Announcement

Collapse
No announcement yet.

Brahma muhurtham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahma muhurtham

    பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்


    பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும். இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.


    மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது. அவையாவன :


    1. रुद्र मुहुर्त --------- ருத்ர முஹுர்த்தம்---------------06.00AM – 06.48AM
    2. आहि मुहुर्त - ஆஹி முஹுர்த்தம்--------- 06.48am –07.36am
    3. मित्र मुहुर्त -- மித்ர முஹுர்த்தம்------------------- 07.36am – 08.24am
    4. पित्रु मुहुर्त--------- பித்ரு முஹுர்த்தம்----------------- 08.24am – 09.12am
    5. वसु मुहुर्त--------- வசு முஹுர்த்தம்-------------------- 09.12am – 10.00am
    6. वाराह मुहुर्त------- வராஹ முஹுர்த்தம்------------- 10.00am – 10.48am
    7. विश्वेदेवा मुहुर्त -- விச்வேதேவாமுஹுர்த்தம்---- 10.48am – 11.36am
    8. विधि मुहुर्त-----விதி முஹுர்த்தம்------------------- 11.36am – 12.24pm
    9. सुतमुखी मुहुर्त---- சுதாமுகீ முஹுர்த்தம்------------ 12.24pm – 01.12pm
    10. पुरुहूत मुहुर्त----- புருஹூத முஹுர்த்தம்---------- 01.12pm – 02.00pm
    11. वाहिनी मुहुर्त---- வாஹிநீ முஹுர்த்தம்------------ 02.00pm – 02.48pm
    12. नक्तनकरा मुहुर्त நக்தனகரா முஹுர்த்தம்------ 02.48pm – 03.36pm
    13. वरुण मुहुर्त------ வருண முஹுர்த்தம்-------------- 03.36pm – 04.24pm
    14. अर्यमन् मुहुर्त--- அர்யமன் முஹுர்த்தம்---------- 04.24pm – 05.12pm
    15. भग मुहुर्त------- பக முஹுர்த்தம்--------------------- 05.12pm – 06.00pm
    16. गिरीश मुहुर्त---- கிரீச முஹுர்த்தம்----------------- 06.00pm – 06.48pm
    17. अजपाद मुहुर्त--- அஜபாத முஹுர்த்தம்------------ 06.48pm – 07.36pm
    18. अहिर्बुध्न्य मुहुर्तஅஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm
    19. पुश्य मुहुर्त----புஷ்ய முஹுர்த்தம்-------------- 08.24pm – 09.12pm
    20. अश्विनी मुहुर्त---அச்விநீ முஹுர்த்தம்------------ 09.12pm – 10.00pm
    21. यम मुहुर्त------- யம முஹுர்த்தம்------------------ 10.00pm – 10.48pm
    22. अग्नि मुहुर्त----- அக்னி முஹுர்த்தம்------------- 10.48pm – 11.36pm
    23. विधात्ऱ् मुहुर्त--- விதாத்ரு முஹுர்த்தம்-------- 11.36pm – 12.24am
    24. कण्ड मुहुर्त------ கண்ட முஹுர்த்தம்------------- 12.24am – 01.12am
    25. अदिति मुहुर्त---- அதிதி முஹுர்த்தம்-------------- 01.12am – 02.00am
    26. जीव/अम्र्त मुहुर्त ஜீவ/அம்ருத முஹுர்த்தம்--- 02.00am – 02.48am
    27. विश्णु मुहुर्त----- விஷ்ணு முஹுர்த்தம்------------ 02.48am – 03.36am
    28. द्युमद्गद्युति मुहुर्त- த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-- 03.36am – 04.24am
    29. ब्रह्म मुहुर्त------ பிரம்ம முஹுர்த்தம்--------------- 04.24am – 05.12am
    30. समुद्रम् मुहुर्त--- சமுத்ரம் முஹுர்த்தம்------------ 05.12am – 06.00am


    மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்மமுகூர்த்தமாகும். இவற்றுள் 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும்.
    (அதிகமாக பகிரவும். உலகம் தெரிஞ்சு கொள்ளட்டும் சனாதன தர்மத்தின் மகத்துவம்)
Working...
X