Announcement

Collapse
No announcement yet.

peacock, snake, Muruga - 2 poets

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • peacock, snake, Muruga - 2 poets

    Courtesy:http://www.dinamalar.com/supplementa...ncat=2&Print=1
    பட்டுத் திருந்துவது ஒருவகை; கெட்டுத் திருந்துவது மற்றொரு வகை.
    பாண்டிய நாட்டில், முருக பக்தர்களான தமிழ் புலவர்கள் இருவர் இருந்தனர். ஆனால், இருவரும் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள்.
    கலைமகள் இருக்குமிடத்தில், திருமகளின் அருள் இருக்காது என்பதை மெய்ப்பிப்பது போல, இருவரும் வறுமையில் வாடினர். இதனால், தங்கள் தமிழ் புலமையைக் காட்டி பொருள் ஈட்டும் பொருட்டு, ஈழ நாட்டிற்கு சென்றனர். அந்நாட்டு அரசன், இருவரையும் வரவேற்க, அரசவையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பாடல்கள் பாடினர்.
    அப்பாடல்களில் மகிழ்ந்து, இருவருக்கும், சரிசமமாக வெகுமதிகள் வழங்கி, சிறப்பித்தார், மன்னர். ஆனால், இருவருக்குமே தானே உயர்ந்தவன் என்ற எண்ணம் மனதில் இருந்ததால், 'ஒன்று போல் பரிசளித்தது தவறு...' என்று கூறி, 'நானே திறமைசாலி; எனக்கு தான், சிறந்த பரிசுகள் வழங்க வேண்டும்...' என வாதிட்டனர்.
    அதனால், 'புலவர்களே... நீங்கள் இருவரும் இங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து உங்கள் புலமையை வெளிப்படுத்துங்கள்; பின் முடிவு செய்யலாம்...' என்றார், அரசர்.


    அவ்வாறே, இருவரும் அரண்மனையில் தங்கினர். இந்நிலையில், கதிர்காமத்தில் திருவிழா துவங்கியது.
    ஒருநாள், மயில் வாகனத்தில் கந்தக் கடவுளின் திருவுலா நடந்தது. அரசருக்கு இருபுறமும் நின்று ஆறுமுகனை தரிசித்தனர், புலவர்கள். அப்போது, அரசர், மயில் வாகனமான மயிலின் வாயிலிருந்த பாம்பை பார்த்தார். உடனே, 'புலவர்களே... வாகனமாக உள்ள மயில், தன் வாயில் பற்றியிருக்கும் பாம்பை, விட்டு விடும்படி ஒருவரும், மற்றவர், அப்பாம்பை, மயில் பற்றிக் கொள்ளும்படியும் பாட வேண்டும். அதன்மூலம், உங்கள் தகுதியறிந்து, உங்கள் விருப்பப்படி நடப்பேன்...' என்றார்.
    உடனே, ஒரு புலவர், தாயரவைச் சீறிவரு சந்த்ரோதயந் தனக்குன்
    வாயரவை விட்டுவிட வேண்டாவோ...
    - என பாதி வெண்பாவை பாடினார். ஆறுமுகனருளால், புலவர் பாடிய வெண்பாவை கேட்டதும், மயிலின் வாயிலிருந்த பாம்பு நழுவி, கீழே விழுந்தது.
    மன்னரும், அவரை சுற்றியிருந்தோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது அடங்குவதற்குள், அடுத்த புலவர், தீயரவைச் சீறுமடியார் பரவும் செங்கதிர்கா மப்பெருமாள் ஏறு மயிலே எடு...
    - என்று பாடினார். உடனே, கீழே விழுந்திருந்த பாம்பை, கொத்தி எடுத்து, பழைய நிலையை அடைந்தது, மயில்.


    அதைப் பார்த்ததும், கூட்டம் பெரும் ஆரவாரம் செய்ய, வியப்படைந்த மன்னர், 'புலவர்களே... பார்த்தீர்களல்லவா... நீங்கள் இருவருமே சரிசமமான தகுதியும், திறமையும் கொண்டவர்கள். அதனால், உங்களுக்குள் இருக்கும் புலமை காய்ச்சலை விட்டொழியுங்கள்...' என்று கூறி, அவர்கள் விரும்பியதை அளித்து, பாண்டிய நாட்டிற்கு அனுப்பினார்.
    ஆண்டவனை பணியலாம்; ஆணவத்திற்கு அடி பணியக் கூடாது. அது, நமக்கு ஒருபோதும் நன்மை அளிக்காது!


    பி.என்.பரசுராமன்


    தெரிந்ததும் தெரியாததும்!
    சகுனம் பார்க்கும் பழக்கம் எவ்வாறு தோன்றியது?
    பண்டைய காலத்தில், அரசர்கள் போர் புரியும் போது, பல வீரர்கள் போரிட்டு மடிவர். போருக்கு பின், அரசர் வீதியுலா வரும் போது, போரில் மடிந்த வீரர்களின் மனைவிகளை, விதவைகளாக காணும் போது, அரசனின் மனம் வருந்தும். இதனால், தன் அரண்மனைக்கு திரும்பி விடுவார்.
    அக்கால மாமன்னர்களின் மனிதாபிமான செயலே, பின்னாளில் சகுனம் பார்க்கும் மனித நேயமற்ற வழக்கமாய் மாறியது. சகுனம் பார்ப்பது, அவரவர் விருப்பம் ஆயினும், பிறர் மனம் வருந்தும்படி நடந்து கொள்ளுதல், பாவத்திற்கு வழி வகுக்கும்.
Working...
X