Announcement

Collapse
No announcement yet.

திருப்பதி லட்டு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பதி லட்டு

    திருப்பதி லட்டு


    ஒரு முறை கயிலாயத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தேவர்கள் அனைவரும் ருத்ரகோடி ஜெபம் செய்தனர். அந்த வழிபாட்டில் இறைவனுக்கு என்ன நைவேத்தியம் படைக்கலாம் என்று ஆலோசித்தனர். அப்போது காணாபத்ய திரட்சி எனப்படும், மஞ்சள் பிள்ளையார் வடிவம், விநாயகரின் அருளால் சிறு சிறு உருண்டைகளாக மாறின. அவையே கடலைப்பருப்பு.
    சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உருவான அக்னி அடுப்பானது.
    சுப்பிரமணியர் நெய்யை உரு(வா)க் கினார். புவனேஸ்வரி தாயார் தன் பங்குக்கு, வெல்லப்பாகு கொடுத்தார். ருத்ர கோடி ஜெபம் செய்தவர்கள், அவை அனைத்தையும் கலந்து உருட்டி, லட்டு தயார் செய்தனர். திருப்பதி பாலாஜிக்கு இது விருப்பத்திற்குரியதாக ஆனது. தனது பிரியத்திற்குரிய பிரசாதமாக அதனை ஏற்றுக்கொண்டார். திருப்பதி மடப்பள்ளியில் மகாலட்சுமி தேவி, லட்சுமி பிரசாத தயாரிப்பை மேற்பார்வையிடுவதாக ஓர் ஐதீகம் உண்டு.
Working...
X