Announcement

Collapse
No announcement yet.

Perur temple part 25

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part 25

    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ( 25 கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    விம்மிதப் படலம்.
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    திருப்பேரூரிலே சிவமாகிய வெள்ளியங்கிரியில், அநேக விம்மிதங்கள் உள்ளன. யாவை எனில்? தன்னை யடுத்தவரை அயலோர் கண்ணுக்குக் காட்டாத திவ்வியாஞ்சனமரம், காலிற் பாதுகையாகத் தரித்தால் ஆகாயத்திற் கொண்டு செல்லும் மரம், பசிதாகந் தீர்க்கும் மரம், காயசித்தி தரும் மரம், யோகசித்தி மரம் முதலிய மரங்களும், மாங்கிசபேதி முதலியனவும், வசியாதிகளைத் தருவனவுமாகிய கொடிகளும், செடிகளும், அயக்காந்த முதலியவும், நாற்கோட்டு யானைகளும், நவரத்தினங்களும், அவைகள் விளை நிலங்களும், சலத் தம்பஞ் செய்தல் முதலிய மணிகளும், ரசமணிக்கிணறு முதலியவும், அற்புதக் குகைகளும், அற்புதமான சரசுகளுமாம்.


    இவ்வெள்ளி மலைக்குத் தென்பால் ஏமகிரியில், ஏமபுரம் ஒன்றுண்டு.


    அதில் விரிந்த குகையும், அவ்விடத்தில் ஒரு தாமரையோடையும் உள்ளன.


    இத்தாமரையோடை சருவ சித்தியையுந் தரக்கூடிய வல்லமை கொண்டது.


    இம்மலைக்கும் தெற்கேயுள்ள இடத்தில் அப்போதைய காலத்தில் பாற்கிணற்றுநீர் பெருகியிருக்கும்.


    இந்த பாற்கிணற்று நீரை அள்ளியுண்டால் ஆறுமாத காலம் பசியுண்டாகாது. ( பசி தாங்கும்.)


    இதற்கும் கீழ்த் திசையில் மூன்று யோசனை ஒளிவிடும் சோதிமரம் உண்டு. அதனருகே சர்க்கரை நதி என ஒரு நதி உண்டு.




    இந் நதிக்கரையில் சித்தர் சாத்தியர் தங்குவர். இந் நதிக்கும் மேலாக அத்திமரச் சோலை உண்டு. இவ்விடத்தில் முனிவர் முதலானோர் தவஞ் செய்தனர்.


    இதன் பக்கத்தேச் சேர்ந்த இடத்தில் பொருளைக் கல்லாக்குஞ்சிலா நதி தீரத்தில், கருதியவுடன் மரணமும் முத்தியுஞ் சித்திக்கும். இங்கே ஔடதங்கள் அநேகமாக உள்ளன.


    இதன் வடக்கேயுள்ள குங்கிலிய மரப்பாலினால் அநந்த சித்திகளாகும். இதன் ஈசானத் திக்கிலிருக்கும் பளிங்குமலைச் சிலையினாற் சிவலிங்கம் இயற்றிப் பூசித்தால் விரைவிலே சிவபிரான் கருணை புரிவார்.


    இப்படிக வரையின் வடபக்கத்தில் ஒரு பெரிய குகை உண்டு. அதற்கடுத்தால் பாரதசரசின் கரையில், கோடி தூணுடைய கனகமண்டபம் இருந்தது.


    இக்கனக மண்டபத்தினுள் சிவலிங்கப் பெருமான், விநாயகக் கடவுள், முருகக் கடவுள், அரிபிரமேந்திராதி தேவர்கள் வழிபடும் வண்ணம் எழுந்தருளியிருந்தார்கள்.


    இங்கே காலந்தோறும் முழங்கும் பஞ்ச துந்துபியின் ஒலி முத்திகாமிகள் செவிக்குப் புலப்படும்.


    இம்மண்டபத்தின் வடமேற்கு, தென்மேற்கு ஓடைக் கரையில், சந்தானகரணி முதலிய பல மருந்துகள் உண்டு.


    அங்குள்ள சந்தன மரச் செரிவில் ஐந்துதலை நாகம், ஏழுதலை நாகங்கள் இயங்கின.


    பிரமகிரியில் சிலாநதி உண்டு. விட்டுணு மலையில், விட்டுணு தீர்த்தம் ஏல முதலியன அதிசயமாக உள்ளன.


    மருதவரையில், காமதேனு உலாவும் வடகயிலைச் சாரலிலே, இறவாப்பனையும், பிறவாப் புளியும் உறையும்.


    பன்னீர்மரமாகிய சித்தேசமரம் ஆதிலிங்க மூர்த்திக்கு அருகேயுள்ளது. அங்கே காஞ்சிமரம் உண்டு. அதன் மூலத்தினின்று செல்லும் நதியே காஞ்சிமா நதியெனப் பெயர்.




    திருச்சிற்றம்பலம்.
Working...
X