Announcement

Collapse
No announcement yet.

Perur temple part42

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part42

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *( 42 )*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    அமோகவர்ஷன் சளுக்கியத் தேசத்திலும், வரகுணன் மதுரையிலும் ஆண்டனர்.


    தேசம் அமைதி பெற்றுக் கல்வியும் சமயப் பிரசாரமும் பெருகியிருந்தது.


    அந்த நேரத்தில்தான் நம்ம நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொங்கு நாட்டிற்கு மூன்று முறை விஜயம் செய்து பேரூருக்கும் வந்தார்.


    அதை அவரே தம் கோயிற்றிருப்பதிகத்தில்,
    *"மீ கொங்கி லணிகாஞ்சி வாய்ப் பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே"* என வியந்தார்.


    அச்செய்தியைக் குறித்துச் சரித்திர உண்மைகள் கூறும் *பெரிய புராணமும்* *பேரூர் புராணம்* முதலிய தல புராணங்களும் கூறுகின்றன. அக்காலம் கி.பி.850 ஆகும்.


    அக்காலத்தில் பின்னாளில் ஒதுக்கப்பட்ட வகுப்பார்களாகிய பள்ளர்களும் கோயில் விழாக்களில் கலந்து கொண்டிருப்பார்கள் என்ற கருத்து , இத்தொடரில் வந்த *பள்ளுப் படலத் திருவிளையாடல் மூலம் வாசித்திருப்பீர்கள்.


    அந்த நாளில் இப் பள்ளுப்படலத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அமைத்த *நாற்று நடவு உற்சவத்* திலே அவர்கள் கலந்து கொள்வது போல வேறு எத்தலங்களிலும் நாம் பார்த்திருக்க முடியாது.


    வகுப்பு உரிமைகள் பல காலங்களில் பலவாறு மாறுபடுதல் சகஜம் என்பதை இந்தச் சரித்திரத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது.


    கி.பி.1565-ல் விஜய நகரம் தொலைந்த போது, 1600-ல் மைசூரார் கொங்கு நாட்டைக் கைப்பற்றினார்.


    ஆனால் சில வருஷங்களுக்குள்ளாக மதுரை அரசர்களான நாயக்கர்கள் கொங்கு நாட்டுக்கு படையெடுத்து வந்து பிடித்து கொண்டனர்.


    பேரூரின்கண் அமைந்துள்ள சிறந்த சிற்ப வேலை கொண்ட கனகசபையானது அக்காலத்தில் ஆண்ட திருமலை நாயக்கர் (1625--1659) சகோதரனான அளகாத்திரி நாயக்கனால் கட்டப்பட்டதென்பர்.


    கனகசபையின் முன்னாலுள்ள ஒரு தூணில் ஆங்கிலேய உடையுடுப்புடன் உள்ள ஒரு போர் வீரனின் சிலையில், ஒரு கையில் துப்பாக்கியைக் கொண்டிருக்கும் சிறப்பு நோக்குதல் வேண்டும்.


    எனவே இச்சபை சமீப காலத்தியவை என்பது தெளிந்த செய்தி.


    இச்சபையினுடே கோயிலைக் கட்டிய அளகாத்திரி நாயக்கரின் உருவத்தையும் ஒரு தூணில் இருந்தன.


    திரும்பப் புதுப்பிக்க புரணமைப்பின் போது, புதுப்பித்த செல்வமான்கள் இச்சிலையைக் கட்டிடத்திலிருந்து விலக்கி வெளியே கொண்டு வைத்து விட்டார்கள்.


    இந்தக் கனக சபையின் அழகைப் பற்றி நாம் வருணித்துக் கொண்டே போகலாம் அவ்வளவு அளவளாகப் பெரியதிசயங் கொண்ட அழகு. இதுவும் இத்தொடரில் பதியப்பட்டிருந்ததை வாசித்திருப்பீர்கள்.


    இராஜேந்திர தேவன் காலத்தில் அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.


    கோபண்ண மன்றாடியார் கர்ப்ப கிருகத்தைப் புதுப்பித்தார்.


    அண்ணாமலை செட்டியார் உள் மிதிலையும், அறுபத்து மூவர் மண்டபத்தையும் கட்டினார்.


    வித்வான் கந்தசாமி முதலியார் பட்டீசர் கோயில் கர்ப்ப மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மையார் ஆலயம் ஆலயம் புதுப்பித்தார்.


    *அரசம்பலவாணர் சந்நிதி*-- இதை சின்னக் கோயில் என்பர். இதுதான் காலவேசுவரம். இங்கே சுவாமியும் அம்மையும் இருக்கிறார்கள். நடராஜர் திருநடனம் செய்த புராதனமான பெரிய அரசமரம் இக்கோயிலில்தான் உள்ளது. வாயிலில் பெரிய ரிஷபம்-- கோபுரத்திற்குப் பதிலாய் மாடியில் இருக்கிறது.


    *பட்டி வினாயகர் சந்நிதி*---இது புதிதாக புதுப்பிக்கப்பட்டவை. இதன் கீழ்தான் நச்சுப் பொய்கை இருப்பதாகக் கூறுவர்.


    *வட கைலாசம்*---இங்கே பிரம தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. பைத்தியம், நாய்க்கடி, முதலிய நோயை இத்தீர்த்தம் ஒழிக்கும். இத்தீர்த்தத்தில் செப்புக் காசுகளை இட்டால், இச்செப்புக் காசுகளில் களிம்பு கிளம்பிப் போய் தங்கக்காசு போல தகதகக்கும். இதன் பிரகாரத்தில் இறவாப்பனை உளன.


    *பட்டி சுற்றும் மேடை-- அரசமரம்---பிறவாப்புளி---ஈசன் பள்ளனான உருவக் கோயில்.*


    *தென் கைலாசம்.* ஊரின் தென் மேல்திசையில் இருக்கிறது. சமீபத்தில் புதுப்பித்தலானது.


    *பாண்டவர் குழிகள்.* சித்திரைச் சாவடிக்குப் போகும் வழியில் இருந்தது. சமீபத்தில் தூர்த்தொலிக்கப்பட்டது.


    *சோழன்துறை--அரசமரம் மிகப் பெரியது. பழைய மரம் தூர்ந்து போயின. காஞ்சிமா நதி கோயிலருகில் உள்ளன.*


    *திருநீற்று மேடு*
    உன்னதமான இடம்.


    *பட்டீசுவரர் ஆலயம்*--இதில் பட்டீசர்-- சந்நிதி---சிருங்க தீர்த்தம்(இத்தீர்த்தத்தை சிங்க தீர்த்தம் என தவறாகச் சொல்கிறார்கள். இதில் சிங்கத்தையும் வைத்துள்ளார்கள்.( சிங்கத்தை நிறுவியிருப்பதால்தானோ என்னவோ சிங்க தீர்த்தம் எனச் சொல்கிறார்கள்.) இத்தீர்த்தம் *சிருங்க தீர்த்தம்.*


    மரகதவல்லி பாகராம் பட்டீசரின் மான்மியத்தை விரித்துரைத்து தொடர்ந்து பதிந்து வந்த கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடரை வாசித்தும், பட்டீசரை வந்து பூசனை புரிந்தவரும், கற்பவரும், கேட்டவரும், சேமித்து பாதுகாத்தோரும், விட்ட பதிவை கேட்டுப் பெற்றோரும், பொருளுரை வினா வினவியவர்களும், கேட்டார்ப் பிணிக்குந் தகையவாகக் கேளாதௌரும், உள்ளருவை விரித்துணர்ந்தவர்களும், பதிவில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுப் பெற்றோர்களும், நீவீர்களும், அடியார்களுமாகிய உங்களுக்கு உண்டியும், உடையும், உறையுளும், பொன்மணி முதலான பொருள்களும், கரி, பரி, சிவிகை முதலான ஊர்திகளும், வேண்டுவன பிறவும் கொடுப்போரும், இம்மைப் பயனாம் புகழையும், மறுமையிற் சிவலோகத்திற் பெறலரும்பேறாய ஆனந்தமயமாம் பெரும் போகங்களையும் பெறுவீர்களாக! சிவ சிவ திருச்சிற்றம்பலம்.


    திருப்பேரூருறையும், பட்டிபெருமானார்க்கு உள்ளன்புடன் சிறப்புச் செய்து வாசித்தோரும், அதனால் திருப்பேரூர் வந்து வணங்கியோர்க்கும் எத்தனைப் பெரும் பயன்களுளவாகுமோ அத்தனைப் பயன்களும் இத்திருப்பேரூர் திருக்கோயில் தொடர் வாசித்தோர்க்கு சிறப்பான கருணை உளவாககட்டுமென்று நெஞ்சங்கனிந்தவனாய் வணங்கி, பட்டீசநாயகரின் கருணையும், பச்சைநாயகியம்மையின் அருளும் உங்களுக்கு பசியட்டுமென்று ஆனந்தித்திளைத்து வாழ்வாங்கு வளர்ந்து வாழ்வீராக! சிவ சிவ திருச்சிற்றம்பலம்!


    *மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லியோடும்*


    *பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க!*


    *காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க!*


    *கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க! வாழ்க!!*


    *திருச்சிற்றம்பலம்*


    *இத்துடன் கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.*


    வணக்கம்!
    திருசிற்றம்பலம்!!
    சிவார்ப்பணம்.!!!
    தில்லையம்பலம்!!!!
    திருநீலகண்டம்.!!!!!
    வாழ்க அடியார் பெருமக்கள்.
    ஓங்கட்டும் சைவசமயம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் , இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X