Announcement

Collapse
No announcement yet.

Poosalar naayanar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Poosalar naayanar

    Poosalar naayanar


    *மனக்கோயில் செய்த மாமனிதர்*
    திருநின்றவூர் காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ளது. அது ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தமிழகம் பல்லவர்களின் சீர்மிகு ஆட்சி கண்டு கொண்டிருக்கும் காலம்
    பூசலார் என்னும் மறையவர் இறைவன் பால் மிகுந்த அன்பும் காதலும் கொண்டு அவனுக்கு ஒரு கோயில் கட்ட எண்ணுகிறார்
    ஆனால் பொருள் இல்லை ஒரு ஆலயம் செய்வது என்றால் சாதாரணமா?? பெரும் பொருட் செலவில் ஒரு ஆலயம் செய்வது என்பது அவருக்கு மிகப் பெரிய காரியம்!! ஆனாலும் அவர் சோர்ந்து விடவில்லை
    *முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே*
    என்று அப்பரடிகள் பாடி இருக்கிறாரே!!
    மனத்தில் உறையும் இறைவனுக்கு மனத்திலேயே கோயில் மனதாலேயே கட்டுவோம் என்று முடிவு செய்கிறார்
    பூசலார் நாயனார்.
    மனக்கோயில் என்பது ஒரு விந்தையான விஷயம்
    மனம் என்பது காற்றை விட வேகமானது அதனால் எதையும் பொறுமையாக செய்ய முடியாது
    உதாரணமாக மனதில் ஒரு கோயில் கட்டலாம் என்று நினைத்து பாருங்கள்!!
    அடுத்த நொடியே தஞ்சை பெரியக் கோயிலை விட ஒரு பெரியக் கோயிலை மனம் கட்டி விடும்
    இதுதான் மனத்தின் வேகம்
    அடுத்த நொடிய வேகமாக கட்டியக் கோயில் இங்கு அடுத்த நொடியே காணமலும் போய்விடும் இதுதான் நம்முடைய மனம்
    ஆனால் பூசலார் அப்படி கட்டியவர் அல்ல
    *புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி ஒன்றும் அங்கு உதவாதாக; 'உணர்வினால்' எடுக்கும் தன்மை*
    என்று பாடுகிறார் சேக்கிழார்
    பூசலார் இறைவனது கோயிலை கற்பனைக் கோட்டையாக நினைத்து பார்க்கவில்லை
    உணர்வால் எடுத்தார்
    சிந்தையால் எடுத்தார் மனதால் எடுத்தார்
    நம்மால் நினைப்பதற்கும் இயலாத செயல் இது
    மனத்தால் கட்ட எண்ணிய கோயிலுக்கு மனதாலேயே பொருள்கள் சேர்க்கிறார்
    *மனத்தினால் கருதித் எங்கும் மாநிதி வருந்தி் தேடி*
    என்கிறார் சேக்கிழார்
    மனதிலேயே உழைத்து பொருள் தேடுகிறார்
    *நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் திணைத்துனை முதலாத் தேடி சிந்தையால் திரட்டிக் கொண்டார்*
    திணையளவு தேவையான பொருளைக்கூட முதலில் மனத்தால் திரட்டுகிறார் பூசலார்.
    பிறகு
    *சாதனங்களோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி கங்குற் பேதும் கண் படாது எடுக்கலுற்றார்*
    கல் மண் மரங்கள் போன்ற சாதனங்கள் வாங்குகிறார்
    கல் தச்சர்களை போய் சந்திக்கிறார்
    அவர்களிடம் பேசி இரவு நேரத்தில் கூட கோயில் பணி செய்யும் பொருட்டு ஒப்பந்தம் பேசி
    கோயில் கட்டுகிறார்
    அதிசயமாக இவை அனைத்தும் மனதிலேயே நிகழ்கின்றன
    *சிகரந்தானும் முன்னிய முழத்திற் கொண்டு நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவில் செய்தார்*
    அதாவது மனக்கோயிலை அவர் ஒரே நாளில் மனதால் நினைத்து கற்பனையாக கட்ட வில்லை
    உண்மையாகவே கோயில் கட்ட எத்தணை நாள் ஆகுமோ அத்தனை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக கோயிலை மனதால் கட்டிக் கொள்கிறார்
    அதற்கு கொடி மரம் வைக்கிறார் கோபுரம் கட்டுகிறார் குளம் வெட்டுகிறார்
    *கோயிலும் சூழ் மதிலும் போக்கி வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து*
    கோயிலுக்கு என்னென்ன இன்னும் வேண்டுமோ!! எல்லா வற்றையும் பல நாட்களாக செய்த அதே வேளையில் அவர் மனதால் குடமுழுக்குக்கு குறித்த அதே நாள்
    அந்நாட்டை ஆண்ட மன்னவராம்
    *காடவர்கோன் கழற்சிங்கர் என்னும் மூன்றாம் நந்தி வர்ம பல்லவரும்*
    இறைவனுக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்ய நாள் குறித்துள்ளார்
    பெருஞ்செல்வம் அங்கு அழிக்கப் படுகிறது *காஞ்சி கைலாச நாதர் கோயில்* என்று வரலாற்றில் பலகாலம் நீடிக்கப் போகும் அந்த கோயிலை
    *காடவர் கோன் கச்சிக் கற்றளி எடுத்தும் உற்ற மாடெலாம் சிவனுக்காய் பெருஞ் செல்வம் வகுத்தல்* செய்கிறார்
    அக்கோயிலுக்கும் பூசலாரின் மனக்கோயில் தேதியிலேயே குடமுழுக்கு நாள் குறிக்கப் பட்டுள்ளது
    பலகாலம் யாகசாலை பூசைகள் நடந்து முதல் நாள் இரவும பிரமாண்டமாக யாகசாலை பூசைகள் நிகழ்கின்றன
    பூசையை முடித்துக் கொண்டு விடிந்தால் கும்பாபிசேகம் காணும் ஆவலுடன் பலவித கற்பனையுடன் மன்னவர் உறங்க செல்கிறார்
    *நாட மால் அறியாதவர் தாபிக்கும் அந்நாள் முன்னாள்; ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவு இடை கனவில் எய்தி*
    கும்பாபிசேத்திற்கு முதல் நாள் இரவு இறைவன் இப்படிச் சொல்கிறான்
    *நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம்*
    என்னுடைய அன்பனான திருநின்றவூர் பூசலார் எடுத்த கோயிலுக்கு நாளைக்கு நான் போகனும்
    *நீ இங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்*
    அதனால் நீ வச்சிருக்குற கும்பாபிசேகத்த வேற ஒரு நாள் வச்சிக்க
    *என்று கொன்றை வார் சடையார் கோயில் கொண்டு அருளப் போனார்*
    என்று இறைவன் கனவிடை வந்ததை காட்சி செய்கிறார் சேக்கிழார்
    இங்கு இறைவனது பெருங்கருணையை பாருங்கள்
    பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்தவன் அவன்
    உலகம் முழுதும் ஒரே நேரத்தில் பூசனைகள் நிகழ்ந்தாலும் ஏற்கக்கூடிய வல்லமை படைத்த வல்லவன்
    அடியவர் ஒருவரின் பெருமையை புலப்படுத்தும் நோக்கில் கனவில் வந்து
    *நான் அங்க போறேன் உன் விசேசத்துக்கு வர முடியாது*
    என்று தன்னுடைய அளவை, பெருமையை அடியவர்க்காக குறைத்து சொல்லும் பெருமையான இடம் இது.
    மன்னவர் துடித்து எழுந்து அன்று இரவே சேனை பரிவாரங்களுடன்
    திருநின்றவூர் செல்கிறார்
    எங்கே பூசலார்?? எங்கே பூசலார்?? என்று தேடுகிறார்
    கும்பாபிசேகத்திற்கான எந்த அடையாளமும் அவ்வூரில் இல்லை
    அவ்வூர் மறையவர்கள் அனைவரையும் அழைத்து பூசலார் என்பவர் யார்??
    என்று விசாரிக்க அவர் ஒரு பரதேசி மாதிரி திரியக்கூடிய அந்தணர்
    ஊருக்கு வெளியே இருப்பார். என்று அழைத்து செல்கிறார்கள்
    அந்த மண்டபத்தில் பூசலார் கண்கள் மூடி அமர்ந்திருக்க,
    மன்னவர் பக்தியுடன் கரம் கூப்பி அருகே சென்று
    *தொண்டரை சென்று கண்டு மன்னவன் தொழுது நீர் இங்கு எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயந்தான் யாது??*
    என்று வினவுகிறார்
    கண்களை திறந்த பூசலார் குழம்புகிறார் மருளுகிறார் நாம் கோயில் கட்டுவது இவருக்கு எப்படித் தெரியும்? என்று எண்ணுகிறார்
    *இங்கு அண்டர் நாயகரை தாபிக்கும் நாள் இன்று, என்று உம்மைக் கண்டு அடி பணிய வந்தேன்*
    நீங்க கட்டிய கோயிலுக்கு இன்னைக்கு குடமுழுக்காமே!!
    அதான் உங்களை பணிய வந்தேன்
    *கண்ணுதல் அருளப் பெற்றேன்*
    நீங்கள் கோயில் கட்டிய செய்தியை முக்கண் உடைய இறைவனே எம் கனவில் சொல்லினார்
    என்றார் மன்னவர்
    *என்ன??!! இறைவனா?? இறைவனா!! யாம் கோயில் கட்டுவதை கூறினான்??*
    *என்னையும் ஒரு பொருட்டாக என் இறைவன ஏற்றுக் கொண்டானா??*
    *என் மனக்கோயிலைக் கூட அவன் பெரிதாக எண்ணுகிறானா??!!*
    *நாடாளும் மன்னவரை என்னை தேடி வர வைத்திருக்கிறானா??*
    என்று அழுகிறார் புரள்கிறார் சென்னிமேல் கரம் கூப்பி வணங்கிறார்
    பிறகு தாம் கட்டியது மனக்கோயில் என்பதை விரிவாக விளக்கி மன்னவருக்கு குடமுழுக்கையும் மனதாலேயே தரிசனம் செய்விக்கிறார் பூசலார்
    நாடாளும் மன்னவர் அந்த நாயன்மாரது கால்களில் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து வணங்கி வலம் வந்து
    தாம் கட்டிய கற்றளிக்கும் குடமுழுக்கு செய்விக்கிறார்
    அக்கோயில் கல்வெட்டு ஒன்று மூன்றாம் நந்தி வர்ம பல்லவரை *கலியுகத்தில் வான் ஒலி கேட்டவன்*
    என்று இறைவன் கனவில் வந்ததை வரலாற்றில் பதிந்துள்ளது
    நாம் மனதால் நினைக்கும் செயலனைத்தும் இறைவன் அறியாமல் நடக்காது
    பெரும் பொருளை விட பெரும் அன்பே இறைவனுக்கு பெரியது.
    தொண்டர் பெருமையை புலப் படுத்த இறைவன் எந்த நிலைக்கும் இறங்குவான் என்பதற்கு பூசலார் நாயனாரின் புராணம் இன்றும் சான்றாக அமைந்துள்ளது
    நமசிவாய 🏻
Working...
X