Shivalinga made of one special stone
Ramakrishnan: உலகிலேயே 🕉 🏼🕉 🏼 கட்டளைக்
-----------------------------------------
கல்லால் ஆன ஒரே
-----------------------------------
சிவலிங்கம் !!!
--------------------------
கட்டளைக் கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி !!!
அருள்மிகு நீலகண்டர் திருக்கோயில்,கும்பல்கர்க் கோட்டை வளாகம், உதயப்பூர், இராஜஸ்தான்.
கட்டளைக் கல் என்றால் ....
****************************
பொன் உரசும் கல்தான் கட்டளைக்கல்..
சங்க இலக்கியங்களில்,திருக்குறள் உட்பட பல நூல்களில் இந்த சொல் பயின்று வருகிறது.
தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து,தரத்தைக் காணும் கல்தான் கட்டளைக்கல்.[பொன் உரசும் கல்.]
இந்த கட்டளைக்கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி, கும்பல்கர்க் கோட்டை வளாகத்தில்,
அருள்மிகு நீலகண்டர் திருக்கோயிலில் உள்ளது.
சிவப்பரம்பொருளின் கருணையின் திரு வடிவமாக விளங்குகின்ற நஞ்சுண்ட அவரின் திருநீலகண்டத்தின் நிறம் போலவே ,
அடர் நீலநிறக்கல்லால் அமைந்த சிவலிங்கத்திருமேனி இது.
பீடம்,ஆவுடையார்,பாணம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரே கட்டளைக் கல்லால் அமைக்கப்பட்ட ஆறு அடி உயரத் திருமேனி இது.
[ Neelkanth temple is famous for it's monolith Shiva Linga and is one of the attraction within Kumbhalgarh fort. 6 feet shiva lingam is made out of the a single Kasoti stone. ]
கி.மு. 1458 ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில்,
நான்கு புறமும் இறைவனைக் காணும் வகையிற் கட்டப்பட்ட சர்வதோபத்ர கோயில் ஆகும்.
[The unique temple has entrance from four directions making it Sarvatobhadra temple.]
வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆன்மிக தாகம் கொண்டோருக்கும் அற்புத அனுபவத்தைத் தரும் தலம் இந்த கோட்டை..
கும்பல்கர்க் கோட்டை இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும்.
15 ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது.
உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு,
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது..
கும்பல்கர் கோட்டை பதின்மூன்று சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
பதினைந்து அடி தடிமன் கொண்ட கோட்டைச்சுவர். நாற்பதடி உயரம்.
அதன் முகப்பில் பிரம்மாண்டமான நீர்த்தாழிகளை வரிசையாக வைத்தது போல வளைவு வளைவாக நிற்கின்றது.
கனத்த கருங்கற்களால் ஆன கோட்டை
இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராக கருதப்படுகிறது.
மேலும் இந்தக் கோட்டையில் மகாராணா பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.
ராணா பிரதாப் சிங் அங்குதான் பிறந்தார்.
ஆகவே அது ராஜபுத்திரர்களுக்கு ஒரு புனிதத் தலம்போல.
கும்பல்கர் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே முக்கியமான ஊராக இருந்திருக்கிறது.
சமண நூல்களில் சொல்லப்படும் மாமன்னரான சம்பிரதா அந்த ஊரில் ஆயிரம் சமணக்கோயில்களைக் கட்டியதாகக் கல்வெட்டுகள் சொல்கின்றன.
பின்னர் அந்நகரம் அழிந்தது.
ராணா கும்பா அங்கே நூற்றியெட்டு சமணக் கோயில்களை மீண்டும் கட்டினார்.
சிவன் காளி விஷ்ணு கோயில்களையும் கட்டினார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends