Announcement

Collapse
No announcement yet.

Perur temple part23

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part23

    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(23)*
    ☘ *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அழகிய திருச்சிற்றம்பலப் படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை அடுத்து வணங்கிச் சென்று, தில்லைச் சிற்றம்பலத்திலே திரு நடராசரைப் பாடுந் திருப்பதிகத்தில் *"பேரூர்ப் பெருமானைப் பெற்றோம்"* என்று அருளிச் செய்த தேவாரத்தைத் தில்லைவாழந்தணர் கேட்டு நாயனாரை நோக்கி இத் தில்லைத் தலம்போல் இவ் வுலகத்திலே ஒரு தலம் உண்டோவென வினவியதற்கு, *"இக் கனகசபையிலே,* தாண்டவஞ் செய்வது போலத் திருப்பேரூர் வெள்ளியம்பலத்திலே சிவபிரான் திருநடனஞ் செய்தருளுகின்றார்.


    அத்தலத்தில், *முத்தி தருவதன்றி, தருமார்த்த காமங்களைத் தருவதில்லை"* என்று நாயனார் நவின்றார்.


    உடனே தில்லைவாழந்தணர் திருப்பேரூரைச் சேர்ந்து, காஞ்சிமா நதியில் மூழ்கியெழுந்து திருமேனியிலே, சிவச்சின்னங்களாகிய திருநீறும் கண்டிகையும் பூண்டு, சுவாமியையும் அம்மையையுந் தரிசித்து, அரசம்பலவாணரை வணங்கி, மற்றைநாள், காலவனீச்சரத்திற்கு அக்கினித் திக்கிலே சிவலிங்கந் தாபித்துப் பூசித்து அங்கே வசித்தார்கள்.


    அப்பொழுது வெள்ளியம்பலத்திலே, சிவபிரான் திருநடனஞ் செய்ய அதனை தில்லைவாழந்தணர்கள் தரிசித்து, ஆன்மாவுஞ் சிவமும் அத்துவிதமாய், மனம் அழிந்து அவசமாய் நின்று துதித்து விடைபெற்று க் கீழைச் சிதம்பரஞ் சேர்ந்து பண்டைக்காலம் போல் வாழ்ந்திருந்தனர்.


    அவ்வந்தணர் பூசித்த ஆலயத்திற்கு *அழகிய திருச்சிற்றம்பலமென்றும்,* சுவாமிக்கு *அழகிய திருச்சிற்றம்பல முடையாரென்றும்* பெயர்.


    இக்கோயில் காலவேசுவரத்திற்குத் தென் கீழ்த் திசையில் உள்ளன. இக்கோயிலில் எழுந்தருளிய பெருமானுக்கு *இடங்கை நாயகேசுவர முடையார்* என்ற பெயரும் உண்டெங்கின்றது புராணம்.


    திருச்சிற்றம்பலம்.


    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கின்றான்.*
Working...
X