Announcement

Collapse
No announcement yet.

Thirukadavur temple part 1 to 10 Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukadavur temple part 1 to 10 Continues

    Courtesy:Sri.Kovai G.Karuppasamy


    திருக்கடவூர்.
    (07)
    いいいいいいいいいいいいいい
    வாயிலருகில் வந்து நின்று கொண்டான் நான்முகன்.


    "என்ன சுவாமி!" நந்திகேசுரர் வேலையை நான்முகனுக்குக் கொடுத்து விட்டீர்களா?" உமையவள் ஈசனிடம் கேட்க...,,,,


    "இல்லை,தேவி!, எனக்குப் பக்கபலமாக நிற்பவர்கள் பஞ்ச நந்திகள். யானவன். உன்னையும் என்னையும் பூவுலகிற்குச் சுமந்து செல்லும் பணியை இந்திரன் வேண்டி நந்தி வடிவெடுத்தான். அவன் போக நந்தி யானவன். ஒவ்வோர் உயிருமே நந்தியின் அம்சமென்பதை உணர்த்தும் விதமாக பிரதோஷ திருநாளில் பூசை பெற்று என் ஆலயக் கொடி மரங்கள் அருகே நிற்பது ஆன்ம நந்தி யானவன்.


    திரிபுறங்கள் எரிக்கக் கிளம்பிய போது மாலன் என் வாகனமாய் வந்தார். மைத்துனக் கேண்மையால் மனம் விரும்பி வந்தவர் மால்விடையாய் விளங்குகிறார். ஊழி முடிவில் உயிர்களெல்லாம் என்னில் அடங்கிய பின்னரும் உடனிருக்கும் இடபமாகிய நந்திகேசன் தரும நந்தி யானவன். உபதேசம் பெறும் விருப்பத்துடன் என்னைச் சுமக்க சித்தமாய் இருக்கும் நபீஜனாகிய நான்முகன் பிரம நந்தி யானவன் என்றார் ஈசன்.


    பிரம்ம நந்தியின் பணிவிடை துவங்கியது. நாழிகைப் பொழுது போல் நாட்கள் நகர்ந்தன. பிரமனுக்குப் பெருமான் உபதேசிக்கும் நாள்தான் கனிந்து வரவில்லை. சரியான நேரம் பார்த்து சக்திலீலை துவங்கியது.


    "எல்லாம் சாிதான் பிரபு!" உங்களை குருமூர்த்தியாய் வணங்க வந்துள்ள பிரம்மா திரிமூர்த்திகளில் ஒருவரல்லவா?" அவருக்கு உபதேசம் செய்ய இன்னும் காலம் தாழ்த்தலாமா?" நான்முகனுக்கு பரிந்துரை செய்தாள் உமையவள்.


    உமையே!" பக்குவம் வரும் வரை பொறுத்திருப்பேன் நான்!. நீயோ" பரிவுகாட்டி அவசரப் படுத்துகிறாயே!" என செல்லச் சினுங்களுடன் சொன்னார் சங்கரன்.


    "நாயகியின் ஆணைக்கு மறுப்பேதுமுண்டோ?" சாி என்ற ஈசன், நான்முகனை வரச் சொல்!" என்றார். நந்திகேசனை ஏவினார் நம்பீசன். வந்து நின்ற நான்முகன் கரங்களில் கைநிறைய எதையோ அள்ளித் தந்தார் பெருமான்.


    "சதுர்முகனே!" இவை வில்வ விதைகள். எந்தத் தலத்தில் இதை விதைத்தபின் ஒரு முகூர்த்தத்துக்குள் முளை விடுகின்றனவோ, அந்தத் தலத்தில் யாம் உமக்கு உபதேசிப்போம்." எனக்கூறி விடை கொடுத்தனுப்பினார் நான்முகனுக்கு பெருமான்.


    ஒவ்வொரு தலத்திலும் விதையூன்றிப் பார்த்தான் வாணிகாதலன். முகூர்த்தப் பொழுதுகள் கரைந்தொலிநத்தேயொழிய விதை முளை விடும் அறிகுறி தென்படவேயில்லை. தற்காக அவன் மனம் தளரவில்லை. எப்படியும் ஒரு நாள் தன் விருப்பம் நிறைவேறும் என்ற எண்ணத்தோடு தலங்கள் கடந்து வந்த நான்முகனின் பாதங்கள் திருக்கடவூர் எல்லையைத் தொட்டன.


    "மந்திரோபதேசம் கேட்ட பிரம்மாவின் கைகளில் மகா வில்வ விதைகள் கொடுத்த மர்மமென்னவோ?" ....சிப்புடன் கேட்டாள் உமை.


    கொன்றைவார் சடையான் இதழ்களிலோ குமிழ்சிரிப்பு. "என்னை நோக்கி தவம் செய்யும் போதெல்லாம் வில்வம் கொண்டு அருச்சிக்கும் வழக்கத்தை வழங்கியவள் நீதானே! வித்தகி! உலகிலுள்ள தாவரங்களிலே எனக்கு மிகவும் உகப்பானது வில்வமே.


    வில்வ இலைகளிலுள்ள மூன்று முகங்கள், என் *மூன்று கண்களையும், என் கரத்திலுள்ள திரிசூலத்தையும், மூன்று காலங்களையும் உணர்த்துபவை. மும்மூர்த்திகளையும் வில்வத்தின் வடிவில் தரிசிக்கலாம். நந்திகேசனுக்கு ஒரேயொரு வில்வத்தை அர்ப்பணித்து வணங்குபவர்களின் பாவங்கள் நீங்கும். ஆயிரம் யானைகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். நூறு வேள்விகள் நடத்துவதில் கிடைக்கப்பெறும் பலாபலன் உண்டாகும்.
Working...
X