Tirupanjili shiva temple
சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
☘ *அப்பருக்கு அன்னமிட்ட ஈசன்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திருப்பைஞ்ஞீலி தலம்.


பைஞ்ஞீலி என்றால் பசிய நிறம் எனப் பொருள்.


அரிய வகையான பசிய நீலநிற வாழைமரத்தடியில் லிங்கப் பரம்பொருள் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்ததால் இத்தலம் திருப்பைஞ்ஞீலி எனப் பெயர் உண்டானது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஈசனுக்கும் பைஞ்ஞீலி நாதர், நீலகண்டன் எனும் திருநாமங்களும் உண்டு.


ஒருமுறை இந்நாட்டில் மழையில்லாமல் வறச்சி மிகுந்து பயிர்கள் வாடிக் கருகியது. பஞ்சம் உண்டானது.


மீந்த பயிர்களை பாதுகாக்க வேண்டிப் பரமேஸ்வரனைத் தொழுது துதித்தனர். மழையைப் பொழிந்து அருளுமாறு வேண்டினர்.


உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கி வேண்டிக் கொண்ட விவசாயிகளுக்காக, அவர்கள் வேண்டிக் கொண்ட அருளுக்காக வள்ளல் நாயகன் வெண்மேகங்களைத் தோன்றச் செய்து மழையைப் பொழிவித்தருளினார்.


விவசாயப் பெருங்குடி மக்கள் மிகவும் மகிழ்ந்து போய் பன்னிரெண்டு வேலி நிலத்தைப் பரமசிவனுக்குக் காணிக்கையாக அளித்தனர்.


பின் மழை பல நாட்களாகியும் மழை நிற்கவில்லை. தொடர்ந்து விடாது மழை பெய்து கொண்டே இருந்தது.


இப்போது விவசாயப் பெருங்குடி மக்கள் மழை வெள்ளத்தை நிறித்தியருளுமாறு வருந்தி வேண்டினார்கள்.


அன்பரான அகிலாண்டேஸ்வரனும் விவசாயப் பெருங்குடி மக்களின் வருத்தத்தைப் போக்கும் வண்ணம் மழை வெள்ளத்தை நிறித்தினார்.


வேண்டிக் கொண்ட வேண்டுதலுக்கெல்லாம் பெருமான், வேண்டுதலை அருளித் தந்த கருணைக்கு மனம் நெகிழ்ந்து மீண்டும் பன்னிரண்டு வேலி நிலத்தை மும்மூர்த்தியான பெருமானுக்குக் காணிக்கையாக கொடுத்தனர்.


மொத்தமாகச் சேர்ந்த இருபத்து நான்கு வேலிகளுக்குண்டான இடத்தில், ஆளுடைய கருணையாளனுக்குக் கோயில் கட்ட மக்கள் முடிவெடுத்தனர்.


அப்போது கர்ப்பகிரகத்தை எங்கு எங்ஙனம் அமைப்பது என மக்கள் குழப்பத்திலிருந்தனர்.


அப்போது பசிய நீல வாழை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளாக வெளிப்பட்டுக் காட்சி தந்தார் ஈசன்.


முக்கண் முழு முதலின் ஓங்கார வடிவைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அங்கேயே பெரிய கோயிலைக் கட்டினார்கள். இவ்விடத்தில் நிலைபெற்றிருந்த பசிய நீல வாழைமரமே தலமரமாக விளங்கிற்று.


ஒரு சமயம் அப்பர் பெருமான் திருப்பைஞ்ஞீலிக்கு எழுந்தருள வந்தார். அச்சமயம்.அப்பர் பெருமான் மிகுந்த பசி தாகத்துடன் இருந்தார்.


பஞ்சம் விரட்டியொழித்த வள்ளலான ஈசன், அந்தண வடிவு கொண்டு , பொதிச் சோறு எடுத்து வந்து திருநாவுக்கரசு சுவாமிகளிடம் தந்து மறைந்தருளினார்.


மதுரைப் பெருநகரில் தண்ணீர் பந்தல் வைத்து நன்னீர்ச் சேவகன் ஆகிய நந்தீஸ்வரன் சோறும், தண்ணீரும் திருநாவுக்கர பெருமானுக்கு அளித்ததால் *சோறு உடைய பெருமான்* எனத் திருநாமத்தைக் கொண்டார்.


திருவீழிமிழலையில் 999 செந்தாமரை மலர்களை அர்சித்துப் ஆயிரமாவது மலருக்காக கண்மலரை அர்சித்துப் பூஜை புரிந்த மகாவிஷ்ணுவுக்குச் சுதர்சனம் எனும் சக்கரத்தைச் சிவபெருமான் அருளிச் செய்தார்.


சக்கரத்தைக் கையில் ஏந்திக் கொள்ளும் பேறு பெற்ற திருமால், திருப்பைஞ்ஞீலி தலத்திற்கு வந்து பரமேஸ்வரனைத் தொழுது வழிபட்டு பரமனின் பெருங்கருணைக்கு மனம் நெகிழ்ந்தார்.


இத்தலத்தின் தலவிருட்சம் கல் வாழை. இக்கல் வாழை தல விருட்சம் அறுபத்து நான்கு சதுர் யுகங்களாக தளர்ந்து வளர்ந்து வருகிறது.


வாழையைத் தல விருட்சமாக பெற்றிருக்கும் கோயில் இதுவொன்றே!


. திருச்சிற்றம்பலம்.


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*