Announcement

Collapse
No announcement yet.

03-03-2017 - சஷ்டி விரதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 03-03-2017 - சஷ்டி விரதம்



    சஷ்டி என்பது மாதம் இரு முறை வரும் திதி என்றும் இது முருகக் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்ட நாள் என்பதும் நாம் அறிந்ததே. கந்த சஷ்டியை நாம் ஏன் அனுசரிக்கிறோம், அதன் பின்னணி என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா?




    சூரபத்மன் என்பவன் கொடிய அரக்கன்.தனது தவ வலிமையால் வரங்கள் அடைந்தவன்.தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்தியவன். அவனின் கொடுமை தாங்காமல் தேவர்கள் பிரம்மாவிடம் போய் முறையிட,அவரும் சிவனாரின் பக்கம் கையை காண்பித்தார்.



    சிவன் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்கினார்.அந்த பாலகனே முருகன்.அருமையாக வளர்ந்து வாலிபனாக ஆனவுடன், தேவர்களின் சேனாபதியாக முருகன் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். உடன் துணை நின்ற தளபதி வீரபாகு. தகப்பனாம் சிவன் அரிய சக்திகளை பரிசாக அளிக்க தாய் பார்வதி வேலை முருகனுக்கு தனது சக்தியின் அடையாளமாக அளித்தாள்.

    சிங்கமுகன், தாரகாசுரன் என்னும் சூரபத்மனின் தம்பியரை அழித்த முருகன் சூரபத்மனையும் முறியடித்தார். அவன் ஒரு மரமாக மாறவே அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரபத்மனின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாகம் மயிலாகவும் மற்றொரு பாகம் சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாகக் கொண்ட முருகன் சேவலை தனது கொடியில் ஏற்றுக் கொண்டார். இவ்வாறாக சூரபத்மன் இறக்கும் தருவாயில் மாபெரும் புகழைப் பெற்றார். சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும்.

    முருகனின் இந்த வெற்றி தீயவற்றை ஒழிக்கும் நன்மையின் வெற்றியாகும். இதனைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி ஆகும். இதனை பற்றி கந்தபுராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

    சஷ்டி அன்று முருகனை வேண்டி இம்மையில் பாபங்களில் இருந்து விலகி நற்கதி பெறுவோமாக.
    Last edited by AMA Vedic Services; 03-03-17, 21:42.
    Best Homam Services Chennai
    AMA Vedic Services

  • #2
    04-03-2017 - கார்த்திகை விரதம்



    கார்த்திகை முருகனின் பிறந்த நட்சித்திரமாகக் கருதப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. கார்த்திகை பெண்டிர் முருகனை வளர்த்தமையால் சிவனாரால் பாராட்டப் பெற்று வானில் நட்சத்திரக் கூட்டமாக ஒளிர்கிறார்கள்.


    கார்த்திகை 27 நட்சத்திரங்களில் ஒன்று. சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தை மாதந்தோறும் கடக்கும் நாளே கார்த்திகை எனக் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்த கதை நாம் அறிந்ததே. முருகன் சிவனாரின் நெற்றி கண்ணிலிருந்து தோன்றியவர்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருக பெருமான் ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். அவர் தனது தாய் பார்வதியால் ஒரே குழந்தையாக ஆக்கப்பட்ட போது சிவன் கார்த்திகைப் பெண்டிரை நட்சத்திரமாக வானில் என்றும் திகழ அருள் பாலினார்.

    கார்த்திகை அன்று முருகனை வழிபடுவது சிறப்பான ஒன்று தானே.அவரை வளர்த்தவரே கார்த்திகை பெண்கள் தானே. கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் இன்றைய தினம் களை கட்டும்.

    கார்த்திகை விரதம் முருக பக்தர்களுக்கு விசேஷமான ஒன்று. பூஜை ஸ்லோகம் என கார்த்திகையை கொண்டாடுபவர் பலர். கார்த்திகை அன்று முருகனை வழிபட்டு இப்பிறவிப் பிணி தீர்ந்து நன்மை அடைவோம்.
    Best Homam Services Chennai
    AMA Vedic Services

    Comment

    Working...
    X