Announcement

Collapse
No announcement yet.

silence as per Vedatri Maharishi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • silence as per Vedatri Maharishi

    மவுனம் (Silence) :-
    .
    "இந்த மனதைக் கொண்டுதானே நாம் எல்லாக் காரியங்களையும் நடத்துகிறோம். இன்பம், துன்பம், பெரியது, சிறியது எல்லாம் மனம் படுத்துகிற பாடு. அல்லது நாம் மனத்தால் படும்பாடு. கவனித்துப் பாருங்கள் எல்லாரும் சொல்கிறார்கள், "மனதை கட்டுப்படுத்த முடியவில்லை" என்று. நான் கேட்கிறேன் "ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?" என்று. "இல்லை. நான் மெடிட்டேஷனில் உட்கார்ந்தால் கொஞ்ச நேரம் கூட மனம் நிற்க மாட்டேன் என்கிறது" என்று சொல்கிறார்கள். இதுவரையில் என்னென்ன சேர்த்து வைத்தோமோ அதெல்லாம் இருப்பு கட்டி இருக்கிறது. நீ கண்ணால் பார்க்காதபோது எதுவும் வேண்டுமென்று நினைக்காத போது அந்த இருப்பெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அதுதான் இறைவனுடைய செயல். "நீ என்ன வைத்திருக்கிறாய் பாரப்பா! இன்னது வைத்திருக்கிறாய் இன்னதை போட்டாய்" என்று ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்துக் கொண்டே இருக்கிறான். இங்குதான் மவுனத்தினுடைய பெருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
    .
    மவுனம் இருக்கும் போது ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கிறது இல்லையா? நம் இருப்பை கணக்கெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இவ்வளவு சமாச்சாரத்தை வைத்துக் கொண்டுள்ளோம் நாம். எது எது நமக்குத் தேவை எது எது நமக்குத் தேவையில்லை என்று பார்த்து தேவையில்லாததெல்லாம் எடுத்துப் போட வேண்டியது தானே. புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள். இரண்டு வரி படிக்கும் வரைக்கும் உருக்கமாக போகிற மாதிரி இருக்கும். அதற்குமேல் கண் அங்கே இருக்கும். மனம் எங்கெங்கோ போய்விடும். ஏன் போகிறது? இதுவரைக்கும் நிலைத்துப் பழகவில்லை. மனதை நிலைத்து நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்வதற்கு பழக்கவில்லை. மனம் நாம் எந்த வழியில் விட்டோமோ அந்த வழியில் போய்க்கொண்டேயிருக்கும்.
    .
    அதற்காக மனதை பழக்குவதற்கு மவுனம். மவுனத்தில் உள்ளே இருக்கும் இருப்பை கணக்கு எடுத்துவிட்டீர்கள். கணக்கு எடுத்துவிட்டு அத்தோடு விட்டு விட்டால் பிரயோஜனம் இல்லை. எது தேவை எது தேவையில்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். தேவை இல்லாததெல்லாம் ஏன் சேர்த்து வைத்தோம்? அறியாமையினால் சேர்த்தது இருக்கும், இன்னொருவரைப் பார்த்துச் சேர்த்தது இருக்கும். பேராசையினால் சேர்த்தது இருக்கும். அதையெல்லாம் எடுத்துப் பார்த்து இது தேவையில்ல என்று எடுத்துவிட வேண்டும். ஒரு கருத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து இது அறியாமையினால் வந்தது, அந்த ஆளைப் பார்த்தேன், அவரைப்போல நானும் ஆக வேண்டும் என்று நினைத்தேன், அதில் வந்தது. அது ஏன் எனக்கு? அது வேண்டாம் என்று தள்ளவேண்டும். இப்படியாக ஒவ்வொரு தேவையில்லாத எண்ணத்திற்கும் முடிவைக் கொடுத்தால் தெளிவைக் கொடுத்தால் அனாவசியமாக சேர்த்து வைத்துக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டியதில்லை.
    .
    முன்பெல்லாம் ஈயப்பாத்திரங்கள் ஜாஸ்தியாக இருக்கும். பாத்திரம் உடைந்து போயிற்று என்றால், வளைந்து போயிற்று என்றால் அப்பாத்திரத்தை உருக்கி ஊற்றுவார்கள். மீண்டும் புதிய பாத்திரமாகிவிடும். அதேபோல நம்முடைய கருமையத்தில் என்ன என்ன அழுத்தி வைத்திருக்கிறோமோ அதையெல்லாம் எடுத்துப் பார்த்து தீய எண்ணங்களை எடுத்து விட்டு புதிய எண்ணங்களை உருக்கி ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். 'மவுனம்' (Silence) என்பது வாய் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது மாத்திரம் அல்ல... ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டுமானால் அதற்கென அகத்தாய்வு (Introspection) என்ற மனதை ஆராயும் பயிற்சி....
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Working...
X