Announcement

Collapse
No announcement yet.

details ashtaka sraththam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • details ashtaka sraththam

    Details of ashtaka

    நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது.

    வருடத்தில் இந்த 96 நாட்கள் பித்ருக்களுக்கு பசி எடுக்கும் என நமது முன்னோர்கள் அறிந்து அந்த நாட்களை காட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
    பசியுடன் இருப்பவருக்கு நாம் உடனே ஆகாரம் அளிக்க வேண்டும்.

    கார்த்திகை. மார்கழி. தை. மாசி இம்மாதங்களில் தேய் பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேன்டும் என்கிறது. வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்-321ல்.

    ஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..
    அஷ்டமி திதிக்கு முன் தினமும் பின் தினமும் செய்யவேண்டியுள்ளதால் அஷ்டகை என பெயர் பெற்றது.


    அஷ்டமிக்கு முன் தினம் பூர்வேத்யுஹு என்றும் அல்லது மூன்று நாள் தொடர்ச்சியாக வருவதால் திஸ்ரேஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டிருக்கும். . அஷ்டமிக்கு மறுநாள் அன்வஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் இருக்கும். .

    வைத்தினாத தீக்ஷிதீயம் –சிராத்த காண்டம் புத்தகத்தில் இதற்கான மந்திரங்கள், செய்முறை உள்ளன.
    இதற்கு பண வசதி இல்லாதவர்கள் தர்பணமாவது செய்யுங்கள் என்கிறார்.

    இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் தீர்த்தம் நிறைந்த குடத்தை யாருக்காவது அஷ்டமி அன்று தாநம் செய்யவும் .சிராத்த மந்திரங்களை ஜபம் செய்யுங்கள்; பசு மாட்டிற்கும், காளை மாட்டிற்கும் வைக்கோல். புல் கொடுக்கவும்.

    இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் புல், புதர் இருக்குமிடத்தை தீயிட்டு கொளுத்தி அஷ்டகை செய்யும் சக்தியும், வசதியும் இல்லாததால் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள் என கதறவும்.

    “ந த்வேவ அநஷ்டகா ஸ்யாத்” என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.

    அஷ்டகை சிராத்தம் செய்பவர்கள் குடும்ப வம்சத்தில் குழந்தைகள் அழகு உள்ளவர்களாகவும், அறிவு உள்ளவர்களாகவும். எப்போதும் மிக பெரிய பணக்காரர்களாகவும் இருப்பார்கள் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.

    ஒவ்வொருவரும் அவரவரது ஜீவிய காலத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும்.



    வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் இந்த 12 தர்பணமும் செய்து விடுகிறார்கள்.

    96 தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த 12 தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்
    .
    ஒவ்வொரு வருஷமும் நம் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சாப்படு போட்டு ஹோமம் செய்து சிராத்தமாகவும் செய்யலாம்.
    ---இது இரண்டு விதமாக இருப்பதால் ஏதோ ஒரு முறையில் செய்யலாம்.

    ஸப்தமியன்று மாலை 7 மணி சுமாருக்கு ஒளபாஸனம் செய்யவும். இதே அக்னியில் அபுபம் தயாரிக்க வேன்டும். மாலை 5 மணிக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து தண்ணீர் விட்டு களைந்து நிழலில் ஒரு துணி மேல் உலர விடவும். நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் மாவாக அறைக்கவும். மாவு சல்லடையில் சலிக்கவும். இந்த மாவில்

    சிறிது தயிர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாதிரி இட்டு கொள்ளவும். ஒளபாசன அக்னியில் தோசை கல்லை போட்டு இந்த அரிசி மாவு சப்பாத்தியை தோசைகல்லில் போட்டு இரு பக்கமும் வேக விடவும். இதுதான் அபூபம்.

    இதே ஒளபாசனாக்னியில் மந்திரம் சொல்லி இந்த அபூப ஹோமம். . மீதமுள்ள அபூபத்தை மறு நாள் வரப்போகும் சாஸ்திரிகளை இப்போதே வரசொல்லவும். அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா- 3 பேர். அம்மா, பாட்டி,

    கொள்ளு பாட்டி -3 பேர். விசுவேதேவர் -2 பேர். மொத்தம் -8 பேர். இந்த 8 சாஸ்திரிகளை சப்தமியன்று மாலை 6 மணிக்கே வரசொல்லி. அவர்களை ஆவாஹனம் செய்து இந்த அபூப துண்டுகளையும், கோதுமை மாவு சப்பாத்தி இந்த எட்டு பேருக்கும் தயார் செய்து சட்னியுடன் இலையில் பரிமறவும்..

    அவர்கள் சாப்பிட்ட பிறகு மறு நாள் காலை 10 மணிக்கு அவர்களை வரசொல்லவும். தக்ஷிணை தாம்பூலம், பழம் கொடுத்து அனுப்பவும்.
    கர்த்தா, கர்த்தாவின் மனைவிக்கும் இதே தான் ஆகாரம். .இன்று இரவு.

    மறு நாள்அஷ்டமி அன்று காலை 10 மணிக்கு இந்த எட்டு பேர் வந்தவுடன் எண்ணைய், சீயக்காய் கொடுத்து வெந்நீர் போட்டு கொடுத்து ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன். முதல் நாள் இரவு ஆவாஹனம் செய்த வாரே

    மறுபடியும் ஆவாஹனம் செய்து ஒன்பது ஐந்து வேட்டி துண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பாடு போட்டு சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
    இன்று சமாராதனை சமையல், ஒரு வாழை இலை போதும்..

    8 பேர் வைத்து சிராத்தம் செய்ய பண வசதி இல்லாதவர்கள் அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர்; விசுவேதேவர் ஒருவர் என மூவர் வைத்தும் செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருக்கிறது.

    .மறு நாள் நவமி அன்று வேறு ஐந்து சாஸ்திரிகள் வரச்சொல்லி எண்ணய் ஸ்நானம் செய்து புது ஒன்பது ஐந்து வேட்டி வாங்கி கொடுத்து சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.

    நவமி அன்று அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர், அம்மாவின் பெற்றோர் வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர், மஹா விஷ்ணு ஒருவர் என ஐந்து பேர். .

    இதற்கு மஹா விஷ்ணுவிற்கும் ஒருவர் அவசியம் வர வேண்டும். ஹோமம் அப்பா வர்க்கம் -6 ஹோமம் வழக்கம்போல். பிறகு தாயின் பெற்றோர் வர்கத்திற்கும் 6 ஹோமம் உண்டு. விகிரான்னம் உண்டு.

    பிண்ட ப்ரதானமும் தாய் தந்தையருக்கு 6; அம்மாவின் தாய் தந்தைக்கும் 6 மொத்தம் . காருண்ய பித்ருக்களுக்கு -6 என 18 பிண்டம்
    .
    இன்று சிராத்த சமையல் அவரவர் வீட்டு வழக்கப்படி, இரு வாழை இலைகள்.. மஹா விஷ்ணு விற்கு இலை மாத்திரம் போட்டு பரிமாறும் வழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் மஹாவிஷ்ணுவிற்கு ஒரு சாஸ்திரிகள் அவசியம் வர வேண்டும்.

    மற்றொரு விதம்;- இரு கைகளாலும் தயிர் ஹோமம் செய்வது. ததி ஹோமம்.

    ஸப்தமி அன்று எதுவுமில்லை. அஷ்டமி அன்று காலையில் தயிர் ஹோமம் ஒளபாசானாக்னியில் செய்து விட்டு நவமி அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம், சாப்பாடு போட்டும் நிறைவு செய்யலாம்.

    அஷ்டகா தர்ப்பணம் முதலில் இரு நாட்களும் செய்து விட்டு பிறகு தான் சிராத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.. ஞாபகமாக இதை வைத்து கொள்ளவும்.
    .
    இ3ந்த மூன்று நாட்களிலும் ஒளபாசனம் தினமும் செய்ய வேண்டும்.. மூன்று நாட்களிலும் ஒளபாசன அக்னி அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    அல்லது தினமும் விச்சின்னாகினி ஹோத்ரம் செய்து பிறகு ஒளபாசனம் செயது அந்த அக்னியில் சிராத்த ஹோமம் செய்ய வேண்டும்.

    ரிக் விதான மந்திரம் ஒன்று உள்ளது. இதை நூறு முறை சொல்ல வேண்டும்.

    நான்கே வரிகள் தான். இந்த தர்பணம், ஹோமம் செய்யும்போது ஏற்படும் குறைகளை சரி செய்யும்.. ருக் வேத மந்திரம் ஆதலால் சரியாக உச்சரிக்க
    வேண்டும். .அஷ்டகம் 1, 53, 4 ஏ பிர் த்யுபிர் என்று ஆரம்பிக்கும்.. ருக் வேத சாஸ்திரிகளிடம் இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு சொல்லலாம்.
    .
    http://www.tamilbrahmins.com/showthread.php?t=31675


    you can get sankalpam mantras for astaka, thiஸ்restaka and anvashtaka. you can see these astaka days in your paampu panchangam/,

    also you have to do daily sandhyavandhanam and gayathri japam.
Working...
X