Announcement

Collapse
No announcement yet.

Perur temple part22

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part22

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ( 22 )
    கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்..
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    சுந்தரமூர்த்தி நாயனார் வரு முன்னரே உயர்தினைப் பொருளும், அஃறினைப் பொருளுந் தாமேயென்று வேதங்கள் எடுத்தோதற்கேற்ப, முன்பு வேதியராய்த் தம்மைக் காட்டிப் பயனைக் கொடுத்த சிவபிரான் இழிந்தவராயுங் காட்டத் திருவுளங்கொண்டு, பள்ளனாகித் திருவிளையாட்டினால் வயில் வேலைக்குச் சென்றனர்.


    உமாதேவி யம்மையாரும் பள்ளியாகி கழனியிலே தொழில் செய்யத் தொடங்கினார். விநாயக் கடவுளும், முருகக்கடவுளும் பள்ளச்சிறராய் வயலின்கண் விளையாடினார்கள்.


    அரிபிரமேந்திராதி தேவர்கள் நுகமும் கலப்பையும் மேழியும், கொழுவும், வாரும், கயிறும், கோலும், கடாவும், வித்தும், நாறும் ஆகிய எல்லாமாகி வந்தார்கள்.


    சிவகணநாதர்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாய்ச் சிவபிரானாகிய பட்டிப்பள்ளர் ஏவல்வழி உழுகின்றவரும், நீர்பாய்ச்சுகின்றவரும், வரப்பின் அருகு சீக்கின்றவரும், பரம்படிக்கின்றவரும், நாற்று நடுகின்றவரும் விதைக்கின்றவரும் ஆனார்கள்.


    இலக்குமி, சரசுவதி, இந்திராணி முதலாயினோர் பள்ளிகளாய், உமாதேவியராகிய பச்சைப் பள்ளியோடு நாற்றுநட்டார்கள்.


    இங்ஙனம் இவர்கள் கழனியில் தொழில் செய்துகொண்டிருந்த போது ஆலயத்திற் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் சிவபிரானை அங்கே தரிசிக்கக் காணப்பெறாமல் இடபதேவரை வினவினார்.


    அதற்கு இடபதேவர், வன்றொண்டனுக்கு ஒன்றுஞ் சொல்லவேண்டாமென்று சிவபிரான் ஆணையிட்டபடியால் கண்ணினாற் சாடை செய்து காட்ட, அக்குறிப்பினையறிந்து கொண்ட வன்றொண்டர் வயலுக்கு வந்து தேடினார்.


    அப்படித் தேடியதில், நாற்று நடவிக் கொண்டிருந்த சுவாமியையும் அம்மையையுங் கண்டு வணங்கினார்.


    நாயனாரோடு சிவபெருமான் கரையேறிக் காஞ்சிமா நதியில் ஸ்நானஞ் செய்து ஆலயத்தை அடைந்து இடபதேவரின் முகத்தை மண்வெட்டிக்கருவியால் சேதிக்க, அதற்கு இடபதேவர் அஞ்சி வணங்கிக் கொம்பினாலே ஒரு தீர்த்தம் அகழ்ந்து சிவலிங்கந் தாபித்துப் பூசித்துக் குற்றத்தினின்று நீங்கினார்.


    பின்னர் சிவபெருமான் வெள்ளியம்பலத்திலே திருநடனஞ் செய்தார். அதனைத் தரிசித்து நாயனார் பொன் தரும்படி பாடியுங் கொடாமல் உனது பாட்டுக்குப் பரிசில் நமதட்டே என்றும், இது முத்தித் தலமாதலால் மற்றைய தலங்களில் பொன் தருவோம் சேரமானுக்கும் உன் செய்தி தெரிவித்தோம் என்றுஞ் சிவபிரான் அருளிச் செய்தனர்.


    நாயனார் விடைபெற்றுப் பல தலங்களையும் பணிந்து, திருமுதுகுன்றில் சென்று பொன் பெற்று, ஆற்றிலிட்டுக் கடம்பூர் வணங்கி, சிதம்பரஞ் சேர்ந்து பொன்னம்பலத்திலே ஞானநடராஜர் திருப்பேரூரின் கண்ணதாகிய வெள்ளியம்பல நடனத்தைக் காட்ட தரிசித்து, மடித்தாடு மடிமைக்கண்" எனத் திருப்பதிகம் எடுத்து, அதில் "பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே" என்று சிறப்பித்துப் பாடியருளித் திருவாரூர் சேர்ந்து, ஆற்றிலிட்ட பொன்றைக் குளத்திலெடுத்துப் பரவையாருக்குக் கொடுத்துச் சோணாட்டுத் திருப்பதிகளையும், நடுநாட்டுத் திருத்தலங்களையும் தொண்டை நாட்டுத் திருத்தலங்களையுந் தொழுது, காஞ்சியில், திருவேகம்ப முதலிய தலங்களைத் தரிசித்துத் திருவோண காந்தன்றளியிற் பொன் பெற்றுத் திருவொற்றியூர் உற்று, சங்கிலியாரை மணந்து வாழ்ந்து திருவாரூர் சேர்ந்து, பரவையார் ஊடல் தீர்க்கும்படி தூது செல்லும் வண்ணம் பாடி, நாகைக் காரோணத்திற் பல பொருள் பெற்றுத் திருவாரூரிற் சேரர்பிரான் வர, அவரோடு கலந்து, மலைநாட்டுக்குச் செல்லும்போது, மத்தியிலே, திருவையாற்றிற் காவேரி நதியைத் தடுத்துத் தரிசித்துத் திருவஞ்சைக் களஞ்சேர்ந்து, சேரமான் பெருமானாயனாரிடத்தே பெரும் பொருள் பெற்றுத் திரும்புங்கால் வழியிலே பறிகொடுத்து திருமுருக பூண்டியிலே அதைத் திரும்பப் பெற்றுத் திருவாரூருக்குச் சென்று, மீண்டும் மலைநாட்டுக்குச் செல்லும் மார்க்கத்திலே, திருப்புக் கொளியூரிலே, முதலைவாய்ப் பிள்ளைதரும் வண்ணம்பாடி, திருவஞ்சைக் களஞ்சேர்ந்து, வெள்ளை யானை மீது திருமாலதி தேவர்சூழத் திருக்கைலாச மலையைச் சேர்ந்து, சிவபெருமானுக்குப் பழைய திருத்தொண்டு செய்து கொண்டிருந்தனர். பரவையாரும், சங்கிலியாரும் முறையே கமலினியாரும், அநிந்திதையாருமாகித் திருக்கைலாசத்தை அடைந்து, உமாதேவியாருக்குத் திருப்பணி செய்து கொண்டிருந்தனர்.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X