* பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை ... அலைமகள் என்பர்.
* சரஸ்வதி ... நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர். அதனால் நாமகள் என்றும் பெயருண்டு.
* இமவான் என்பவர் ... பார்வதியின் தந்தை.
* யோக நிலையில் காட்சி தரும் அம்பிகை ... திருவாரூர் கமலாம்பிகை.
* அம்பிகை குயிலாக விளங்கும் தலம் ... மதுரை ( கடம்பவனக்குயில் ).
* 32 அறங்களைச் செய்த அம்பிகை ... காஞ்சி காமாட்சி.
* முதுமை, இளமைக் கோல அம்பிகையரை ... விருத்தாசலத்தில் ( விருத்தாம்பாள், பாலாம்பாள் ) தரிசிக்கலாம்.
* சிவனோடு போட்டி நடனம் ஆடியவள் ... தில்லை காளி.
* உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை ... சமயபுரம் மாரியம்மன் .
* சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளூம் தலம் ... மும்பை மகாலட்சுமி கோயில்.
-- அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு. செப்டம்பர், 23, 2014.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends