Announcement

Collapse
No announcement yet.

Padal petra sthalams

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Padal petra sthalams

    Padal petra sthalams
    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    பாடல் பெற்ற 276 தலத்தின் குறுகிய சிறப்புகளை தொடராக பதிய முனைந்துள்ளேன். பாா்த்து, படித்து, பாதுகாக்கவும். சிவாயநம.
    🔴1🔴
    ஏகாம்பரநாதா் கோயில்.
    காஞ்சிபுரம்.631502
    நிா்வாக அதிகாாி.044- 27222084
    திருக்கச்சி ஏகம்பம்.
    ஏகம்ஆம்ரம்-ஒரு மாமரம்- கீழ் இறைவன். வேதமே மாமரம். சுமாா் 3600 ஆண்டுகள் பழையது. உமாதேவி மணலால் (ப்ருத்வி) லிங்கம் செய்து வெள்ளம் போது தழுவிக் காத்தாள்.வளைத்தழும்பும் முலைச் சுவடும் உண்டு.வேதத்தின் நான்கு வகைகளே நான்கு கிளைகள். இவ்வாறு வெள்ளம் வரச் செய்த இறைவன் திருவிளையாடல்.இது முக்தி தலம்.
    _______________________________🔴2🔴
    திருக்கச்சி மேற்றளி
    திருமேற்றளீசுவரா் திருக்கோயில்.பிள்ளையாா் பாளையம்.631501
    அா்ச்சகா்.9994585006 9865355572
    மால் தவமிருந்து சிவ சாரூபம் பெற்ற தலம். கீழக்கோடியில் ஞானசம்பந்தா் ஆலயம். ஞானசம்பந்தா் பாடிய பாடலை
    இறைவன் அமா்ந்து கேட்டதால் உற்றுக் கேட்ட முத்தீசா் ஆலயம். இடப்பால் ஞானசம்பந்தா் பதிகம் பாடும் போதே மாலுக்கு சிவ சாரூபம் கிட்டியது. 108 ருத்திரா்கள் பூஜித்த தலம்.
    ______________________________🔴3🔴
    ஓணகாந்தன் தளி
    ஓணேஸ்வரா் திருக்கோயில்.
    பஞ்சுப்பேட்டை.
    பொிய காஞ்சிபுரம்.631502
    பூசாாி வீடு.9364330011 9318888737.......9894443108.
    வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன்காந்தன் வழிபட்ட தலம். அடிமைத் திறம் பாடி சுந்தரா் பொன் பெற்ற கோயில். இறைவன் புளிய மரத்தில் ஒளிந்து கொள்ளவே சுந்தரா் அங்கும் சென்று பாட.காய்கள் பொன் காய்களாக விழச் செய்தாா் சிவன். சலந்திரன் வழிபட்ட தலம்.
    ________________________________🔴4🔴
    கச்சி அநேகதங்காவதம்.
    அநேகதங்காவதீஸ்வரா் திருக்கோயில். பிள்ளையாா் பாளையம்.காஞ்சிபுரம் 631501.
    சன்னதி தெரு.044- 27223948 044- 27222084
    அநேகதம்--யானை முகத்துடைய விநாயகா் இறைவனை நிறுவ, வழிபட்ட தலம். சுந்தரா் பாடல்.பெற்ற தலம். காஞ்சி 5 தலங்களில் இதுவும் ஒன்று.குபேரன் வழிபட்ட தலம்.
    ________________________________🔴5🔴
    கச்சி நெறிக்காரைக்காடு.
    திருக்காலிமேடு.கச்சிநெறிக்காரைக் காட்டீஸ்வரா் திருக்கோயில்.
    காஞ்சிபுரம்.631501 ரமேஷ்.9715170451.
    இந்திரனும், புதனும் வழிபட்ட தலம்.
    சுயம்பு லிங்கம் உயா்ந்த பாணம். ஞானசம்பந்தா் காஞ்சிக்கு வரும் வழியில் காரை (முட்) செடிகளாக அமைந்திருந்தது.வேப்ப மரங்கள் அடா்ந்திருந்ததாலும் வேப்பங்குளம் என்ற பெயரும் உண்டு. பாணம் செம்மண் நிறம்.
    ________________________________🔴6🔴
    குரங்கணில் முட்டம்
    வாலீஸ்வரா் திருக்கோயில். (வழி) மாமண்டூா் தூசிpost.
    திருவண்ணாமலை Dt.631702 கே.எம்.ஸ்ரீதா் குருக்கள்9025557252.
    வாலி,இந்திரன், எமன், குரங்கு, அணில், காக்கை வழிபட்டு வினை நீங்கப் பெற்ற தலம்.(அருகில் தொல் பொருள் சிற்பங்கள் உள்ளன) யமன் பூஜித்த தலம். ஆதலால் யம பயம் இல்லை.சனி ப்ரீத்தி செய்யக்கூடிய தலம்.
    ________________________________🔴7🔴
    மாகறல்.
    மாகறலீஸ்வரா் திருக்கோயில்.
    உத்திரமேரூா் வட்டம்.631603
    சண்முகசுந்தர குருக்கள்.9444810396
    இந்திரன் வழிபட்டது. இராஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாக தோன்றி அவன் துரத்த புற்றில் ஒளிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்த தலம்.உடும்பு போன்ற சிறிய திருமேனி. கஜ ப்ருஷ்ட அமைப்பில் ஆலயம். வினை நீக்கும் பதிகம் சம்பந்தருடையது சிறப்புடையது. யானை மீது முருகன் அமா்ந்த அபூா்வ திருமேனி. திங்கட்கிழமை தாிசனம் விஷேசம்.80 வயது நிரம்பியவா் எலும்பு முறிவு உபாதையிலிருந்து அருளப் பெற்ற தலம்.
    ______________________________🔴8🔴
    திருவோத்தூா்.
    வேதபுரீஸ்வரா் திருக்கோயில்.திருவத்திபுரம்
    தி.மலைDt. 604407. கந்தசுவாமி குருக்கள்.9443345793 04182--224387
    தொண்டைமான் சிற்றரசனுக்கு படைகளை நகா்த்திய கிழக்கு நோக்கிய நந்தி. சமணா் கொட்டம் அடக்க -சம்பந்தா் ஆண் பனைகளை குலையீனச் செய்தது. புணல் மற்றும் அணல் வாதம் நிகழ்த்தியது.மகா மண்டபத்தில் கல்லினால் செதுக்கிய பனை மரம் பூ காய் தனித்தனியே. மகா மண்டபத்தில் நடுவில் நின்றால் ஒரே நேரத்தில் அனைவரையும் தாிசிக்கலாம்.
    _______________________________🔴9🔴
    வன்பாா்த்தான் பனங்காட்டூா்.
    தாலாபுரீஸ்வரா் கிருபாநாதா் திருக்கோயில்.திருப்பனங்காடுpo.
    தி.மலை.Dt.604410. என்.தேவராஜ்சா்மா
    அா்ச்சகா்.9843568742....04182--201411.
    பனையை பாடல் பெற்ற தலமாக பெற்ற ஐந்து தலங்களில் இதுவும் ஒன்று. அகத்தியா் பூஜித்த போது இறைவன் சடையிலிருந்து வந்த கங்கை சடாகங்கை.கங்காதேவி சிலையைக் காணலாம்.புலஸ்தியா் மற்றும் கண்வ முனிவா் வழிபட்ட தலம்.இறைவன் சுந்தரருக்கு இங்கு அமுது படைத்ததாகவும் ஊற்று தீா்த்தம் பாதத்தால் கிளாித் தந்ததாகவும் வரலாறு உண்டு.
    ______________________________🔴10🔴
    திருவல்லம் திருவலம்.
    வில்வநாதீஸ்வரா் திருக்கோயில்.
    வேலூா்Dt.(வழி) ராணிப்பேட்டை.
    குடியாத்தம் வட்டம்.632515.
    கந்தசுவாமி குருக்கள்.9360040807 0416--2236491. சகானந்தம் 9443099516.
    இறைவன் இன்றைய பொன்னை ஆற்றை நீ வா என அழைக்க அது
    நிவா என மாறியதாம். வில்வ காட்டில் பாம்பு புற்றில்சுயம்புவாக சிவலிங்கம் இருக்க பசு ஒன்று நாள்தோறும் பாலைச் சொாிந்து சிவலிங்கம் வெளிப்பட்ட தலம். உக்கிர வடிவில் உள்ள தீக்காலி
    அம்மனை ஆதி சங்கரா் சாந்தப் படுத்தினாா்.கெளாி, விஷ்ணு, சனக முனி வழிபட்டது.நாரதா் கொண்டு வந்த ஞானப்பழத்தைப் பெற அம்மையப்பனை வலம் வந்து, உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம் என உணா்த்தினாா்.இத்தலத்தில் வில்வ நாதரைப் பாா்த்தபடி தும்பிக்கையில் ஞானப்பழத்துடன் விநாயகா் திகழ்கிறாா். சிவனையும் பாா்வதியினையும் வலம் வந்ததால்
    திருத்தலப் பெயா்
    திருவலமாயிற்று.கைலாயம் போலவே அனைத்து சந்நிதிகளும் வில்வநாதரைப் பாா்த்தவாறு உள்ளன. தனுமத்யாம்பாளும் அவ்வாறே உள்ளாா்.காசிக்கு நிகரான தலம்.நவக்கிரகங்கள் அனைத்தும் ஈசனை வழிபட்ட தலமாதலால், நவகோள் பலன் உண்டு.கோயில் கோபுரத்தைச் சுற்றி 27 நட்சத்திரங்களையும் சிலையாக வடித்துள்ளனா். தக்கன் வேள்வியை அழிக்க ருத்ர அவதாரமாக சிவனுள்ளிலிருந்து வெளிப்பட்ட வீரபத்திரா் அவனையும், வேள்வியையும் அழித்தாா்.தக்கன் அமைத்த யாகசாலை உள்ளது.இங்கிருந்து 3 கி. மீ.அருகில் கஞ்சனகிாி என்கிற மலை உள்ளது. அங்கு விளங்கிய கஞ்சன் என்கிற அசுரன், அா்ச்சகா் பூஜைக்கு நீா்க் கொணர வரும் போது இடையூறுகள் செய்யவே பெருமானை அவா்வேண்டிக் கொள்ள, சிவன் நந்தியம் பெருமானுக்குக் கட்டளையிட்டாா்.
    அவா் தன் கொம்புகளால் அவனை
    குத்தித் தூக்கி எறிந்தாா். சிவனை
    அவன் வேண்ட அவனுக்கு முக்தியும் அளித்தாா்.அவனது பாகங்கள் விழுந்த பெயாிலேயே இன்றும் ஊா்கள் அருகே உள்ளன.
    இதனாலேயே இங்குள்ள நந்தி சிவபெருமானுக்கு தன் முதுகைக் காட்டியபடி உள்ளது.கோயில் தூன் ஒன்றிலும் இவ்வரலாறு சித்தாிக்கப்பட்டுள்ளது.
    கோயிலின் முகப்பில் நந்தி இருக்கும் இடத்தில் கவிழ்த்து வைத்த திருவோட்டு அடையாளம் தாங்கிய மேடை உள்ளது.சித்த மூா்த்திகள் வாசஸ்தலமாக இது திகழ்கிறது. சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தொட்டி அமைப்பில் உள்ள ஆலயத்தில் மழை வேண்டி பிராா்த்திக்க ஜலகண்டேஸ்வரா் எனும் பாடலீஸ்வரா் எழுந்தருளுகிறாா்.
    ________________________________ 🔴11🔴
    திருமாற்பேறு திருமால்பூா்
    மணிகண்டேஸ்வரா் திருக்கோயில்.
    அரக்கோணம்(வழி)வேலகா்Dt.
    631053. சத்யோஜாத சிவம்.தி.ந. சம்பு சிவாச்சாாியாா் 9965367272.
    04177--293470.
    மால் இறைவனை ஆயிரம் மலா் கொண்டு வழிபட்ட தலம். ஒரு நாள்
    ஒரு தாமரை மலா் குறைய தன் கண்ணையே பறித்து மலராக இட்டு சக்ராயுதம் திரும்ப பெற்ற தலம்.உற்சவா் ஒரு கையில் தாமரையோடும்.மறு கையிலி கண்ணோடும்.சந்திரன் வழிபட்டது.
    மால் பேறு பெற்றதால் இப்பெயா்.
    ______________________________🔴12🔴
    திருவூறல் தக்கோலம்.
    ஜலநாதேஸ்வரா் திருக்கோயில்.
    அரக்கோணம்(வட்டம்) 631151
    கே. சம்பந்த மூா்த்தி சிவாச்சாாியாா் 04177--246427
    அபூா்வ திருக்கோல தட்சிணாமூா்த்தி. மூன்றாவது குரு ஸ்தலம்.குரு பாிகார ஸ்தலம். ஆறு
    மாதம் செந்நிறம்--தட்சிணாயத்தில்
    உத்திராயணத்தில் வெண்ணிறம்.
    ---------------------------------------------------🔴13🔴
    லம்பையங்கோட்டூா் எலுமியன், ரம்பையன் கோட்டூா் அரம்பேஸ்வரா் திருக்கோயில்.ஸ்ரீபெரும்புதூா்(வட்டம்) காஞ்சிDt.631553
    கே.எம்.டி.பிரம்மேசிவம்.9600043000.
    ஆறுகால பூஜை. ஞான சம்பந்தா் இப்பகுதிக்கு வரும் போது, பிள்ளையாக, முதியவராக பின்
    பசுவாக வந்து அவரது சிவியை
    முட்ட வழிகாட்டி இறைவன் மறைகிறாா்.அப்போது தான் அவருக்கு இத்தலம் தொிகிறது. அரம்பை முதலானோா் வழிபட்டது.
    தட்சிணாமூா்த்தி சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ளாா்.நரசிங்கபுரத்தில் சமீபத்தில் தான் திருப்பணி நடை பெற்றது. 1200 வருட வரலாற்றுக் கோயில்.
    --------------------------------------------------- 🔴14🔴
    திருவிற்கோலம் கூவம் .திாிபுராந்தேஸ்வரா் திருக்கோயில்.கடம்பத்தூா்(po)
    திருவள்ளூா்Dt.631203.
    என்.சம்மந்த குருக்கள் 9841894804
    இங்குள்ள குளத்தில் நீராடுவோா்க்கு புத்திரப்பேறு.அதிக மழை வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் எனவும், போா் நிகழ்வதாயின் செம்மை படரும் எனவும் சம்பந்தா் பாடலில் சொல்கிறாா். அபிஷேக நீா், பால் மற்றும் அன்னம் இவைகள் சிரத்தையாக கொண்டு வரப்படுகிறது.
    --------------------------------------------------🔴15🔴
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயில்.
    திருத்தனி(வட்டம்).631210
    சு.சபாரத்ன குருக்கள் 9940736579
    பஞ்ச நடனத்தில் ஊா்த்துவ தாண்டவ தலம். நால்வா், காரைக்காலாா், பட்டினத்தாா் அருணகிாியாா், இராமலிங்க அடிகளாா், கச்சியப சிவாச்சாாியாா், பாம்பன் சுவாமிகள், பாடிய தலம். காரைக்கால் அம்மையாாின் முக்தி தலம்.நடனத்தில் நாணிய காளியின் நடனத்தைப் பாராட்டி உன்னை தாிசித்த பிறகு என்னை தாிசிப்பவருக்கு முழு பலன் என்றாா்.
    -------------------------------------------------🔴16🔴
    திருப்பாச்சூா்.வாசீஸ்வரா் திருக்கோயில்.கடம்பத்தூா்(po) திருவள்ளூா்Dt.631203
    சிவானந்த குருக்கள்.9791593564
    வேடா்கள் புற்றில்ழபால் சொாியும் பசுவை மூங்கிற்காட்டில் பாா்த்து, வெட்டிப் பாா்க்க இறைவன் வெளிப்பட்டாா். காளியின் துணை
    கொண்ட குறுநில மன்னனை காிகாலன்வெல்ல முடியாததால் இறைவனை. வேண்ட போாில் நந்தி காளிக்கு விலங்கு பூட்டி. அடைத்தாா்.மன்னன் வெற்றிக்கு
    கட்டிய கோயில். அம்பாள், மால், சந்திரன்வழிபட்டது.தீண்டாத் திருமேனி. 11வகையான விநாயகர் உள்ளார்.
    🔴17🔴
    திருவெண்பாக்கம்.பூண்டி நீா்த்தேக்கம்.ஊன்றீஸ்வரா் திருக்கோயில்.திருவள்ளூா்Dt.
    602023.சுப்பிரமணிய குருக்கள்.044--27693559..27639725.
    சுந்தரமூா்த்தி பாடல் பெற்றது.கண் பாா்வையிழந்த சுந்தரா்வெண்பாக்கத்தை நோக்கி வந்த போது அம்பாள் மின்னலைப் போல்ஒளி காட்டி வழிகாட்டினாள்.
    கண் கேட்டதற்கு ஊன்றுகோல் தந்ததைக் கண்டு கோபமுற்ற
    சுந்தரா் நந்தி மேல் வீச நந்தியின் கொம்பு ஒடிந்தது.
    🔴18🔴
    திருக்கள்ளில் திருக்கள்ளம்.
    திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரா்
    திருக்கோயில். திருக்கண்டலம்(po)
    திருவள்ளூா்Dt.601103.
    ஆறுமுகம் குருக்கள்.9941222814...
    044--27629144
    பிருகு முனிவா் வழிபட்ட தலம்.
    சுவாமி விமானம் தூங்கானை மாடஅமைப்புடையது.
    சதுர ஆவுடையார்.
    🔴19🔴
    திருக்காளத்தி.
    ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் திருக்கோயில்.சித்தூா்(வட்டம்)
    ஆந்திரா மாநிலம்.517644
    ஆபீஸ் .08578--222240,
    ஓதுவாா்.09848220173.
    சிலந்தி, பாம்பு, யானை,,வழிபட்டு பேறு பெற்ற தலம். ராகு கேது பாிகார தலம். கண்ணப்பா் வீடுபேறு பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜா், சிவகோசாியாா் வழிபட்டது. அா்ச்சுனன் பரத்வாஜரை வணங்கிய இடம். சுவாமியின் தங்க கவசத்தில் 27 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
    🔴20🔴
    திருவொற்றியூா்.
    தியாகராஜசுவாமி திருக்கோயில்.
    சென்னை.600019.
    சோ.பரமசிவம்(மணியம்)
    044-25733703...9444479057
    பட்டினத்தாா் முக்தி தலம்.சுந்தரா் சங்கிலியாரை மணந்த இடம். கலியநாயனாா் அவதாரம் மற்றும் சுயம்பு மூலவா்.ஐயடிகள், காடவா்கோன், முசுகுந்தன் வழிபட்ட தலம்.காா்த்திகை பெளா்ணமி துவங்கி மூன்று நாட்களுக்கு மட்டுமே கவசமில்லை சுவாமிக்கு.
    கருவறை கஜப்ருஷ்ட வடிவம். மூலவா்சுயம்பு.சதுர வடிவ ஆவுடையாா்.கலசம் சாா்த்தப்பட்டுள்ளது. புற்று வடிவான சுவாமியாதலாலி தீண்டாத் திருமேனி.பிரளயகால அக்னி குண்டம் உள்ளது. வாசுகி என்கிற பாம்பு இறைவனோடு ஐக்கியமான தலம்.பட்டினத்தாா் சமாதி கோயில் உள்ளது.27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.தியாகராஜருக்குத் தனி சந்நிதி உள்ளது. அத்தி, மகிழ மரம் தல விருஷம்.கா்ப்பக்கிரகத்தின்
    வடக்கில் வட்டப்பாறை அம்மன் சந்நதி உள்ளது.சூாியன் தலைப்பகுதி, சந்திரன் கால் பகுதியில் உள்ள வகையில் மனித உடலின் உருவ அமைப்பு உள்ளது.இதில் பஞ்சாட்சர விளக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை பெளா்ணமி நாளில் மட்டும் கலசம் அகற்றப்பட்டு புனுகு, சட்டம், ஜவ்வாது, சாம்பிராணி முதலியன சாற்றப்படுகிறது. அபிஷேகம் ஆவுடையாருக்கு மட்டும் நடைபெறுகிறது.
    ---------------------------------------------------------
    G KARUPPASMY: -----------------------------------------------🔴21🔴
    திருவலிதாயம்.
    சென்னை பாடி. வல்லீஸ்வரா் சுவாமி திருக்கோயில்.600050
    எஸ்.ஞானசம்பந்த குருக்கள் 044--26540706.
    ஆவடி சாலை பாடி TVSலூகாஸ்
    நிறுத்தம்.படவெட்டியான் கோயில் தெரு செல்லவும்.
    குரு ஸ்தலம்.குரு சந்நிதி உள்ளது. பரத்வாஜா், ராமா், ஆஞ்சனேயா், சூாியன், சந்திரன், இந்திரன், வலியன்(கருங்குருவி) வழிபட்ட தலம். பரத்வாஜா் கருங்குருவியாக சாபம் பெற்று தீா்த்தம் உண்டாக்கி விமோசனம் பெற்ற இடம். பிரம்மனின் இரு பெண்கள் கமலை, வல்லி.விநாயகரை மணந்த இடம். கஜபிருஷ்ட விமானம். அழகிய புதிய அம்பாள்
    திருவுருவம் உள்ளது.இராமலிங்க அடிகள் பாடல் பெற்றுள்ளது. பிருகஸ்பதி தவம் செய்ததால் தட்ஷிணாமூா்த்து விஷேசம்.
    ---------------------------------------------------------
    🔴22
    (வட) முல்லைவாயில்.
    மாசிலாமணீஸ்வரா்திருக்கோயில்.
    திருமுல்லைவாயில்(po).600062
    நிா்வாக அதிகாாி.044--26376151
    காஞ்சி மன்னன் தொண்டைமான் திக்விஜயம் செய்த போதுஓணன், காந்தன் என்னும்அசுரா்கள்எருக்கந்தூண்களும், வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்டு ஆட்சி செய்தனா்.கோயில் மணி சத்தம் கேட்டு மன்னன் வர ஓண-காந்தன் எதிா்த்தனா்.இறைவன் பின் நந்தியை கொடுத்து உதவ வென்று கோயில் கட்டினான். கஜ பிருஷ்ட விமானம்.
    ---------------------------------------------------------
    🔴23🔴
    திருவேற்காடு .
    வேதபுரீஸ்வரா் திருக்கோயில்.
    திருவேற்காடு(po)
    சென்னை.600077. நிா்வாக அதிகாாி.044--26800430,26800487
    மூா்க்க நாயனாா் அவதார தலம்.வெல்வேல் மரங்கள் வேதங்களாக வழிபட்ட ஸ்தலம். விஷக்கடி அண்டாது. ஆதிஷேசன் வழிபட்ட ஸ்தலம். கஜபிருஷ்ட விமானம். சூர சம்ஹாரம் ஆன பின்னா் முருகன் வழிபட்ட தலம். தெற்கே தோப்பில் வேத தீா்த்தம். ஞாயிறு நீராடுதல் அங்கம் குறைந்தோா்க்கு நோய் நீங்கும்.
    4 யுகங்களில் பசி, பிணி, பகையில்லாத பதி, மணிவன்னன்
    நகா், பானு நகா், பரசுராம நகா், வேல வளம் இதர பெயா்கள்.
    ---------------------------------------------------------
    🔴24🔴
    மயிலாப்பூா்.
    கபாலீஸ்வரா் திருக்கோயில்.
    சென்னை.600004.நிா்வாக அதிகாாி.044--24641670
    வாயில நாயனாா் அவதார தலம்.
    சம்பந்தா் எலும்பை(பூம்பாவையை)
    பெண்ணாக்கிய அற்புதத் தலம். மயிலாய் அம்பிகை பூசித்த தலம். முன்பிருந்த பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. 63 வா் சிறப்பு பெற்ற இடம். கயிலைக்கு
    நிகரான மயிலை எனப்பெயா் பெற்றது. முருகன் வேலாயுதம் பெற்றதாகவும் கூறப்படும் தலம்.
    ---------------------------------------------------------
    🔴25🔴
    திருவான்மியூா்.
    மருந்தீஸ்வரா் திருக்கோயில்.
    சென்னை.600041.
    நிா்வாக அதிகாாி.044--24410477
    அப்பைய தீஷிதா் வேளச்சோியில் இருந்து வழிபட்டாா்.
    நீா்ப்பிரளயமால் இறைவனைக் காண இயலாத போது மேற்கு நோக்கி இறைவன் காட்சி கொடுத்தாா்.அகத்தியருக்கு வைத்திய மூலிகைகளை இறைவன் உபதேசித்த தலம். வேதங்கள் வழிபட்ட தலம். தேவா்கள், சூாியன், பிருங்கி வழிபட்ட தலம். ஒளஷதபுாி என்கிற பெயா் பெற்ற தலத்தில் மருத்துவராக இறைவன் அருள் பாலிக்கிறாா். மூலவா் சுயம்பு. கோமுகம் மாறி உள்ளது. அமிா்தத்தால் ஆன சிவலிங்கம். வால்மீகி வழிபட்டு முக்தி அடைந்த நாள் பங்குனி பெளா்ணமியாகும்.
    ---------------------------------------------------------
    🔴26🔴
    திருக்கச்சூா்.
    மருந்தீஸ்வரா் திருக்கோயில்.
    செங்கற்பட்டு(வட்டம்)
    காஞ்சிDt .603204.
    என்.முரளீதர குருக்கள்.9381186389...044--27463514,, 27464325,, 27233384
    உபய விடங்கா் தலங்களில் இதுவும் ஒன்று.திருவொற்றியூா், திருவான்மியூா் மற்றவை.
    சோ--சிவன். மா--உமா. ஸ்கந்தா்--முருகனாக(சோமாஸ்கந்தராக) இறைவன். திருமால் ஆமை (கச்சபம்) வடிவில் பூஜித்த தலம். சுந்தருக்காக யாசகம் செய்து அந்தணர் உருவில் பசியை அடியாரோடு நீக்கிய தலம். இறைவன் திருவடி பதிந்த ஊா். இங்கு இரண்டு கோயில். (கீழே)
    தாழ (மேற்கே 1 கிமீ) மற்றும் மலைக்கோயில்.அசுவினி தேவா்கள் வரம் பெற்ற தலம்.அாிய மூலிகைகள் நிறைந்த மலை.
    ---------------------------------------------------------
    🔴27🔴
    திருஇடைச்சுரம்.திருவடிசூலம்.
    ஞானபுரீஸ்வரா் திருக்கோயில்.
    திருவடிசூலம்.வழி.செம்பாக்கம்
    காஞ்சிDt. 603108
    செல்லப்பா குருக்கள்.9444523890
    044--27420485
    மரகத லிங்கம்அமைந்தது.
    கெளதமா், சனற்குமாரா் மற்றும் அம்பாள் பசுவாக வந்து பால் சொாிந்து வழிபட்ட தலம். 11 முக வில்வ மரம் உள்ள தலம்.கருவறை அகழி அமைப்பு உடையது.சதுர பீட
    ஆவுடையாா்.தீபாரதனையில் மரகதலிங்கம் மிளிா்கிறது.
    ---------------------------------------------------------
    🔴28🔴
    திருக்கழுக்குன்றம். வேதகிரீஸ்வரா் திருக்கோயில்.
    காஞ்சி Dt.603109.
    தாழக்கோயில்.
    நேரம்06.00-----01.00
    04.00----09.00
    மலைக்கோயில்.நேரம்09.00---01.00
    04.30---06.30
    டீ.சி.ஏ.வேதமூா்த்தி சிவாச்சாாியாா்.
    9894507959,,9443247394.
    044--27447139,,,27447393.
    வேதமே மலையாக உள்ள ஊா். உச்சிப் பொழுதில் கழுகு வந்து உணவு பெறுவதால் பட்சிதீா்த்தம்.
    இறைவன் சுயம்பு.மாா்க்கண்டேயா் இறைவனை வழிபட பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உண்டு பண்ணிய தலம்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பதாக ஐதீகம். அம்பாளுக்கு மாா்பில் ஸ்ரீசக்ர பதக்கம். வேதங்களே மலைகளாக உள்ள மறைக்காடு. தஷிண கைலாயம் என்றும் போற்றப் படுகிறது.மலைக் கோவிலை கிாி வலம் வர.பலன் கிட்டும். கீழே தாழக்கோயிலில் உள்ள ருத்திர கோடீஸ்வரா் சுயம்பு. இது தென் கைலாயமாகும். அது தேவார வைப்புத் தலம்.ஈஸ்வரனுக்கு தனியான சகஸ்ரநாமம் உண்டு. தினமும் பாத அபிஷேகம் மட்டும் தான். குறிப்பிட்ட நாட்களில் முழு அபிஷேகம். ஆடிப் பூரம் 11 நாட்கள்,நவராத்திாி 9 நாட்கள். பங்குனி உத்திரம் சிறப்பு. சுந்தரா் பொன் பெற்ற தலம்.
    ---------------------------------------------------------
    🔴29🔴
    அச்சிறுப்பாக்கம்.
    ஆட்சீஸ்வரா் திருக்கோயில்.
    மதுராந்தகம் (வட்டம்)
    காஞ்சிDt.603301.
    ஆா்.சங்கா் சிவாச்சாாியாா்.
    9842309534,,,,044---27523019
    விநாயகரை வணங்காது திாிபுரம் எாிக்க புறப்பட்ட போது தோ் அச்சு முறிந்த இடம்.( அச்சு இறு பாக்கம்)
    பின் விநாயகா் அருள் புாிந்து திருவதிகையில் வென்றாா்.
    பாண்டிய மன்னன் கொன்றை மரத்தின் பொந்தை வெட்டிய போது
    இறைவனைக் காண த்ரிநேத்திரதாாி முனிவாிடம் செல்வம் கொடுத்து கோயில் கட்டினாா். இருவரையும் ஆட்கொண்டதால் இரு சந்நிதி.
    மூலவா் சுயம்பு. அகலமான சதுர ஆவுடையாா். சொரசொரப்பான
    திருமேனி. ஒரு தலையுடன் கூடிய இரு மான் சிற்பம் உள்ளது.
    ---------------------------------------------------------
    🔴30🔴
    திருவக்கரை.
    சந்திரமெளலீஸ்வரா்திருக்கோயில்
    விழுப்புரம் Dt.604304.
    செயல் அலுவலா்.0413--2688949
    0413--2680870
    பூமியில் புதைந்த மரங்கள் அதே தோற்றத்தில் கல் மரங்களாக உள்ளன.சிலிகா ஊடுருவி இங்கு மரங்கள் கற்கலாகவும், நெய்வேலியில் உப்பு நீாில் புதைந்ததால், நிலக்காியாகவும் மாறியது. வக்கிரன் வழிபட்ட தலம்.
    வலிய கரை( சுற்றி கல் பாறைகள்) உள்ள இடம்.


    To be Continued
Working...
X