பதார்த்த குண சிந்தாமணி எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள் :


* நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
* வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
* மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு.
* 45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் ( nasal drops ) மருந்து விடுவது.
* நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
* வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.


செய்யக் கூடாத விஷயங்கள் :


* முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
* கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
* பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
* நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
* பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
* உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.
* தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம்,
கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :


* உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
* நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.
* வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
* எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.
-- மருத்துவர் கு.சிவராமன் . ( நலம் 360 0 )
ஆனந்த விகடன். 8-11- 2014.
Posted by க. சந்தானம்