Announcement

Collapse
No announcement yet.

Perur temple part3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part3

    Perur temple part3
    ***சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *( 03 )*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    திருப்பேரூர் திருக்கோயிலில் கனக சபையை திருமலை நாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் கட்டினான்.
    1625 முதல் 1659 வரை 34 வருடங்களாகக் கட்டப்பட்டன.
    கனகசபையில் பிரம்மா, திருமால், அதிஉக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் நடனமாடியது போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார். இறைவன். அதனால்தான் இத்தலம் மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.
    இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயாில் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம்.
    கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான எட்டு சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள் அமைந்துள்ளன.
    அதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை, அதற்கும் அடுத்தாற்போல குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதானதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தனவாகவும் காணப்படுகின்றது. அதற்கடுத்து தாண்டினால் சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜர் அவரோடு சிவகாமியம்மையுடன் அழகு அருளாகக் காட்சியளிக்கின்றனர்.
    நடராஜரின் மண்டபத்தை நான்கு வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம்.
    சற்று நன்றாகத் தூண்களை கவனித்துப் பார்த்தோமானால், அத்தூண்கள் யாவும் இறைவனுக்கு பணிந்த நிலையில் தூண்கள் சற்றே சாய்ந்த நிலையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
    ஆனந்த தாண்டவமாடும் இறைவன் இடதுகையில் அக்னி, வீசுகிற ஹஸ்தம், வலதுகையில் உடுக்கை, அபயஹஸ்தம் ஆடி அடங்கப்போகும் நிலையில் தூக்கிய திருவடிகூட சற்றே தாழ்ந்த நிலையிலுள் காட்டியருள்வார். சடையும் தாழ் சடையாக காணப்படுகின்றது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களான கன்னங்களைக் வணங்கி கிள்ளிப் பணியத் தோன்றும்.
    ஆனால், அது நம்மால் முடியாது! ஒரு வேளை எம்பெருமானை அனுதினமும் ஆராதித்து பூசை புணர்மானம் செய்யும் அர்ச்சகருக்கு வேனுமானால் அருளாகலாம் எனத் தோன்றுகிறது.
    முயலகன் மீது ஊன்றிய திருவடிவில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை மிளிர்கிறது.
    சபாபதி, அழகிய திருச்சிற்றம்பல நாதர், கூத்தப்பிரான் என்பவை நடராஜரின் வேறு பெயர்களாகும்.
    சிவகாமி அம்மையார் வலதுகையில் நீலோத்பவ மலரோடு இடதுகை டோலஹஸ்தம கொண்டு் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றாள்.
    திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் இங்கும் சிறப்பாக நடக்கும்.
    இந்த கனகசபையின் நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாக இருப்பதால், சிறப்புத்தாண்டவ தலங்களில் இதுவும் ஒன்றாகவும் கூறப்படுகிறது.
    இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே இருப்பதை கூர்ந்து நோக்க வேண்டும்.
    சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையை உருவாக்க மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை இருபத்தெட்டு வருடங்களாக அரும் பாடுபட்டு செய்தவர் கம்பனாச்சாரி ஆவார். கனகசபையில் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் முப்பத்தாறு தூண்கள் உள்ளன.
    சிற்பங்கள் அனைத்தும் செய்து முடித்தபின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
    செய்யப்பட்டுள்ளது. மன்னர், கம்பனாச்சாரியாரோடு ஏராளமான பொதுமக்களும் கோவிலுக்குள் வந்து கம்பனாச்சாரியாரின் சிலைகள் ஒவ்வொன்றையும் முன்னோட்டமாக வரிசையாக பார்வையிட்டு வந்தார்கள்.
    *"சிலையைப் பாராதீர்"* பலமாக.......க..த்...தி...னா...ன்.
    அப்படி தொடர்ந்து ஒவ்வொரு சிலைகளின் கலை நயத்தையும் பருகிக்கொண்டே வந்த மன்னர், கம்பனாச்சாரி, மற்றும் பொதுமக்கள் ஆகியோரையும் ஒரு பெருத்த குரலொன்று தடுத்து நிறுத்தியது.
    *"ஆம்! அப்படியென்ன?" நடந்தது!"........ அந்தக் குரலுக்குரியவன் யார்?" அந்தக் குரலுக்கும், அந்த குரல் கொடுத்த இளைஞனுக்கும் ஏன்?" இவர்கள் பதைபதைத்து நின்றார்கள்.*
    *" நாளை"*
    திருச்சிற்றம்பலம்.
    *திருப்பேரூர் திருக்கோயிலில் திகைக்க வைத்த குரலுக்குரியவன் ஏன் கத்திக் கூச்சலிட்டான்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள்,இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X