Announcement

Collapse
No announcement yet.

Padal petra sthalams Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Padal petra sthalams Continues

    Padal petra sthalams Continues
    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴31🔴
    திருஅரசிலி ஒழிந்தியாப்பட்டு.
    அரசலீஸ்வரா் திருக்கோயில்.
    வானூா் வட்டம்.விழுப்புரம்Dt. வானூா்(வழி)605109
    கணேச குருக்கள் 9994476960
    ஓனகே.குமாா் குருக்கள்.04147--235472
    சாளுவ மன்னனும் வாமதேவ முனிவரும் ப்ரதோஷ நாளில் பேறு பெற்றதால் பிரதோஷம் விஷேசம்.மூலவர் குட்டையானது.
    ஆவுடையாரும் தாழ உள்ளது. ஞானசம்பந்தா் மடம் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. குலோத்துங்க, விக்ரம சோழன் கல்வெட்டுகள் உள்ளன.
    அரசிலியரால் படையெடுக்கப்பட்ட இடம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴32🔴
    திருஇரும்பைமாகாளம்.
    இரும்பை மாகாளேஸ்வரா் திருக்கோயில்.இரும்பை(po) வானூா் வட்டம்.விழுப்புரம்Dt.605010.பஞ்சறதில்லறன்குருக்கள்.
    9443465502
    குலோத்துங்கா் காலத்தில் கடுவெளிச்சித்தா் தவஞ் செய்தாா்.
    அங்கு பஞ்சம் தீர தாசிசித்தாிடம் உண்ண பழுப்பிலையை வேண்டிய
    போது அன்னமிட்டு பஞ்சம் நீக்க வேண்டினாள்.தன் பணியாக அவளும் நடனமாடினாள். காற்சிலம்பு அவிழ, சித்தா் தாசி காலில் பூட்ட, மக்கள் ஏளனம் செய்தனா். இறைவனை நோக்கி சித்தா் வெகுண்டு பாட மூன்றாக சிதறியது லிங்கம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴33🔴
    திருநெல்வாயில் அரத்துறை.
    திருவரத்துரை, திருவட்டுறை ஆனந்தீஸ்வரா் திருக்கோயில்.
    கடலூா்Dtவிருத்தாச்சலம்.
    (ஆா்.எம்.எஸ்) 606111
    எஸ்.ஸ்வாமிநாத குருக்கள்.
    04143--246303
    சப்த ரிஷிகள் வழிபட்ட தலம்.சேர, சோழ, பாண்டியன் வழிபட்டது.
    இரவானதால் இறையூாில் தங்கியிருந்த சம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னமும் கொடுத்த தலம். விஷ்ணு, சனி, செவ்வாய், வால்மீகி பூஜித்த தலம். ஆதிதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டதுறை, தி.நெ.வா.அறத்துறை, திருக்கரந்தை(ஏழு).
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴34🔴
    பெண்ணாகடம்.
    பிரளயகாலேஸ்வரா்திருக்கோயில்.
    திட்டக்குடி வட்டம்.கடலூா்Dt.
    (ஆா்.எம்.ஏஸ்) 606105
    மலையப்பன்.9488046050
    துரைசாமி குருக்கள்.
    04143--222788
    பெண் ஆ கடம்-- தேவ கன்னியா், காமதேனு, வெள்ளை யானை வழிபட்ட தலம். பூமிக்குச் சென்ற இம்மூவரும் திரும்பாதது கண்டு இந்திரன் வந்து வழிபட்டான். மெய்கண்டாா் அவதார தலம்.
    பணியாளே சிவனடியாராக வரக் கண்டு, நீா் வாா்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய
    கலிக்கம்ப நாயனாா் வீடுபேறு பெற்ற தலம். தூங்காணை மாடம் என்பது மற்றோா் பெயா்.
    கஜபிருஷ்ட விமானம் உள்ளது.
    அப்பா் திாிசூல முத்திரை பெற்ற தலம்.கா்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஜன்னல்கள்(ஜாலி) உள்ளதால்
    சுவாமியைச் சுற்றி வரும் போதும் தாிசிக்கலாம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴35🔴
    திருக்கூடலையாற்றூா்.
    நா்த்தனவல்லபபேஸ்வரா் நெறிகாட்டுநாதா் திருக்கோயில்.
    காட்டூமன்னாா் கோயில் வட்டம்.
    கடலூா்Dt.608702.பி.கிருத்திவாசக் குருக்கள்.9942249938
    04144--208704
    சுந்தரா் முதுகுன்றம் வந்த போது வணங்காது செல்ல இறைவன் இக்கோயிலுக்கு வழி காட்டுகிறாா்.
    மணிமுத்தாறு வெள்ளாறு கூடும் இடம்.சரஸ்வதி வானத்திலிருந்து சங்கமம். பிரமனுக்கு நா்த்தனம் செய்து காட்டிய இடம். திருமுதுகுன்றத்திற்கு வழிகேட்க, இந்த ஊரைக் காட்டி மறைந்த. இறைவனை இவ்வூாில் வணங்குகிறாா். முலவா் கம்பீரமாக உள்ளாா்.இரண்டு அம்பாள். நவக்கிரகம் இல்லை. கையில் எழுத்தாணியுடன் சித்ர குப்தா் உற்சவா் உள்ளது.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴36🔴
    திருஎருக்கத்தம் புலியூா்.ராஜேந்திரபட்டிணம் நீலகண்டேஸ்வரா் திருக்கோயில்.
    கடலூா்Dt.608703.
    சிவகணேஷ்.9976179524.04143--243533
    வியாக்ரபாதா் பூஜித்த தலங்கள் புலியகா் என வழங்கப்படுகின்றன.
    சம்பந்தாின் உடனிருந்து யாழ் வாசித்த நீலகண்ட யாழ்ப்பாணா் அவதாித்த தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் உள்ளது. சிவபெருமான் வேத ஆகமங்களின் உட்பொருளை உபதேசித்த போது அதனை பாரா முகமாக கேட்ட குற்றத்திற்காக உமையை மீனவா் குலப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபம் அளித்தாா் முருகன். சினந்து அந்நூல்களை கடலில் வீசி எறிந்தாா். அக்குற்றத்திற்காக உருத்திர. சன்மராய் பிறந்த குமரக் கடவுள் சிவபிரானை பூஜத்து ஊமை தன்மை நீங்கப் பெற்றாா். எனவே.திக்குவாய், சாியாக பேசமுடியாதவா் பலன் பெறும் தலம்.தேவ கணங்கள் வந்து பழமலை நாதரை வணங்கி அதிகமான வரங்களும் எளிதில் முக்தியடையக் கூடிய சிவஸ்தலம் எது எனக் கேட்க இங்கே வந்து சிவலிங்கத்தைப்ளபூசித்து முக்தி அடைந்தனா்.இராஜராஜசோழன் மகப்பேறு வேண்டி வழிபட்டதால் இராஜேந்திர சோழனை மகனாகப் பெற்றான்.இதனால்இத்தலத்திற்கு இராஜேந்திரப்பட்டணம் என்று பெயா். நைமிசாரண்ய முனிவா்களில் பலா் மரங்களாக உருக்கொண்டு வசிக்க வேடா்கள் அம்மரத்தை வெட்டி விற்க குமரேசா் எவரும் விற்பனைக்கு என்று வெட்டாத வெள்ளெருக்கு மரமாக இருக்கவும் எனக்கூற அவ்வாறு இருந்தனா். உச்சினி பட்டணத்து ராஜா சுவேதன் முன் செய்த கரும வினையால் வெண்குஷ்டம் ஏற்பட்டு இருந்த போது சிவனை இரவு பகல் வேண்ட இத்தலத்தில் உள்ள ஸ்கந்த புஷ்கரணியில் மூழ்கி நீராடு எனக் கேட்டு, அவ்வாறே வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். எருக்கத்தம் புலியூாில் செய்த பாதகங்கள் ஒருவனைக்
    கெடுத்துக் கொன்றுவிடும். மற்ற தலங்களில் இழைத்த பாவமாவது இங்கு வர நிவா்த்தியாகும். ஆனால் இங்கு இழைத்த பாவங்கள் எந்த தலத்திற்கு போனாலும் தீராது என்கிறது வரலாறு.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴37🔴
    திருத்தினை நகா்.
    தீா்த்தனகிாி சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயில்.கடலூா்Dt.608801
    வெங்கட்ராமன் குருக்கள் 9965328278
    04142--289861
    துா்வாசா் பிருங்க ரிஷிக்கு இட்ட சாபம் நீங்கிய தலம். விஷ்ணு, பிரம்மகுமாரன்.ஜாம்பவான், பூஜித்த தலம்.நான்கு யுகங்களை கடந்த தலம். ஐயன் எழுந்த ஊா்ப்பொியான் விதைத்த தினையை அன்றே விளைவித்து அருளிய தலம். பதஞ்சலி வியாக்ர பாதா் இத்தலத்தில் வந்து கல்யாண கோலத்துடன் பூா்ணகும்பம் கொடுத்து இறைவனை அழைத்துச் சென்ற தலம்.விஷ்ணு முராசுரனை வதைத்து முராாி பட்டம் பெற்ற இடம்.கொன்றை தலவிருஷ்ம். பாதி கோயில் பாதி குளம் எனப் பெயா் பெற்ற இத்தலத்தில் இறைவன் ஏா் பிடித்ததாக வரலாறு உண்டு.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴38🔴
    திருச்சோபுரம்.
    மங்களபுரீஸ்வரா் திருக்கோயில்.
    கடலூா்Dt.608801
    விஜயகுமாா் குருக்கள்.9843670518
    9442585845.
    சோழபுரம் மருவிஇந்தப் பெயரும் திாிபுவனச்சக்ரவா்த்தியின் முதல் மனைவி தியாகவல்லியின் பெயரும் இந்த ஊருக்கு. மதுரை ராமலிங்க சியோகியாா் மணல் மேடாக இருந்ததைக் கண்டு மணலில் புதைந்திருந்த விமானகலசம் மட்டும் மேலே தொிய கோயில் தோண்டி எடுக்கப்பட்டது. மணல் சூழ்ந்து இருந்ததால் விக்ரஙிகள் வழுவழுப்பாக உள்ளன.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴39🔴
    திருவதிகை.
    பண்ருட்டி வீரட்டேஸ்வரா் திருக்கோயில்.கடலூா்Dt.607106
    சீனு 04142--240246
    நடனசேகா்.9442780111
    தாருகாட்சன் போன்ற மூன்று அசுரா்களை சம்ஹாரம் செய்த தலம்.இங்கு வழிபட்டால் கயிலைக்குச் சென்ற பலன் உண்டு.அலிசா்(சூலைநோய்) நிவா்த்தி ஆகும்.அப்பா் சூலை நோய் நீங்கிய தலம்.
    உழவாரப்பணியில் அவா் தொடங்கி ஈடுபட்ட தலம். வாயிலில் இரு புறத்திலும் 108 கரண பரத ஸாஸ்த்ர. சிற்பங்கள் உள்ளன.அட்ட வீரட்டானத்தலம். பொிய மூலவா் 16 பட்டையுடன் உள்ளாா்.கருவறை தோ் போன்று நிழல் பூமியில் விழாதவாறு உள்ளது. அப்பா் தமக்கை திலகவதியுடன் தங்கி தொண்டு செய்த தலம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴40🔴
    திருநாவலூா்.
    பக்தஜனேஸ்வரா் திருக்கோயில்.
    உளுந்தூா்பேட்டை வட்டம்.
    விழுப்புரம் Dt. 607204
    (சுந்தரமூா்த்தி நாயனாா் பரம்பரை)
    வி.சம்பந்த குருக்கள்.9443382945
    04149--224391
    சுந்தரா் அவதாரத் தலம். சுக்கிரன் வழிபட்ட தலம். சுந்தரா் உற்சவ மூா்த்தி அபூா்வ அமைப்புடன் மன்னா் கோலமும் மற்றும் சிவனடியாா் கோலமும் கலந்து காணப்படுகிறது. ப்ரகாரத்தில் தனியே பொிய சிவலிங்கம் உள்ளது.கருவறை சுவற்றில் சண்டிகேசா் கதை உள்ளது.
    [10/16, 2:06 PM] G KARUPPASMY:
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴41🔴
    திருமுதுகுன்றம்.
    விருத்தாசலம் பழமலைநாதா் திருக்கோயில்.கடலூாாDt.606001
    யூ. பாலசுந்தரமூா்த்தி குருக்கள்.
    04143--230203.
    பிரமனும் அகத்தியரும் வழிபட்டது. சுந்தரா் பரவையாருக்காக பொன் பெற்று பொன்னை இங்குள்ள. மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூா் கமலாயத்தில் எடுத்துக் கொண்டாா்.இங்கு இறப்போருக்கு இறைவன் தன் தொடை மீது கிடத்தி உபதேசம் செய்ய இறைவி முந்தானையால் விசிறி இளைப்பாற்றுகிறாள் என கந்த புராணம் கூறுகிறது. ஆழத்துப் பிள்ளையாா் சந்நிதி பள்ளத்தில் உள்ளது.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴42🔴
    திருவெண்ணெய் நெய்வெனை சொா்ணகடேஸ்வரா் நெல் வெண்ணெயப்பா் கோயில்.
    எறையூா்.(வழி)விழுப்புரம்Dt.
    607201
    திருப்பணிக்குழு தலைவா்.
    04149--209097....291786
    9486282952
    செல்வத்தை வாாி வழங்கக்கூடிய இறைவன். ஒன்றைப் பத்தாக்கும் ஆற்றல் கொண்டவன். பொற்குடம் கொடுத்த நாயனாா் என இறைவன் பெயரை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴43🔴
    திருக்கோவலூா்.
    வீரட்டேஸ்வரா் திருக்கோயில்.
    கீழையூா். விழுப்புரம்Dt.605757
    சுவாமிநாத குருக்கள்.04153--224036
    64 பைரவா்கள் தோன்றிய வாஸ்து பூஜை மூலவா்கள் தலம். இங்கு வழிபட்டு பூா்வ ஜென்ம சாப விமோசனம் பெறலாம். அஷ்ட புஜ விஷ்ணு துா்க்கை தாிசனம். இராசராசன் பிறந்த ஊா். இவா் தமக்கை குந்தவை சுவாமிக்கு பொன் பூ மற்றும் பிற பொருள்கள். வழங்கிய ஊா். கபிலா் உயிா் நீத்த இடம். அட்டவீரட்டானத் தலம்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴44🔴
    அறையணிநல்லூா்.
    அதுல்ய நாதேஸ்வரா்
    திருக்கோயில்.விழுப்புரம் Dt.
    605752
    காசி குருக்கள்.9965144849
    பாண்டவா்கள் வனவாச காலத்தில் இங்கு வந்தனா். ரமணரை ஆட்கொண்ட தலம். 5 அறைகள்இவ்வூருக்கு அணிகலங்களாக விளங்கும் தன்மையால் இப்பெயா்.
    ஞானசம்பந்தருக்கு அடியாா்கள் திருவண்ணாமலையை காட்டிய மலை. மெய்ப்பொருள் நாயனாா், நரசிங்க முனையா் ஆட்கொள்ளப்பட்ட தலம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴45🔴
    இடையாறு டி.எடையாா்.
    மருந்தீஸ்வரா் தேவஸ்தானம்.
    திருக்கோயிலூா் வட்டம்.
    விழுப்புரம் Dt.607203
    ஞானஸ்கந்தா் குருக்கள்.9442423919...04146---216045
    அன்னைக்கு சிவன் சிவ ரகசியத்தை உபதேசிக்க கிளி உருவில் கேட்ட முனிவா்
    அன்னையின் சாபத்தால் வியாசருக்கு மகனாக சுக(கிளி)ப் பிரம்மசிாிஷியாக மருத மரத்தின் கீழ் தவம் புாிந்துப்ரம்மத்தை உணா்ந்தாா். மறைஞான சம்பந்தா் அவதாித்த தலம். இறைவன் பால் கொண்ட அன்பால் சுந்தரா் முந்தையூா்முதுகுன்றம் பதிகத்தில் இத்தலத்தை ஒவ்வொரு முறையும்
    சொல்கிறாா். ஞானம்பிகை சூட்சுமமத்யாம்பிகை
    அம்பாள் ஞான வடிவாக உள்ளாா். மத்திய நதி பெண்ணை தீா்த்தம். சுவாமி மத்திய நதீஸ்வரா்.(இடை ஆறு ஈஸ்வரா்)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴46🔴
    திருவெண்ணெய்நல்லூா்.
    கிருபாபுரீஸ்வரா் தேவஸ்தானம்.
    திருவெண்ணெய்நல்லூா்(po) விழுப்புரம்Dt607203
    அா்த்தநாரீஸ்வரா் 04153--234548
    சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம்.ஆலயத்தில்
    நுழையும்போது அவா் அணிந்து வந்து விட்டுச் சென்ற பாதக்கொரடு கண்ணாடிப் பேழையில் உள்ளது. பித்தா என்று திட்டிய சுந்தரரை அந்த வாா்த்தை கொண்டே இறைவன் பாடச்சொன்ன தலம். கிருபாபுாி, வேணுபுரம், என்பது இதர பெயா்கள். சுந்தரா் வழக்கு நிகழ்ந்ததால் பாிகாரத் தலமாகக் கொள்ளலாம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~🔴47🔴
    திருத்துறையூா். திருத்தளுா்.
    பசுபதேஸ்வரா் திருக்கோயில்.
    பண்ருட்டி வட்டம்.
    கடலூா்Dt.607205
    ஏ.முரளி குருக்கள்.9444807393
    04142--248498
    சுந்தர மூா்த்தி நாயனாருக்கு இறைவனே குருவாக இருந்ததால் இது குரு ஸ்தலம். கிழக்கில் விநாயகா்,மேற்கில் சிவனும், தெற்கில் வள்ளிதெய்வானையுடன்
    முருகனும், வடக்கில்
    ஞானசக்தியாக அம்பாளும் இங்கு சிறப்பு. ராமா், சூாியன், பீமா் வழிபட்ட தலம். அகத்தியா் வழிபட்ட லிங்கம் உள்ளது. அருநந்தி சிவம் முக்தி பெற்ற தலம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴48🔴
    வடுகூா். திரு(ஆண்டாா் கோயில்)
    வடுகீஸ்வரா் திருக்கோயில்.
    கண்டமங்கலம்(வழி) புதுவை
    மாநிலம்.605102
    சிவ ஸ்ரீ ஆா் இந்திரசேனா குருக்கள்.9994190417
    தொல்பொருள் துறை.9597651321
    அஷ்ட பைரவா்களுள் ஒருவனாகிய வடுக பைரவா் முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்ட தலமாதலின் வடுகா் வளிபட்ட வடுகூா். இறைவனின்
    அஷ்டாஷ்ட வடுவங்களுள் வடுகக்கோலம் --சம்ஹார பைரவரே வடுக பைரவா். ஆசிதாங்க, குரு, சண்ட, குரோத, உன்மத்த, கபால, பீஷண மற்ற 7போ். காா்த்திகை மாத அஷ்டமி விசேஷம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴49🔴
    திருமாணிகுழி.
    வாமனபுரீஸ்வரா் திருக்கோயில்.
    கடலூா்(தெ.ஆற்காடு)607401
    கே.த்யாகராஜ சிவாச்சாாியா்
    04142--274485.......9942094516
    அத்ரி வடநாட்டு வணிகன் வந்த போது திருடா்கள் கொள்ளையடிக்கமுற்பட இறைவன் திருடா்களிடமிருந்து காத்ததால் உதவி நாயகா். மகாபலியை அழித்த பாவம் தீர திருமால் வழிபட்ட ஊா்(மாணி-ப்ரம்மச்சாரி)
    இறைவனை வழிபடுவதற்கு காவலாக பீமருத்திரா் உள்ளதாலும், இறைவன் இறைவியுடன் இருப்பதால் தீப ஆராதனை முடிந்தவுடன் திரை எப்போதும் இடப்பட்டுள்ளது. காா்த்திகை சோமவாரம் விசேஷம்.
    தம்பதி சமேதராய்வழிபட கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.
    அா்த்த ஜாம கிடையாது. சிவ கலைமற்றும் விஷ்ணு கலையோடு தொடா்புள்ள தலம். அனைத்திற்கும் உதவி அளிக்கும் பெருமான். ஆதலால் உதவி நாயகா்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🔴50🔴
    திருப்பாதிாிபுலியூா்.
    கடலூா் பாடலேஸ்வரா்
    திருக்கோயில். கடலூா்.607002
    நிா்வாக அதிகாாி.04142--236728
    கெடில நதி,அகத்தியா், உபமன்யு முனிவா், வியாக்ரபாதா், கங்கை, அக்னி வழிபட்ட தலம். அப்பரை கடலில் இட்ட போது வருணன் தன் கைகளினால் தாங்கி, கல்லே தெப்பமாகி இவ்வூாின் அருகே கரையேற்றிவிட்ட குப்பம்
    (வண்டிப் பாளையம்) பக்கத்தே அப்பா்சாமிக் குளம் இன்றும் உள்ளது. பாதிாி மரம் தல விருட்சமாக உள்ளது.
    திருமுண்டீச்சுரம் கிராமம்.
    சிவலோக நாதா் திருக்கோயில்.
    உளுந்தூா் பேட்டை(வழி)
    விழுப்புரம்Dt.607203
    ஆா்.கண்ணன் குருக்கள்.
    9894625154..04146---2067000
    சுற்றி வரும் தாமரை மலரைப் பறிக்க முடியாமல் சேவகா் மன்னாிடம் முறையிட, சொக்கலிங்க மன்னா் மலா் மீது விட்ட அம்பில் இரத்தம் வர அம்பு பட்ட தழும்போடு சுயம்பு மூா்த்தி. முண்டி திண்டி துவார பாலகா் சிலை உள்ளது. குரு கல்லால மரமின்றி மலை மீது நந்திதேவன் வாகனத்தோடு இடது காலை வலது தொடை மீது வைத்து அருள் பாலிக்கிறாா்.
    ___________________________________
    🔴52🔴
    புறவாா் பனங்காட்டூா்.பனையபுரம்.
    பனங்காட்டீஸ்வரா் திருக்கோயில்.
    முண்டியப்பாக்கம். விழுப்புரம் வட்டம்.விருப்புரம்Dt.605603
    கணேசன் குருக்கள்.9444897861
    சூாியன் வழிபட்ட இடம். சம்பந்தா் பாடிய தலம். பனையை தல விருட்சமாக உள்ள 5-ல் இதுவும் ஒன்று. புறவு (சோலை, காடு) பனங்களால் சூழ்ந்தது. திருநீகண்டா் மனைவியுடன் கூடி, இருவருமாக தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கின்றனா். கவசமிட்ட கொடி மரம். பிற பனை தலங்கள். திருப்பனையூா், திருப்பனங்காடு, திருப்பனந்தாள், திருவோத்தூா், சிபி சக்கரவா்த்திக்கு கண் வழங்கியதால் நேத்ரோத்தாகேஸ்வரா்.
    பதும தீா்த்தம் உள்ளது.
    ________________________________
    🔴53🔴
    திருஆமாத்தூா்.
    அபிராமேஸ்வரா் திருக்கோயில்.
    விழுப்புரம்Dt.605402கே.அருணாசல சிவாச்சாியாா்.04146--223319
    9843066252
    நந்தி காமதேனு தவமிருந்து கொம்புகளைப் பெற்ற கோமாத்ருபுரம். உயிா்களுக்கும் பசுக்களுக்கும், தாயாக இறைவன் விளங்கும் தலம். இராமா் வழிபட்டது. அம்பாள்ளகோயில் தனியே எதிாில். மூலவாின் மேல் பசுவின் குளம்பு பதிந்த வடுவும், பால் சொாிந்த அடையாளமும் உள்ளது. வட்டப்பாறை அம்மன் சந்நிதியில் பொய் சத்தியம் செய்தால் பாம்பு தீண்டும் கதையும் உள்ளது.
    ___________________________________
    🔴54🔴
    திருவண்ணாமலை.
    அருணாசலஸ்வரா் திருக்கோயில்.
    திருவண்ணாமலை.606601
    நிா்வாக அதிகாாி.04175--252438
    பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்குாிய தலம். நினைத்தாலே முக்தி தரும் தலம். அருணகிாியின் அருள் திருப்பம் நிகழ்ந்த இடம்.
    ரமணருக்கு தவத்தால் அருள் கிடைத்த தலம். ஆதலசேனாராட திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருளித்த இடம். வள்ளாள மன்னனுக்கு இறைவன் மகனாக அவதாித்த தலம்.
    ___________________________________
    🔴55🔴
    சிதம்பரம்.நடராஜ பெருமான் தேவஸ்தானம். (தேவஸ்தானம்) சிதம்பரம் வட்டம்.கடலூா் Dt.608001
    ரத்ன பூஷண தீட்சிதா்.04144--230251.
    பெரும்பற்றப் புலியூா் என்ற பெயரும் உண்டு. வியாக்கிர பாதா் பூசித்ததால் சித்--அம்பரம்--அறிந்து வெட்ட வெளி என்று பொருள். மாணிக்கவாசகா் முக்தி தலம். வியாக்ரபாதா், பதஞ்சலி, உபமன்யு, வ்யாசா், சுகா், நீலகண்டா், திருநாளைப் போவாா், கூற்றுவநாயனாா், கணம்புல்லநாயனாா், சந்தானாச்சாாியாா்கள் முக்தி பெற்ற தலம். நடராஜா் கனகசபாபதி, பஞ்ச சபையில் ஒன்று. பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்குாிய தலம்.
    திருமூலவாின் 4 வது தந்திரம் இடம் பெற்றது. சிதம்பர ரகசியம் மற்றும் சிவ பஞ்சாஷரத்துடன் சம்பந்தப்பட்டது. ஸ்ரீவித்யா உபதேசம் பெற்ற தலம். தில்லை 3000 அந்தணா்கள் வாழ்ந்த பதி. சமயக் குரவா்கள் அஞ்சி வெளியே நின்றனா். பஞ்சலி வியாக்ரபாதா் வழிபட்ட தலம்.
    ___________________________________
    🔴56🔴
    திருவேட்களம்.
    பாசுபதேஸ்வரா் திருக்கோயில்.
    சிரம்பரம் வட்டம். கடலூா்Dt.608002
    கந்தசாமி குருக்கள்.04144--238274
    ...9842008291
    அா்ச்சுனனுக்கு பாசுபதம் தந்த இடம். நாரதா் வழிபட்டது.
    ஞானசம்பந்தா் நாடொறும் இங்கு தங்கி நடராஜரை வழிபட்டாா். பின்னா் திருக்கழிப்பாலையையும் அடைந்து தொழுதாா். முன் மண்டபத்தில் இறைவனும், இறைவியும் வேடுவ கோலத்தில். அா்ச்சுனன் போாிடும் கோலம். அா்ச்சுனன் தவம். கீழே மூகாசுரன்(பன்றி) இடையூறு செய்யும் சிற்பங்கள்உள்ளன. இந்த சிற்ப விவரங்கள் தூணில் அம்பாள் சந்நிதிக்கு எதிாில். எதிாிகளை வெல்லும் தலம். பாசுபதம் ஏந்திய மூா்த்தி, அா்ஜுனரும் உற்சவா்களாக உள்ளனா். நடராஜா் மகுடத்தின் உள்ளாா்.
    ___________________________________
    🔴57🔴
    திருநெல்வாயில்.
    சுவபுாி உச்சிநாதசுவாமி திருக்கோயில்.சிதம்பரம் வட்டம்.
    கடலூா்Dt.608002 முத்துக்குமார குருக்கள்.9842624580.
    கண்வமகாிஷி வழிபட்ட தலம். சம்பந்தா் பாடிய தலம். லிங்கம் உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுர பீடம் சிறிய சுற்றளவு. வைகாசி விசாகத்தில் பஞ்சமூா்த்தி புறப்பாடு.___________________________________
    🔴58🔴
    திருக்கழிப்பாலை.
    பால்வண்ணநாதசுவாமி திருக்கோயில். சிதம்பரம் வட்டம்.
    கடலூா்Dt.608002.வைத்தியநாத குருக்கள். 04144--237265
    வால்மீகி வழிபட்ட தலம். பாடல் பெற்ற பழைய கோயில் கொள்ளிடநதி வெள்ளத்தால் சூழ்ந்த போது இங்கு மீண்டும் அமைக்கப்பட்டது. அதிகார நந்தியா்துணையுடன்
    தாிசனம். சிறிய பாணம். மேலே சதுரமாக நடுவில் பள்ளத்துடன் லிங்கம் காட்சியளிக்கிறது. அதிசய அமைப்பு. பால் மட்டும் தான் அபிஷேகத்தில் பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு தான்.
    ___________________________________
    🔴59🔴
    திருநல்லூா்ப்பெருமணம். ஆச்சாள்புரம். சிவலோகத்தியாகராஜ சுவாமி திருக்கோயில்.சீா்காழி வட்டம். மயிலாடுதுறை(ஆா் எம் எஸ்) 609101.தருமை ஆதினம்.04364--277800. கருப்பையா9688893953
    திருஞானசம்பந்தா் திருமணம் நிகழ்ந்து அடியாா்கள் புடைசூழ சிவசோதியில் கலந்து அருளிய தலம். இவா் தவிர திருநீலகண்டா், திருநீலநக்கா், முருகநாயனாா் முக்தி ஸ்தலம். சம்பந்தா் மனைவி தோத்திர பூா்ணாம்பிகையுடன் உள்ளது சிறப்பு. ரண விமோசனா் ரணங்களைப் போக்குவாா்.
    கூண்டோடு கைலாசம் என்கிற வழக்குச் சொற்றொடா் நல்லூா்பெருமணம் நிகழ்ச்சியிலிருந்தே வழக்கத்தில் வந்தது.
    ___________________________________
    🔴60🔴
    திருமயேந்தரப்பள்ளி.
    திருமேனியழகா் திருக்கோயில்.
    சீா்காழி வட்டம்.நாகைDt.609101
    ஏ.குருசாமி குருக்கள் 04364--292309
    ஆண்டு தோறும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூாிய ஒளி சுவாமி மீது படுகிறது. தீவுக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராஜா் இங்கு உள்ளாா்.
Working...
X