குட்டிக்கதை:
ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்.அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ளவச்சு அவன் வந்த பைக் பஞ்சர்ஆய்ருச்சு .உடனே பக்கத்துலபார்த் தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னுகேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த துறவி சொன்னாரு.தம்பி நேரம்வேறு போயிருச்சு இந்தஇருட்டுக்கு -ள்ள நீங்கஊருக்கு வண்டியசரி பண்ணி போகனுமா ?பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு .உடனே இவனும்சரின்னு ஒத்துக்கிட்டான் .அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும் போது மடத்துக்குபின்னாடி டமால்னு ஒரு பெரியசத்தம் .ஆனா ஒருத்தரும் எழுந்து என்னனு பார்க்கல .உடனே இவனும்அப்படியே படுத்து தூங்கிட்டான்.
மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிட்டு போகும் போது.
அந்தசத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்டகேட்டான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது.
நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் .இவனும் வந்துட்டான் அப்புறம் ஒரு வருடம்கழிச்சுஅதே வழிய வரும்போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது .அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .
இவனும் மறு நாள்காரணம் கேட்டான்.ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும்மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் .அவர் அப்பவும் மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு .ஒருதடவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க .ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான்.அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன்அப்படின்னார் .
உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாகவந்துட்டான் .வந்ததும் அவரு இவனதவம் பண்ண சொன்னார் .இவனும்பண்ணினான்.
ஆறு மாதம் கடுமையா தவம் இருந்தபிறகு அந்ததலைமை துறவி இந்தாப்பா இந்தசாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில்இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான்.அங்க
இ ன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி .அதுக்கு பதில் கண்டு புடிச்சபிறகு அடுத்தசாவி தருவேன்னு துறவி சொன்னார்.இவனும் கண்டு பிடிச்சான்அடுத் த சாவியும் தந்தார் .இவன்தொறந்தான் .
அப்புறம்இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .ஒரு வழியா அதுக்கும் பதில்கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவதொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகணும்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends