Announcement

Collapse
No announcement yet.

Perur temple part30

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part30

    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(30)*
    *கோவை திருப்பேரூர் திருக்கோவில் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *தல விஷேசப் படலம்.*
    பிரமா ஒரு கற்பத்திலே சிவபெருமான் திருவருளினால், உலகத்தையும் உயிர்களையும் படைத்துப் பல சிவலாயங்களையும் தீர்த்தங்களையும் நிருமித்து, அற்ப உணர்வினால் இறுமாந்திருக்கும்போது திருப்பேரூரும், காஞ்சிமா நதியும் நின்னாற் படைக்கப்பட்டனவோ என்று ஆகாயத்தினின்றும் ஓர் அசரீரி வாக்கு எழுந்தது.


    அந்தக்கனமே பிரமா, தேவர், முனிவர் சூழச் சென்று இமயமலைக் கண்டணதாகிய திருக்கைலாய மலையிலே தேவதேவரைப் பணிந்து திருப்பேரூர் மான்மியத்தைக் கேட்க, அதற்குப் பரமசிவன் அருளிச் செய்வாராயினர்.


    *"பிரமனே நீ பூர்வ பரார்த்தத்திலே சிருட்டித் தொழில் கைகூடும்படி எமதடியிற் பூசித்திருந்த காலையில் நாமே திருப்பேரூரைப் படைத்து நடனமுஞ் செய்தோம்.*


    அற்றைத் தினமுதல் ஆன்மாக்கள் நமதடியிற் கலக்கும் வண்ணம் அனவரதமும் தாண்டவம் புரிகின்றோம்.


    இரசத மலையுமானோம்.


    நமது முடியிலுள்ள கங்கையே காஞ்சிமா நதியாகத் தவழும்.


    அத்தலத்தை அத்தாணித் தானமாகக் கொண்டு வீற்றிருக்கின்றோம்.


    அத்தலம் நித்தியமென்பதற்கு இறவாப் பனையிருத்தல் முதலாயினவே சான்றாகும்.


    நித்தராயிருக்கக் கருதினவர் அங்கே நம்மை வழிபட்டுச் சிரஞ்சீவியா யிருக்கின்றார்.


    முக்தி பெற்றவர் அளவில்லாதவர்.


    விசுவாமித்திரன் அங்கே தவம்புரிந்து வரங்கள் பெற்று வசிட்டனோடு விரோதித்து, பிராமண முனிவனாக நினைந்து மீட்டுந் தவஞ் செய்யுங்கால், அயோத்தி நகரின் அரசனாகிய திரிசங்கு தன் குலகுருவாகிய வசிட்டனையும், அவன் புத்திரரையும் அடுத்து, உடலோடு சுவர்க்கத்தில் வசிக்க விரும்பியவழி, இப்போது அத்துணைப் பக்குவம் உனக்கு அமையாமையாற் சில காலஞ் சென்று யோசிப்போம் என்றதற்கு.......


    *'மற்றொரு குருவைச் சரணம் புகுந்து பெறுவா'* மெனச் சொல்லிய திரிசங்கு, அவ்வசிட்டனாதியாரால், *நீசனாகக் கடவாய்* என்னுஞ் சாபம் பெற்று விசுவாமித்திரனைச் சேர்ந்து நிகழ்ந்தவைகளைக் கூறினான்.


    கூறியதைக் கேட்டதும் விசுவாமித்திரன் ஒரு வேள்வி செய்து திரிசங்குவை இந்திரன் சபை நடுவே இருத்தினான்.


    அங்ஙனம் இத்தியவளவில் இந்திரன் கோபித்து, நீசனாகிய திரிசங்குவைப் பூமியில் விழும்படி தள்ள, அத்திரிசங்கு விசுவாமித்திரனை அழைத்துக் காத்தருளுக என முறையிட்டு விழும்போது, விசுவாமித்திரன் நெய்வார்க்குஞ் சுருக்கை வீசி அந்தரத்திலே திரிசங்குவை நிறுத்தி சில நசஷத்திரங்களைப் பெயர்த்துப் புவனம் படைக்கத் தொடங்கினான்.


    அப்போது அமரர்கள் வணங்கியவளவில், அந்தர சுவர்க்கம் இயற்றி திரிசங்குவை அதிலிருந்து போகம் அனுபவிக்கும்படி செய்து, தவவலிமையால் பிராமண முனியெனும் பெயர் பெற்றனர்.


    இங்ஙனந் தவமுற்றுதலால், *தவசித்திபுர மெனவும், நாம் ஆனந்த தாண்டவஞ் செய்தலால் மேலைச் சிதம்பரமெனவும்,* நமதுருவாகிய வெள்ளி மலையைத் தன்னிடத்துக் கொண்டு பாவத்தைப் போக்கி முத்தியைத் தருதலால்.......


    *திருப்பேரூரெனவும்,*
    *பத்திபுரி,*
    *பரமபுரம்,*
    *கனகபுரி,*
    *போதபுரம்,*
    *நாட்டியபுரம்,*
    *ஆதிபுரி,*
    *வன்மீக நகரம்,*
    *மேருநகரம்,*
    *ஞானபுரம்,*
    *பிரமநகரம்,*
    *குருஷேத்திரம்,*
    *பசுபதிபுரம்,*
    *இரசதசபை,*
    *குந்தகானம்,*
    *சிற்சபை,*
    *கலியாணபுரம்,*
    *போதிக்கானம்,*
    *தேனுபுரம்,*
    பிறவாநெறி ஆதியாகவும் அத்திருப்பேரூர் காரணப் பெயர்கள் பூண்டது என்று திருவாய் மலர்ந்தருளினார்.


    பின்னர் பிரமா விடைபெற்றுத் திருப்பேரூர் சேர்ந்து காஞ்சிமாநதியில் மூழ்கி, சுவாமியையும், அம்மையையும் வணங்கி, வெள்ளியம்பலத்தையும் தரிசித்து, சில தினம் வதிந்து, பின்பு சத்தியலோகஞ் சார்ந்து வாழ்ந்திருந்தார்.


    திருச்சிற்றம்பலம்.


    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


    *அவன் அருள் தானே வரும்.!*
    *அவனருள்தானே வரும்.!*
Working...
X