***சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
いいいいいいいいいいいいい
*( 02 )*
பேரூர் தலத்தைப் பற்றி திருப்புகழ் பாடியவர்கள் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் ஆகியோராவர்.
கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பும் திராவிடக் கட்டடக்கலை கல்வெட்டுகளாக ஒளிர்கிறது.
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதென அறியலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அமைத்தவர்
கரிகால் சோழன்
பேரூர் பட்டீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கிறது.


இக்கோயில் கோவை மாநகரில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம்.
தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்+ ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி, ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இக்கோயில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில்
சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலதில் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்டன. பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டனதையும், பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை சோழப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.
இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.
ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து இருந்தார். இதை அறிந்த
திருமால் காமதேனுவை
அழைத்து "நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று
பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக" என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததார். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.
அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை வந்து அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றானபட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.
பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். "பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் கன்றின் குளம்படித்
தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்" என்று ஆறுதல் கூறினார்.
"இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்" என்று அருளினார்.
இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் பட்டிக் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம். இந்நிகழ்வின் காரணமாக இக்கோயிலில் இருக்கும் இறைவன் பட்டீசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.
கிழக்குப் பார்த்த கோயிலில் முதலில் காணப் பெறுவது இராஜகோபுரமாகும். இக் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. சுதை வேலைப்பாடு உள்ளவை. இராஜ கோபுரத்தையடுத்து உள் புகுந்தால் இருபுறத்திலும் தூண்களில் சிறந்த சிற்பங்களைக் காணலாம்.
அரக்கியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வரும் அனுமன்,
ஏகபாததிரி மூர்த்தி,
கொடி பெண்கள்,
இடக்கை டோல ஹஸ்தம்,
வலக்கைப் பூ கொண்ட அம்மை,
முதலிய சிற்பங்கள்.
மண்டப கருங் கல்லாலான மேற்கூரையில் அறுபத்துமூவர் நாயன்மார்கள் வரலாறுகளை ஓவியமாகத் தீட்டியுள்ளார்கள்.
வெளிப் பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் நிருதி விநாயகர் இருக்கிறார்.
வெளிப்பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் சொா்க்க வாசல் மேற்குப் பார்த்த முகமான வாயிலைக் கொண்ட மண்டபம் விளங்குகிறது.
அதனையடுத்து வடக்குப் பகுதியில் மேற்கு நோக்கி தண்டபாணி சந்நிதி.
தென்புறத்தில் விசாலாட்சி ஆலயம். வலது புறத்தில் விசுவநாதர் ஆலயம். வெளிப்பிரகார வடகீழ்த்திசையில் யாக சாலை மண்டபம் உள்ளது.
வடகிழக்கு மூலையில் ஞான பைரவர் தெற்கு நோக்கி நின்ற கோலம் கொண்டுள்ளார். பேரூர் தலம் முக்தித் தலமாதலால் ஞானபைரவருக்கு நாய் வாகனம் கிடையாது.
பெரிய மண்டபத்தையடுத்து, இடபத்தின் கொம்பினால் ( சிருங்கத்தால்) நிலத்தில் ஊன்றியதால் அவ்விடத்தில் சிருங்கத் தீர்த்தம் உண்தானது.
மண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் இருபுறமுள்ளனர். இவர்களின் அனுமதியுடன் உள்ளே செல்ல, மகா மண்டபம் வருகிறது. அடுத்து அர்த்த,மண்டபம்.
அர்த்த மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் கருவறையை தொடர்ந்து மனோன்மணியம்மை செப்புத் திருமேனி உள்ளது.
நடராச பெருமான் தூக்கிய திருவடியின் நேர் நோக்கிய நிலையில் துர்க்கையின் திருவுருவம் அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
இத்திருக்கோயிலின் முன்புறம் தெப்பக்குளம் மிகவும் அழகான முறையில் பதினாறு வளைவுகளுடன் அழகோ அழகு.
*திருச்சிற்றம்பலம்.*
*காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்*
*கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல் ஏறே*
*பாட்டூர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே*
*மாட்டூர் அறவா மறவாதுன்னைப் பாடப்பணியாயே!*
--சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
いいいいいいいいいいいいい
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends