***சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
いいいいいいいいいいいいい
*( 04 )*
☘ *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
いいいいいいいいいいいいいい
திருக்கோயில் திருப்பணிகள் சிற்ப வேலைப்பாடுகள் இருபத்தெட்டு வருடங்களாக நடந்து வந்தது. கும்பாபிஷேக நாள் குறிக்க வேண்டியதிருப்பதால் திருப்பணிகள் கட்டிட சிற்பகங்களின் பணிகள் விரைவாக முடுக்கி விட்டிருந்தனர்.
இதற்காக செய்விக்கப்பட்டிருந்த சிற்பங்களை பார்வையிட மன்னன் கமபனாச்சாரியாரோடு ஏராளமான ஊர் பொது மக்களும் வரிசையாக பார்வையிட்டு வந்து ஒவ்வொரு சிலையின் கலை நயத்தையும் பார்வையிட்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில்தான் ஒரு இளைஞனின் கத்திய குரலொன்று கேட்க, சிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பார்வை விலகி குரல் வந்த திசையை நோக்கினார்கள்.
அங்கே, இவர்களை நோக்கி நடுத்தர வயதுடைய இளைஞனொருவன் வந்தவன், இங்கேயிருக்கும் இரண்டுபக்க குதிரை வீரன் தூண்களில் ஒன்றில் ஒரு பகிகத்தில் குறையொன்று உள்ளது. எனவே அத்தூணை நிர்மாணத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் கூடாதென்றான்.
"நீ யார்? இக்குதிரை வீரன் சிலையில் குறையுளதென உனக்கெப்படித் தெரியும். நான் சிற்ப சாஸ்திரத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவன். என் வாழ்நாளில் சிற்பங்களில் குறைகொண்ட சிலை ஒன்றேனும் வடித்ததில்லையென கம்பனாச்சாரியார் கூறினார்.
"குறையுளது! வீரன் அமர்ந்திருக்கும் குதிரைவீரன் சிலையின் ஒரு பக்கத்தில் குறையை நான் உணர்த்திக் காட்டுகிறேன் என ஆவேசப்பட்டான் அவ்விளைஞன்.
இளைஞன் குரலை உயர்த்த ஆவேசமாகப் பேசியது, கம்பனாச்சாரியாருக்கு என்னவோ போலாகி விட்டது. என்னடா இவன்' என் அனுபவம் இவனுக்கு வயசாகக் கூட இருக்காது! இவன் என் சிற்பத்தில் என்ன குறையைக் கண்டிருப்பான் பார்த்து விடலாமென நினைத்து,...........
'சரி! குறையை நீ நிருபித்துக் காட்ட வேண்டும்!.. தவறினால் உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நான் விளைவேன் என்று சொன்னார்.
"தாரளமாக! இதோ நிருபிக்கிறேன்! சந்தனமும் உளியும் கொண்டு வரச் செய்தான். சந்தனத்தை எடுத்து குதிரை வீரன் சிலையில் பூசி மெழுகினான். கொஞிசம் நேரம் பொறுத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டான்.
குதிரைவீரன் சிலையின் மீது பூசிய சந்தனமனைத்தும் சிறுது நேரத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தவிர, மற்ற இடத்திலுள்ள சந்தனமைத்தும் உலர்ந்து போயிருந்தது. உலராத சந்தனம் இருந்த இடத்தினை மட்டும் விலக்கிவிட்டு, மற்ற இடங்களிலிருந்த சந்தனத்தை நீக்கிய அஞ்ஞிளைஞன், உளியை எடுத்து கம்பனாச்சாரியாரின் கைகளில் கொடுத்தவன், 'இதோ! இந்த உலரா நிலையிலுள்ள இடத்தில்தான் குறையுண்டு. உளியினால் இவ்விடம் கொண்டு உடையுங்களென்றான் இளைஞன்.
கம்பனாச்சாரியாரும் இளைஞன் சுட்டிய இடத்தில் ஓங்கித் தட்டினார். அதிகமாக உளிக்கு வேலையில்லை. இரு அடிகள் வாங்கிய அத்தூணின்கண் உள்ள அவ்விடத்திலிருந்து கொட்டாங்கச்சி அளவில் கல் பெயர்ந்து விழ........ கல்தூணின் உள்ளிருந்து குபுக்-கென தேரையொன்று வெளியே குதித்தோடிப் போனது.
(இதுதான் கல்லுக்குள் தேரை. சிற்ப வல்லுணர்களுக்கு சிற்ப சிலைகள் வடிக்க எப்படிப்பட்ட கற்பாறைகள் தேவையென அவர்கள் அறிவார்கள். அதுபோலவே தேரையிருக்கும் கல்பாறையையும் அச்சிற்ப வல்லுணர்கள் அறிவார்கள். )
முழுமையாக சிற்ப சாஸ்திரம் கற்றுவிட்டோமென்றிருந்த கம்பனாச்சாரியாரின் ஆளுமை பணிந்தன. முகம் முன்னின்றிருந்த யாரையும் காண மறுத்து தலை கவிழ்ந்தார். அவர் கைகளிலிருந்த உளி விடுதலை பெற்று நிலத்தில் கல்லில் பொத்தென விழுந்து சினுங்கியது. மனதெல்லாம் வலி! நடுக்கம்! உளி நீங்கப் பெற்ற கைகளால் சட்டென பக்கத்திலிருந்த வாளை எடுத்து தன் கைகளை தானே வெட்டிக் கொண்டார் கம்பனாச்சாரியார்.
இச்சம்பவம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இன்றளவும் நடராஜர் சந்நிதிக்கு இடது புறம் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அருகே உடைந்த குதிரை வீரன் சிலையின் மிச்சத்தினை நான் சென்றால் காணலாம். இதுதான் தேரை குதித்தோடிய குதிரை மீதமர்ந்த வீரன் சிலை பாதியளவு உள்ள தூணாகும்.
பின்பு விசாரனையில், தூணில் குறை கண்டு சொன்ன இளைஞன், கம்பனாச்சாரியாரின் உறவானவரிலொருவனென தெரிந்தது.
மற்றும் கம்பனாச்சாரியாரின் வடித்த சிற்பத் தூண்கள் சிற்பத் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய நுன்னுற்பங்கள் நிறைந்து அழகு தருவன. அவை கனகசபை நடராஜரின் சந்நிதி முன் எட்டு அழகிய சிற்பங்களாக உள்ளன.
திருக்கோயில் வந்து தூண்களை பார்வையிடும் பக்தர்கள் அதனின் கலை நுன் வேலைப்பாடுகளை கண்டு வியந்து அச்சிலைகளை, தொடுவன அதிகரித்த வண்ணமிருந்தது. இதனால் ஆலய நிர்வாகம், பாதுகாக்கும் பொருட்டு, பொக்கிஷமாக பாதுகாக்க எட்டுசிலைகளுக்கும் சன்னக்கம்பி வேலியமைத்து பார்வைக்குத் தெரியுமாறும் அழகுறச் செய்து வைத்திருக்கிறார்கள்.
இக்கனக சபையை எத்தனை சென்று பார்த்தாலும் பார்த்த பரவசம் நீங்கப் பெறாது. அத்தனை அழகுநுனி வேலைப்பாடுகள். திரும்ப திரும்பச் சென்று பார்க்க ஆவலுண்டாகும் அத்தனை நேர்த்தி!
பேரூரைப் பற்றிய நூல்களில் தலையாயது கச்சியப்ப முனிவர் பாடிய பேரூர் புராணமாகும். இவர் முப்பத்தாறு தத்துவங்களைக் கொண்டே நூலை யாத்துள்ளார். இவர் இயற்றிய நூலில் முப்பத்தாறு படலமாக காட்டியுள்ளார். *( இம்முப்பத்தாறு படலமும் விரிவாக விளக்கமாக இத்தொடரில் ஒவ்வொரு படலமாக வரும்)*
நடராசப் பெருமான் கோயில் மண்டபத்திலும் முப்பத்தாறு தூண்கள்.
புராணப் படலத்திலுள்ள முப்பத்தாறும், மண்டபத்திலுள்ள தூண்கள் முப்பத்தாறும் இவ்விரண்டுக்கும் ஏதோ தத்துவத் தொடர்புடைவன போலும்.
*'கங்கையும் பணிவெண்டிங்களும்'* எனத் தொடக்கமாகும் விநாயகர் வாழ்த்தில் கூட முப்பத்தாறு சொற்கள்தான் இருக்கிறது.
கனக சபையில் *கோமுனி* *பட்டிமுனி* என இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜர் வடிவம் மிக அழகோ அழகு.
விமானம்---இங்கே வடிக்கப்பட்ட தாமரை மலர், கல்லாலான சங்கிலிகள், நம்மை ஆச்சர்யமூட்டும். சிற்பிகளின் உளிகள் கல்சங்கிலியில் விளையாடியிருக்கின்றன.
திருச்சிற்றம்பலம்.
*திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
いいいいいいいいいいいいい
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends