🔴சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
いいいいいいいいいいいいい
*சிக்கல் பெயர் வந்த விதம்*
திருவாசகத்தில் மணிவாசகர் *"சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே"* என்று பாாத்துப் பாடியவர்.
ஆனால் ஈசன் எம்பெருமான் அவன் பக்தர்களை சிக்கெனப் பற்றிக் கொண்ட தலம் *சிக்கல்* ஆகும்.
*"சிக்"* என்று ஓரிடத்தினைப் பற்றிக் கொண்டு ஈசன் அமர்ந்ததனால், இவ்வூர் மக்கள் சிக்கல் என பெயரிட்டனர் என்கின்றனர் ஒருசாரர்.
முற்காலமொன்றில் இத்தலத்தில் *பால்குளம்* ஒன்று இருந்தது. இத்தலம் வந்த வசிஷ்டமுனி பாலிலிருந்து வெண்ணெய் திரட்டி வரச் செய்தார். அவ்வெண்ணையினைக் கொண்டு சிவலிங்கவுரு செய்து வணங்கினார்.
பூஜை முடித்து வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முற்பட்டார் வசிஷ்டமுனி. அது கல்லாக மாறி *"சிக்கென"* ஒட்டிக் கொண்டது. வெண்ணெய் கற்சிலையாகிக் கொண்டனதாலும் சுவாமிக்கு *திருவெண்ணெய் நாதர்* என திருநாமம்.
இதையே தான் ஒருசாரர்,,. சிக் என்று கல்லாக மாறி அமர்ந்து விட்டதால், இவ்வூரை சிக்கல் என்பர்.
*ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் அர்ச்சனை.*
*1 அத்திரி,*
*2 வசிஷ்டர்,*
*3 காஷ்யபர்,*
*4 கவுதமர்,*
*5 பரத்வாஜர்,*
*6 விஸ்வாமித்திரர்,*
*7 ஜமதக்னி,* ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகளாவர்.
வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் இருக்கும் *சப்தரிஷி* என்கிற மண்டலத்தில்தான் இந்த ஏழு முனிவர்களும் வாழ்ந்து வருபவர்கள்.
இந்த ஏழு சப்த முனிவர்களும் தினமும் மாலை நேரம் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய காசிக்கு வருவார்கள்.
இதனையடிப்படையாகக் கொண்டுதான் தினமும் 7.00 மணி முதல் 8.30 மணி வரை *சப்தரிஷி பூஜை* என பூசனை புரிகிறார்கள்.
சப்த ரிஷிகான ஏழு முனிவர்கள் இந்நேரம் கொண்டு வணங்க வரும் ஐதீகத்தால், காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் ஏழு பாண்டாக்காளர்கள் ( பாண்டாக்கள் என்றால் அர்ச்சகர்கள்) விஸ்வநாதரை சுற்றியமர்ந்து பூசனை செய்வர்.
வில்வ இலைகளால் அர்சித்தபடி சிவனுக்கு மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கமாக ராகமாகப் பாடுவார்கள்.
பாண்டாக்காளர்கள் ஏற்ற இறக்கமாக பாடுவதை பார்ப்பவர்களின் உரோமக்கால்கள் சிலிர்த்து கண்கள் கலங்கி தொன்டைவலித்து நா தழுதழுக்கும். நா தழுதழுக்க வேண்டும். அப்படியொரு உணர்வு உண்மையான அடியார்களுக்குத்தான் தோன்றும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends