Announcement

Collapse
No announcement yet.

Tiruvarur temple part 7

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvarur temple part 7

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *( 7 )*
    *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *ஆரூர் வளர்த்த ஆடற்கலை.*
    *"ஆடவரக் கிண் கிணிக்கால் அன்னானோர் சேடனை*
    *ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாருரே"* என நாவுக்கரசர் போற்றும் அண்ணல் ஆடுகின்ற ஆரூர்ப்பதி தமிழக வரலாற்றின் ஆடற்கலையை வளர்த்த முக்கிய மையங்களுள் ஒன்று என்பதைச் சோழர்களது கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் மெய்ப்பிக்கின்றன.


    தான் ஆடி உலகெலாம் மகிழ்வித்த ஆடல்வல்லான், ஆரூர் பதியில்தான் அமர்ந்து நடன நங்கையர் ஆடல்கண்டு மகிழ்ந்தான். இது உண்மையான வரலாறும் கூட தியாகவினோதனாம் வீதிவிடங்கப் பெருமானின் திருமேனியை விழாக்காலங்களில் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அத்திருமேனி முன்பு தலைசிறந்த ஆடல் அணங்குகளை ஆடச்செய்து மன்னனும் மக்களும் போற்றினர்.


    விக்கிரம சோழனின் கல்வெட்டோன்று திரிபுவன சக்ரவர்த்தி விக்கிரம சோழதேவர்க்கு யாண்டு ஐந்தாவது மிதுன ஞாயிற்றும் பூர்வபட்சத்து சப்தமியும் ஞாயிற்றுக்கிழமையும் அத்தமுமான நாள் முன்னூற்று நாற்பது கேயமாணிக்க வளநாட்டு திருவாரூர் சுற்றத்து திருவாரூர் உடையார் வீதிவிடங்கன் சித்திரைத் திங்கள் சதயநாளில் தேவாசிரியனாம் திருக்காவணத்தில் சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து பதியிலாளர் தியாகவிநோதத் தலைக்கோயிலின் ஆட்டம் கண்டருளா நிற்ப....."எனக் கூறுகின்றது.


    இதே போன்று முதற் குலோத்துங்கனின் கல்வெட்டொன்று வீதிவிடங்கத் தேவர் தேவாசிரியத்தில் எழுந்தருளியிருந்து புக்கத்துறை வல்லவத் தலைக்கோயிலின் ஆட்டம் கண்டு மகிழ்ந்ததாகவும், பிறிதொரு கல்வெட்டு இதே மண்டபத்தில் பூங்கோயில் நாயகத் தலைக்கோயிலின் ஆட்டம் கண்டதாகவும் பெருமையோடு அறிவிக்கிறது.


    பதியிலார் எனும் ஆடலணங்குகள் இறைவனின் திருக்கோயிலில் ஆடல் புரிவதற்க்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, திருக்கோயில் அளிக்கும் பல உரிமைகளை அனுபவித்தனர்.


    தலைக்கோலியர் என்பது தலைசிறந்த ஆடல் மகளிர்க்கு அளிக்கப்படும் விருதுப்பெயராகும். தலைக்கோல் பெறும் மரபை சிலம்பு விவரிக்கின்றது.


    பகைமன்னன் புறமுதுகிட்டு ஓடும்போது விட்டுச்செல்லும் வெண்கொற்றக்குடையின் காம்பிலிருந்து எடுக்கப்பட்ட கோலில் நவமணிகளும், பொன் வளையல்களும் பதித்து, சயந்தனாக அதனைப் போற்றி வழிபட்டு, மன்னனால் அளிக்கப்படும் இக்கோலே தலைக்கோல் என்பதாகும். இது ஆடற்கலையில் முற்றும் துறைபோகிய கலைஞர்க்கே அளிக்கப்படும் உயரிய விருதாகும்.


    இத்தகைய பெருமை மிகு விருதினைப்பெற்ற பல தலைகோலியர் பணிபுரிந்த திருக்கோயில் ஆரூர் திருக்கோயில், மாமன்னன் முதலாம் இராஜராஜன் தான் எடுப்பித்த தஞ்சைப் பெருங்கோயிலில் நானூற்று இருபது ஆடல் மகளிரை இக்கலை வளர்க்க நியமித்தான்.


    இவ்வகையாக நியமிக்கப்பட்டத்தளிச்சேரி பெண்டிரின் ஊரும் பேரும் கல்லில் பொறித்தான். இவ்வாறு இம்மன்னவன் தஞ்சை திருக்கோயிலுக்காக சோழ மண்டலம் முழுவதிலிருந்துத் தேர்ந்தெடுத்த நானூற்றி இருபது மகளிரில் ஐம்பத்தோர் பேர் திருவாரூர் திருக்கோயிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதை அறியும்போது ஆரூர் வளர்த்த இக்கலையின் பெருமை நன்கு விளங்கும்.


    மேலும் ஆரூர் திருக்கோயிலில் ஆடற்பணி பரிந்த நங்கை ஒருத்தி திருமறைக்காட்டு ஈசனுக்கு விளக்களித்து அதற்கென தொண்ணூறு ஆடுகளையும் வைத்த செய்தியினை மறைக்காட்டு கல்வெட்டொன்று கூறுகிறது.


    இவ்வாறு சோழப் பெருமன்னர்கள் காலத்தில் ஆரூர் திருக்கோயிலில் ஆடற்கலை போற்றிப் பேணப்பட்டது என்பதை ஆடற்கலைஞர்களின் சமுதாய நிலை மிக்கோங்கி இருந்தது என்பதையும் கல் வெட்டு பறைசாட்டுகிறது.


    ஆடற்கலைகளின் நூற்றெட்டு கரணமுத்திரைகளையும் விளக்கும் சிற்பங்கள் கீழைத்திருக்கோபுரத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் எடுக்கப்பட்டது.


    சோழர்களுக்குப் பிறகு நாயக்கர்களும், மராத்தியர்களும் இக்கலையைப் பேணினர் என்பதைச் சிற்பங்களும்,ஓவியங்களும், கல்வெட்டுக்களும் கூறுகின்றன.


    மராத்திய மன்னன் சகஜி சங்கரபல்லக்கி சேவாபிரபந்தம் போன்ற பல நாட்டிய நூல்களை யாத்து ஆரூர் இறைவனுக்கு அர்ப்பணித்தான். ஆடற்கலை வளர்த்த பாங்கிலும் ஆரூரின் பெருமை அளவிடற்கரியதே.


    திருச்சிற்றம்பலம்.


    *திருவாரூர் தியாராகராஜசுவாமி திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்ஙள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X