Announcement

Collapse
No announcement yet.

கனிமங்கள் -- 1.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கனிமங்கள் -- 1.

    வேகமாய் சாகிறது பூமி !
    தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். ( Total dissolved solids ) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ்.-ஸின் அளவி 300 புள்ளீகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் நீரில் டி.டி.எஸ் ஸின் அளவு 3,000 -தைத் தாண்டிவிட்டது.
    ஆற்று நீர், கடல் நீர், குடி நீர் இந்த மூன்றுவிதத் தண்ணீன் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் சூரையாடுகின்றான்.
    கடல் நீர் : 'கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரிங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்த கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாகைருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும்,ஆலைக் கழிவு நீரும், பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலில் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேறவேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டுமல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது',
    -- பேராசிரியர் லால்மோகன் கூறக் கேட்டது.
    -- டி.எல். சஞ்சீவிகுமார்.
    -- ஆனந்த விகடன். 13-2-2013.
Working...
X