அனுமன்ஜெயந்தி!


இராமர், "சொல்லின் செல்வன்" என்று அனுமனுக்கு பட்டம் தந்து பாராட்டினார்.
அதேபோல், "எழுத்து வித்தகர்" என்று சீதை, ஆஞ்சநேயரை பாராட்டிய சம்பவம் ஒன்றும் நடந்தது.


இராவணனை போரில் வீழ்த்தி வென்றார் இராமர். இந்த தகவலை சீதையிடம் சொல்ல அனுமன் சென்றார். அந்த சமயம் சீதையை கண்ட ஸ்ரீஅனுமனுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை. அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.


ஆஞ்சநேயரின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை கண்ட சீதை, இராமருக்கு ஏதும் ஆபத்தோ என பயந்து போனார். அப்போது அங்கு இருந்த மணலில், "ஸ்ரீராம ஜெயம்" என்று எழுதினார் அஞ்சநேயர். போரில் ஸ்ரீஇராமருக்கு வெற்றி என்பதை மிக ரத்தின சுருக்கமாக "ஸ்ரீ இராம ஜெயம்" என்று அனுமன் எழுதியதை கண்ட சீதை மகிழ்ந்தார். "எழுத்தின் வித்தகன் நீ" என்று சீதை, அனுமனை பாராட்டினார்.


அனுமன் எழுதி காட்டிய "ஸ்ரீ இராம ஜெயம்" என்கிற வாக்கியம், மந்திர சொல்லாக இன்றும் நமக்கு எண்ணற்ற வலிமையை-ஆற்றலை-நல்வாழ்க்கையை-வெற்றியை தந்துக்கொண்டிருக்கிறது.


அவரவருக்கு என்னென்ன இன்னல்கள் இருந்தாலும் அனைத்து இன்னல்களையும் நீக்கி தன் பக்தர்களின் வாழ்வில் மகிழ்சியை அள்ளி தருவார் ஸ்ரீஇராம பக்தரான அஞ்சனை மைந்தர் ஸ்ரீ ஆஞ்சநேயர்.!


யாராலும் சாதிக்க முடியாத செயல்களை
சாதிக்கும் வல்லவனே,
ஸ்ரீராம தூதனே, கருனைகடலே,
என்னுடைய எல்லா செயல்களையும்
சாதித்து தருவீராக வீர ஜெய் ஆஞ்சனேயா !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends