Announcement

Collapse
No announcement yet.

Perur temple part35

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part35

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(35)*
    ☘ *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *குசத்துவசன் வரம்பெறு படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    குசத்துவராசன் உலகத்தை ஆளும்போது, புத்திரப்பேறு இசிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(35)*
    ☘ *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *குசத்துவசன் வரம்பெறு படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    குசத்துவராசன் உலகத்தை ஆளும்போது, புத்திரப்பேறு இல்லாது மனங் கவலையுற்று அமைச்சர்களிடம், உலக காட்சியை ஒப்பித்து, பலமலையும், பலவனமும், பலசுரமுங் கடந்து, திருப்பேரூர் எல்லையில் வந்து தூரத்திலே வெள்ளியங்கிரியை வணங்கி, கண்களினின்று மார்பின்கண்ணே ஆனந்தருவி ஒழுகி, உழுவலன்பின் முழுகி மனம் முன்னே செல்ல காஞ்சிமா நதியைப் பணிந்து, அதில் விதிப்படி படிந்து, பக்தியோடு உத்தம வேதியர்க்குத் தானங் கொடுத்து, ஆலயத்தை அடுத்துத் தூலலிங்கமாகிய திருக் கோபுரத்தைச் சேவித்து, இடபதேவருக்குச் சமீபத்திலுள்ள பத்திரலிங்கத்தின் அருகே வந்து பணிந்தெழுந்து, மனங் குழைந்து உருகி, வலம் வந்து, பன்னீர் நிழலின்கண் எழுந்தருளியிருக்கும் முழு முதலாகிய ஆதிலிங்கேசர் பாதாரவிந்தங்களைத் தரிசித்து, மரகதவல்லியம்மை திருவடிகளையும் வணங்கி, பின்பு வெள்ளியம்பலத்தைத் தரிசித்தான்.

    தரிசித்த அற்றை நாள் உபவாசமாய், இரவிலே நித்திரையின்றி மற்றைநாட் காலையில், நித்திய கர்மாநுட்டானங்களை முடித்துச் சிவபெருமான் திருவடிகளைத் தியானித்துத் தவஞ் செய்தான்.

    அங்ஙனம் ஆயிரந் தேவவருடம் ஆகும்போது, சிவபிரான் உமாதேவி சமேதராக இடபரூடராய் எழுந்தருளினார்.

    அப்பொழுது குசத்துவசன் வணங்கித் துதித்துக் கூத்தாடினான்.

    அவனுக்குச் *சிவபெருமான் நம்மை வழிபட்டமையால் இரண்டு பெண்மக்களைப் பெறுவாய்"*

    *மருதவரையில் முருகனை வழிபடுவாயாயின் ஒரு புத்திரனைப் பெறுவாய்* என்று வரங்கொடுத்து மறைந்தருளினார்.

    பின்பு அரசன் மருதவரையில், முருகக் கடவுளை வழிபட்டு வரம்பெற்று முருகக் கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் நித்திய நைமித்திகங்களை நடாத்தி விடைபெற்றுச் சென்று, தன் பதியில் வதிந்து, அறிவறிந்த மக்களைப் பெற்று மனமகிழ்ந்து வாழ்ந்திருந்தான்.

    திருச்சிற்றம்பலம்.

    கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.

    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*ல்லாது மனங் கவலையுற்று அமைச்சர்களிடம், உலக காட்சியை ஒப்பித்து, பலமலையும், பலவனமும், பலசுரமுங் கடந்து, திருப்பேரூர் எல்லையில் வந்து தூரத்திலே வெள்ளியங்கிரியை வணங்கி, கண்களினின்று மார்பின்கண்ணே ஆனந்தருவி ஒழுகி, உழுவலன்பின் முழுகி மனம் முன்னே செல்ல காஞ்சிமா நதியைப் பணிந்து, அதில் விதிப்படி படிந்து, பக்தியோடு உத்தம வேதியர்க்குத் தானங் கொடுத்து, ஆலயத்தை அடுத்துத் தூலலிங்கமாகிய திருக் கோபுரத்தைச் சேவித்து, இடபதேவருக்குச் சமீபத்திலுள்ள பத்திரலிங்கத்தின் அருகே வந்து பணிந்தெழுந்து, மனங் குழைந்து உருகி, வலம் வந்து, பன்னீர் நிழலின்கண் எழுந்தருளியிருக்கும் முழு முதலாகிய ஆதிலிங்கேசர் பாதாரவிந்தங்களைத் தரிசித்து, மரகதவல்லியம்மை திருவடிகளையும் வணங்கி, பின்பு வெள்ளியம்பலத்தைத் தரிசித்தான்.

    தரிசித்த அற்றை நாள் உபவாசமாய், இரவிலே நித்திரையின்றி மற்றைநாட் காலையில், நித்திய கர்மாநுட்டானங்களை முடித்துச் சிவபெருமான் திருவடிகளைத் தியானித்துத் தவஞ் செய்தான்.

    அங்ஙனம் ஆயிரந் தேவவருடம் ஆகும்போது, சிவபிரான் உமாதேவி சமேதராக இடபரூடராய் எழுந்தருளினார்.

    அப்பொழுது குசத்துவசன் வணங்கித் துதித்துக் கூத்தாடினான்.

    அவனுக்குச் *சிவபெருமான் நம்மை வழிபட்டமையால் இரண்டு பெண்மக்களைப் பெறுவாய்"*

    *மருதவரையில் முருகனை வழிபடுவாயாயின் ஒரு புத்திரனைப் பெறுவாய்* என்று வரங்கொடுத்து மறைந்தருளினார்.

    பின்பு அரசன் மருதவரையில், முருகக் கடவுளை வழிபட்டு வரம்பெற்று முருகக் கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் நித்திய நைமித்திகங்களை நடாத்தி விடைபெற்றுச் சென்று, தன் பதியில் வதிந்து, அறிவறிந்த மக்களைப் பெற்று மனமகிழ்ந்து வாழ்ந்திருந்தான்.

    திருச்சிற்றம்பலம்.

    கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.

    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X