Announcement

Collapse
No announcement yet.

THITHI NIRNAYAM FOR SRAATHAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • THITHI NIRNAYAM FOR SRAATHAM

    Thithi wirnayam திதி நிர்ணயம்.சிராத்ததிற்கு.

    ஒரு நாள் என்பது 60 நாழிகை= 24 மணி நேரம். பகல் 12 மணி நேரம்=30 நாழிகை. இரவு 12 மணி நேரம்=30 நாழிகை..பகல் நேரத்தை அதாவது 12 மணி நேரத்தை 5 பாகமாக பிறிக்க வேண்டும் அதாவது 6 நாழிகை=2 மணி 24 நிமிடங்கள்.

    காலை 6 மணி முதல் 8 மணி 24 நிமிடங்கள் முடிய ப்ராதஹ் காலம்.

    காலை 8-24 முதல் 10-48 மணி வரை ஸங்கவ காலம்.
    காலை 10-48 முதல் மதியம் 1-12 ம்ணி வரை மாத்யானிக காலம்.

    மதியம் 1-12 முதல் மாலை 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.

    மாலை 3-36 முதல் மாலை 6 மணி வரை ஸாயங்காலம் எனப்பெயர்.
    இந்த அபராஹ்ண காலத்தில் தான் நாம் சிராத்தம் செய்ய வேண்டும்.

    அதாவது சிராத்த திதி மதியம் 1-12 முதல் மாலை 3-36 மணி வரை உள்ளதா என்று பார்க்க வேண்டும். சிராத்தம் செய்ய வேண்டிய நாளை நிர்னயம் செய்ய வேண்டும்.
    பொதுவாக சிராத்த திதி நிர்ணயத்தை 6 பகுதிகளாக பார்க்கலாம்.

    முதல் நாள் மட்டும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இருத்தல்

    மறு நாள் மட்டும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இருத்தல்
    இரண்டு நாளும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இருத்தல்

    இரண்டு நாளும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இருக்கவில்லை

    இரண்டு நாளிலும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் ஒரு பகுதியில் மட்டும் ஒரே அளவாக இருத்தல்

    இரண்டு நாட்களிலும் சிராத்த திதி வெவ்வேரான அளவாக அபராஹ்ண காலத்தில் சிராத்த திதி இருத்தல்

    முதல் நாள் அபராஹ்ணத்தில் சிராத்த திதி உள்ளது. மறு நாள் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இல்லை. ஆதலால் முதல் நாள் சிராத்தம் செய்ய வேண்டும்.

    முதல் நாள் அபராஹ்ண நேரத்தில் சிராத்த திதி இல்லை. மறு நாள் சிராத்த திதி அபராஹ்ண நேரத்தில் உள்ளது ஆதலால் மறு நாள் தான் சிராத்தம்.

    நாரத ஸ்மிருதியில் சிராத்த திதியானது எப்போது குறையுள்ள திதியாகுமோ அப்போது அபராஹ்ண வ்யாப்தி உள்ள திதியில் சிராத்தம் செய்ய வேண்டும்.
    ஆதலால் முதல் இரண்டு பகுதிக்கு நாரத ஸ்மிருதி படி சிராத்த திதி தெரிகின்றது.

    இப்போது 3,4,5 6 பகுதிக்கு பதில் பார்க்க திதி வளர்ச்சி திதி குறைவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    பொதுவாக ஒரு நாளைக்கு 12+12 =24 மணி நேரம் என ப்பார்க்கிறோம். ஆனால் சூரியனின் சஞ்சார மாற்றத்தால் பகலில் சில மாதங்கள் 12 மணிக்கு அதிக மாகவும், சில மாதங்கள் 12 மணிக்கு குறைவாகவும் இருக்கிறது.

    ஒரே தகுதியுள்ள இரு நபர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படுவது போல்--.. போதாயன மஹரிஷி சொல்கிறார்= திதி குறைவா அல்லது திதி வலர்ச்சியா என்று பார்க்க வேண்டும் என்கிறார்..

    4-1-2017 அன்று சூரிய உதயம் காலை 6 மணி 37 நிமிடத்திற்கு. சூரிய அஸ்தமனம் 5 மணி 53 நிமிடத்திற்கு. ஆதலால் இன்று பகல் நேரம் 12 மணி இல்லை. 44 நிமிடங்கள் குறைவு. அதாவது இன்று பகல் நேரம் 11 மணி 16

    நிமிடங்களே. . இதை ஐந்து பாகங்கள் ஆக்கினால் ஒரு பாகத்திற்கு 2 மணி 15 நிமிடங்கள் வரும். தற்போது

    இன்று காலை 6-37 மணி முதல் 8-52 முடிய ப்ராதஹ் காலம்.;

    8-52 முதல் 11-07 மணி முடிய ஸங்கவ காலம்;

    11-07 மணி முதல் பகல் 1-22 முடிய மாத்யானிக காலம்;

    பகல் 1-22 முதல் மாலை 3 -37 முடிய அபராஹ்ண காலம்;

    மாலை 3-37 முதல் 5-52 மணி முடிய ஸாயங்காலம் என பிறிக்க வேண்டும்.
    ஜனவரி மாதம் 3ந் தேதி பஞ்சமி திதி மாலை 3-43 மணிக்கு முடிகிறது.

    இன்று 3-37 மணிக்கே ஸாயங்காலக் காலம் ஆரம்ப மாகிவிட்டது. இன்று 3 ந் தேதி அபராஹ்ண காலத்தில் பஞ்சமி திதி தான் உள்ளது.

    ஜனவரி 4 ந்தேதி சஷ்டி திதி மாலை 3 மணி 7 நிமிடம் வரை உள்ளது. அபராஹ்ண காலத்தில் அதிக வியாப்தி உள்ளது. ஆதலால் ஜனவரி 4 ந் தேதியே சிராத்தம் செய்யவேண்டும்.
    திருக்கணித பஞ்சாங்கம் கும்பகோனம் மடத்து பஞ்சாங்கத்திலும் ஜனவரி 4 ந் தேதி தான் போட்டிருக்கிறார்கள்..

    இம்மாதிரி அபராஹ்ண காலத்தில் அதிக வ்யாப்தி உள்ள நாளே சிராத்த திதியாக எடுத்து கொள்ள வேண்டும்

    பாம்பு பஞ்சாகத்தில் ( வாக்கிய பஞ்சாங்கம் ) பஞ்சமி திதி பகல் 2 மணிக்கே முடிவதால் 3 ந் தேதி சஷ்டி திதி சிராத்த திதி ஆகிவிடுகிறது. 4 ந் தேதி சஷ்டி திதி 12-50 க்கே முடிந்து விடுகிறது.
Working...
X