***சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(07)*
*திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் வழிபட்டு உய்தி பெற்றார்கள் என்று பேரூர் புராணத்துள் கூறும் பிற படலங்களின் உண்மைகளையும் உள்ளுறையையும் ஐயப்பட நியாயமில்லை.
பற்பல தேவர் முனிவர் அரசர் முதலானோர் இத்தலம் வந்து வழிபட்டார்கள் என்பது இப்புராண சரிதத்தின் மூலமாக அன்றி வேறு அகச் சான்றுகளாலும் விளங்கும்.
இத்தலத்தின் மூர்த்தியின் பேராகிய பட்டிநாதர்--பட்டீசர்--என்ற பெயரே பசுவாகிய காமதேனுவினாற் பட்டியிட்டுப் பூசிக்கப் பெற்ற வரலாற்றை விளக்கும்.
குழகன் குளப்புச் சுவடுற்ற படலத்திற் கூறிய அடையாளங்களாகிய கன்றினது காற்குளம்பின் சுவடுகள் மூன்றும் சுவடு ஒன்றும் அடையாளமாகக் சுவாமி திருமேனியில் இன்றைக்கும் காணலாம்.
*சாணம் புழுக்கா நிலை.*
இத்தலத்தை யடைந்தோர்க்கு மேலும் பிறப்பு இல்லை என்பதற்கு அத்தாட்சியாய் இத்தலத்தின் எல்லைகளில் இடப்படும் சாணம் புழுக்கவே புழுக்காது. இத்தலத்தினை யடுத்து மாற்றுஸ எல்லைகளில் மாடுகள் சாணமிட்டால் புழுக்கும்.
*வலது செவி மேலே வைத்து இறத்தல்.*
இத்தலத்தில் இறக்கும் உயிர்களுக்கெல்லாம் இறக்கும் காலத்தில் இறைவன் அவைகட்குத் திருவைந்தெழுத்தை உபதேசஞ் செய்து தன்னடியிற் சேர்த்துக் கொள்கின்றானதலின் பிறவாப் பெருமை காசியைப் போல இத்தலமான திருப்பேரூருக்கும் உண்டு.
இதனை உண்மை என நாம் உணர்வதற்கு ஒரு ஆதாரமாக,,,,,
அதாவது, இத்தலத்தில் இறக்கும் உயிர்கள் மானிடன் உள்பட எவையாயினும் அவை எல்லாம் அதற்கு மன் எவ்வாறு கிடப்பினும் அவை உயிர் விடுஞ் சமயம் தம் வலது காதை மேலே வைத்தே உயிர் துறக்கின்றன. இவ்வுண்மை அவ்வக்காலத்தே உடனிருந்து உற்று நோக்கினார் நேரிற் கண்டதும் காண்கிறதுமாம்.
*பிரம தீர்த்தத்தினால் செம்பு பொன்னாகுதல்.*
இப்பேரூர் தலத்தே வடகைலாயம் என்கின்ற கோயிலுனுள் பிரம தீர்த்தம் அல்லது குண்டிகை தீர்த்தம் என்னும் கிணறு உள்ளது. அந்தக் கோயில் நந்தவனத்தில் வடக்கிலே அந்தத் தீர்த்தத்தினருகே ஒற்றையாக நிற்கக் காணப்பெறும் இறவாப்பனையாம் இந்தத் தீர்த்தத்தில் குளித்தால் பைத்தியம் மற்றும் பெரு நோய்களையும் நீங்கி சுகம் பெரும் உண்மை.
அக்கால வழக்கத்தில் இத்தீர்த்தத்தில் குளிக்கும் போது இததீர்த்தத்தில் செப்புக் காசுகளை போட்டு விட்டுத் தான் குளிப்பார்கள்.
இந்தச்ஸசெப்புக் காசுகள் சில காலம் சென்றதும் இத்தீர்த்தத்தில் கிடந்து கிடந்து களிம்பு நீங்கித் தங்கப் பொற்காசாய் ஒளி வீசி படர நடைபெற்றிருக்கின்றன.
அந்தப் பொன் போன்ற உயர்ந்த பொன்னை நாம் காண முடியாது. *"ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவீர்"* என்று தாயுமானார் கூறிய பொன்னே இதற்கு உவமை.
ஓளிவிடும் பொன் என்பது இக்காலத்து ஆங்கிலத்தில் (Radium) ரேடியம் என சொல்லப்படும் ஒரு வகை ஒளி வீசும் பொன் என ஊகிக்கலாம்.
இவ்வுண்மையை 1918- ஆண்டில் இந்தத் தீர்த்ததக் கிணற்றைச் சேறு வாரிச் சுத்தம் செய்த போது நேரில் காணப் பெற்றிருக்கிறார்கள். தீர்த்தக் கிணற்றிலிருந்து வாரிப்போட்ட சேற்றில் செம்புக் காசுகளெல்லாம் மின்னி ஒளி வீசியிருக்கிறது. ஆக செம்பினிற் களிம்பு போக்கும் குணம் இத்தீர்த்தத்திற்கு உண்டு என்பது உண்மை.
செம்பின் களிம்பு போல உயிர்களுடன் உடன் பிறந்ததாகிய திணிந்த ஆணவம் என்ற இருள் மலமும் அவ்வாறே இத்தீர்த்தத்தாலும், இத்தலத்தாலும் அகலும் என்பது இதன் சாட்சியினால் விளக்கம் பெறும் உண்மை. இதனை யாரும் மறுக்க முடியாது. செம்பு பொன்னாயிடும் என முன்னோர் நூல்களிற் கூறும் இயல்பு இதுவேயாகும்.
சுற்றுப்புரத்திலுள்ள பல நீர் நிலைகளில் எந்த நீர் நிலைக்கும் இல்லாத தனியியல்பு இந்தத் தீர்த்தத்திற்கு மட்டுமே இருந்தன.
*உரைத்தநாற் பயனுட் பெரும்பய னாய தொள்ளிய வீடஃ துறலால்*
*தரைத்தலைப்பேரூர் என்பார்கள் சிலர்; எத் தலத்தினுஞ் சாற்றுநாற் பயனும்*
*நிறைத்தலிற் பேரூர் என்பார்கள் பலரே; நீடிய வாதிமா நகரை*
*இரைத்தெழு கடல்போல் வளத்தினும் பேரூர் என்பார்கள் பற்பலா யிரரே"*
திருச்சிற்றம்பலம்.
*திருப்பேரூர் திருக்கோயில் தொடர் வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள,இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends