பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் , . அவதிப்பட்டபோது, தன்னுடைய மருத்துவருக்கு போன் செய்து நெஞ்சுவலி அதிகமா இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார். அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியதுதானேஎன்றார்.
ஷா, "தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை" என்றார். சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார். மாடியில் தங்கியிருந்த ஷாவைப் பார்க்க படியேறிவந்தார்.
ஷாவைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார். அதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.
டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார். ஷா, சிரித்துக் கொண்டே டாக்டரைப் பார்த்து, என்னப்பா டாக்டர் இது? எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே? எனக்கேட்டார்.
அதற்கு டாக்டர் உங்களுக்கு பார்த்த வைத்தியக்குத்தாங்க இந்த ஃபீஸ் என்றார்.
மீண்டும் டாக்டர் சொன்னார்..... போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்.
"எழுந்து நடக்க முடியவில்லை" என்றீர்கள். இப்போ ஓடோடிவந்தீர்கள்.
"உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை" என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க.
"தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு" சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்.....
அப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள்; அதனால் அவை பெரிதாக தெரிந்தன. இப்போ எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது என்றார்.
நண்பர்களே இந்த கலந்துரையாடலில் எத்தனை யதார்த்தம் இருக்கிறது பாருங்கள்.
நம்முடைய கவலைகளையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவை பூதாகரமாகத்தான் தெரியும். பிறரின் கவலைகளையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் முன்பு நம்முடைய கவலைகள் புஸ்வானமாகிப் போகும். இந்த நிகழ்வை படித்தபிறகு நீங்களும் கவலைகளை மறந்தால் மகிழ்ச்சியே.
கவலைகள் மறப்போம். சிறகுகள் விரிப்போம். நன்றி.
(படித்ததில் யோசிக்கவைத்த பதிவு.)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends