.


    கணபதியிடம் அமுதக் கலசம் ஒளிந்திருந்தது போல
    *ஓங்காரத்தினுள்ளே அமுதத்தின் ஊற்றுக்கண் ஒளிந்திருப்பதை உணர்த்துவதே கள்ள வாரணத்தின் தாத்பர்யம்.


    அமுதம் நிறைந்த குடம் லிங்கத் திருமேனியாய் வடிவெடுத்த தலம் தான் திருக்கடவூர் என போற்றப் பெற்ற திருத்தலம்.


    பாற்கடல் கடைந்தபோது அமுதம் ஏந்தி சுமந்து வந்த அப்சா, தன்வந்தரியாகத் தோன்றி மருத்துவத்தின் அதிதேவதையாக விளங்கட்டும்.


    பாற்கடலில் வெளிவந்த திருமகள், தன் திருவுளம் கவர்ந்த, மாலனை கரம்பிடிக்க சங்கல்பம் மேற்கொண்டுள்ளாள். திருவாரூர் அருகிலுள்ள திருக்கண்ணமங்கையில் தவம் செய்து மாலை மணம்புரிவாள்.


    கூலினி! தலை மாறிய ராகு, கேதுவுடன் இணைந்து உன்னுடைய அம்சமாகிய துர்க்கையை நோக்கித் தவம் செய்வானாவான். அவளருளால் இருவரும் மனித வாழ்வின் போக்குகளை நிர்ணயிக்கும் ஒன்பது கிரகங்களின் வரிசையில் இரண்டு கிரகங்களாய் இடம் அடையப் பெறுவர். ராகுவுக்கு துர்க்கை அருள் புரிவாள்.


    அபிராமி! ஒவ்வொரு மனிதனும் உள்முகமாய்க் கடைந்து கரைசேரும் தலம் திருக்கடவூர்


    பிறவிக்கடலிருந்து கடைத்தேற்றுவதால் இது திருக்கடையூர் எனவாகும் எனச் சொல்லி முடித்தார் செழுஞ்சுடர் ஈசன்.


    சொல்லி முடித்த சடர்களிலிருந்து சடசவென பொறிகள், பிரபஞ்சத்தின் ரகசிய முதல் இழை பிடிபட்ட பெருமிதத்தில் மேலெழும்பியது. அது நட்சத்திரக் கூட்டத்தின் நடுவே போய் சேர்ந்தது.


    இவ்வளவும் மாலனிடம் ஈசன்சொல்லி முடிக்க......
    அங்கே........
    நான்முகனுக்கும், வேறொருவருக்கும் சலசலப்பு
Working...
X