Announcement

Collapse
No announcement yet.

Perur temple part 12

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part 12

    *சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாயா அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *( 12 )*
    ☘ *திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *வட கைலாயப் படலம்.*
    திருப்பேரூரிலே காலவ முனிவர் முதலியோர் சிவபிரான் திருநடனத்திற்காகக் குறித்த காலத்தையே நாடிக் கொண்டிருந்தனர்.
    அப்படியான காலத்தை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, காலவேசுரத்தில் அரசடியில் வெள்ளியம்பலம் உள்ளதாகச் சிவபெருமான் அருளியபடி அதனைக் காணப்பெற்றிலேனென்று கோமுனிவர் தியானித்தார்.
    அத்தியானத்தின் போதொருநாள் காலையில் "பழைய அம்பலத்தைப் பரமசிவன் மறைத்தபடியால், அவ்விடத்திலே ஒரு சபையும் அதிலே நடராஜர் திருவுருவம் அமைத்து வழிபடுவாயாக" என்று அசரீரி வாக்கு ஒலித்தது.
    அக்கணத்திலேயே கோமுனிவர் விசுவ கம்மியனை வரவழைத்துச் சபை நிருநகிக்கும் இடம் புலப்படாது திகைத்திருக்கும் பொழுது, சிவபிரான் சித்தராகத் திருவுருக் கொண்டு பற்பல அற்புதங்களைச் செய்தருளினார்.
    அவரைக் கோமுனிவர் முதலிய மூவரும் அடுத்து வினவிச் சிவபெருமான் திருநடனஞ் செய்கின்ற திருச்சபையைத் தெளிவிக்க வல்லீராயன் நீவிரே முற்று முணர்ந்த பெற்றியரெனச் சொல்லியவளவில், சித்தேசர் ஆதிலிங்க மூர்த்திக்கு வடகிழக்கில், திரிமூர்த்தி யுருவான அரசடி நீழலில் வந்து, *"வெள்ளியம்பலம் எழுக"* என்று திருவாய் மலர்ந்தருளினார்.
    உடனே வெள்ளியம்பலம் பொள்ளென எழுந்தது. அப்பொழுது தேவர்கள் கற்பகப் பூமாரி பொழிந்தனர்.
    பூமாரி பொழிந்த வேளையில் கோமுனிவர் முதலியோர் சித்தமூர்த்தியை வணங்கித் *"தேவரீர் செய்தருளிய தெய்வ சபைக்கேற்பத் தேவர் பிரான் திருவுருவஞ் செய்தருளிவீராக"* என்றதும், சித்தேசர் திருவுளமகிழ்ந்து திருச்சபையைச் சூழத் திரைகோலச் செய்து, அதனுள்ளே ஒரு முகூர்த்தமளவும் அமர்ந்து, இரண்டா முகூர்த்தத்திலே திரையோடும் சித்தேசர் மறைந்தருளினார்.
    பின்பு நடராஜர் திருவுருவோடு சிவகாமியம்மைஸதிருவுருவையும் அத் திருச் சபையிலே கோமுனிவர் முதலிய மூவருந் தேவர்கள் யாவருந் தரிசித்தார்கள்.
    பின்னர் அம்முனிவர்கள் மூவருஞ் சிவாகம விதிப்படி உள்ள தூய்மைகள் செய்து, ஞான நடராஜரோடு சிவகாமியம்மையுந் தினந்தோறும் ஆறு காலமும் வழிபாடு செய்து வந்தனர்.
    இவ்விதம் நிகழுங்கால், விசுவகம்மியனால் ஆலயங்கள் அமைத்துப் பஞ்சமூர்த்திகளையும் பரிவார தேவதைகளையும் பிரதிட்டை பண்ணித் திருவிழாச் செய்யத் தொடங்கி, பங்குனி மாதத்து வளர்பிறைச் சஷ்டி திதியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றி, ஒன்பது நாள் தேர்விழா நடத்தினார்கள்.
    பத்தாநாள் உத்திரத்தன்று வெள்ளியம்பலத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்திலே அனைவரும் நிற்க கோமுனிவர் முதலிய மூவரும் அருகே நிற்க, நாரதமுனிவருந் தும்புரு முனிவரும் வீணாகாணஞ் செய்தனர்.
    அகத்திய மகாமுனிவரும் ஆனந்தி முனிவருந் தாளம் ஒத்தவும், மந்து நாதரும் நந்தி பெருமானும் மத்தளத்தை முழக்கினர்.
    திருத்தொண்டர்கள் சிரமீது திருக்கைகளைக் கூப்பி அரகர முழக்கஞ் செய்தார்கள்.
    திருச்சிற்றம்பலம்.
    *திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X