Announcement

Collapse
No announcement yet.

12 tirumurai 1st songs

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 12 tirumurai 1st songs

    *பன்னிரு திருமுறை*
    *திருச்சிற்றம்பலம்*
    *முதல் திருமுறை*
    *திருப்பிரமபுரம்*
    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
    *இரண்டாம் திருமுறை*
    *திருமயிலாப்பூர்*
    மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
    துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
    *மூன்றாம் திருமுறை*
    *கோயில்*
    ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
    அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
    நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
    பாடினாய்மறை யோடுபல் கீதமும்
    பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
    சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
    *நான்காம் திருமுறை*
    *திருவதிகை*
    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
    கொடுமைபல செய்தன நானறியேன்
    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
    *ஐந்தாம் திருமுறை*
    *திருவண்ணாமலை*
    காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
    தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
    கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
    ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.
    *ஆறாம் திருமுறை*
    *கோயில்*
    அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
    வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
    பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
    பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
    *ஏழாம் திருமுறை*
    *திருவெண்ணெய்நல்லூர்*
    பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
    எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
    வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
    அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
    *எட்டாம் திருமுறை திருவாசகம்*
    *திருச்சதகம்*
    மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்
    கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
    பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
    கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.
    *எட்டாம் திருமுறை. திருக்கோவையார்*
    திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
    மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
    உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே.
    *ஒன்பதாம் திருமுறை. திருவிசைப்பா*
    ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
    தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
    சித்தத்துள் தித்திக்கும் தேனே !
    அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
    அம்பலம் ஆடரங் காக
    வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே.
    *ஒன்பதாம் திருமுறை திருப்பல்லாண்டு*
    மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
    பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
    அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
    பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
    *பத்தாம் திருமுறை. திருமந்திரம்*
    ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.
    *பதினோராம் திருமுறை*
    மதிமலி புரிசை மாடக் கூடற்
    பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
    கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
    மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
    பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
    குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
    குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
    செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
    பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
    தன்போல் என்பால் அன்பன் தன்பால்
    காண்பது கருதிப் போந்தனன்
    மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
    *பன்னிரண்டாம் திருமுறை*
    உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
    *திருச்சிற்றம்பலம்.*
Working...
X