சிவாயநம திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(10*)
*திருவாரூர் தியாகராஜசுவாமி.திருக்கோயில் தொடர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*வன்மீக நாதரைப் பற்றிய வரலாறு.*
முற்காலத்தில் திருமால், இந்திரன் முதலிய தேவர்கள் ஒருங்குகூடி ஒரு யாகத்தை செய்ய நினைத்தனர்.


குருஷோத்திரமே அதற்கு ச் சரியான இடமென்று எண்ணி அதற்குண்டான ஆக வேண்டிய காரியங்களைக் கவணித்தனர்.


இந்த யாகத்தை இறுதி வரையில் இளைக்காமல் இயற்றுபவரே எல்லாரிலும் உயர்ந்தானோர் என்பதை ஒப்புக் கொண்டு சபதமெடுத்துக் கொண்டார்கள்.


யாகத்தில் இந்திரன் முதலியோர் தோல்வியுற்றனர். விஷ்ணு வென்றவரானார். அதனால் செருக்கும் கொண்டார்.


இதை அடக்க முன்னவன் அருளால் ஓமகுண்டத்தில் ஒரு வில் உண்டாகி வந்தது. அதனை எடுத்த அவர்கள், அவ்வில்லினை வளைத்துக் கொண்டு, தேவர்கள் அனைவரையும் அடக்கியாள எண்ணினார். அத்தேவர்களை துரத்தித் துரத்திச் சென்றார்.


இவ்வோட்டத்தில் பராசத்திபுரம் என்னும் தலத்தை அடைந்தார். இறைவி திருவருளால் அவர் வலியெலாம் ஒடுங்கியது.


வில்லைத் தரையிலூன்றி அதன் மேல் தன் தலையைச் சாய்த்து அயர்ந்து அறிவு சோர்ந்தார்.


சமயம் நோக்கிய தேவர்கள் தமது குருவாகிய வியாழனை ஆலோசனை கேட்டனர்.


அவர் உத்தரவுப்படி தேவர்கள் யாவரும் வில்லின்கீழ்ச் செல்லுருவமாகிப் புற்றில் அமர்ந்து நாணை அரித்து அறுத்தனர்.


அப்போது வில் நிமிர விஷ்ணுவின் தலை தெறித்தது. தேவர்கள் அஞ்சினர். ஆடகேசத் திருநாமத்தோடு பாதாளத்து எழுந்தருளிய பரமன் புற்றிடங் கொண்டு சிவலிங்கமாகக் காட்சி தந்தார்.


இந்திரனும், பிரமனும் வணங்கித் தோத்திரம் செய்தனர். இறைவன் சிவலிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்படத் தேவர்கள் வழிபட்டனர். அபயம் வேண்டினார்கள்.


இறைவனும், செருக்கொண்ட திருமால் தலையை, நீங்கிய உடலோடு பொருத்துங்கள்.


அவர்களும் அவ்வாறே தலையினை நீங்கிய உடலினிற் பொருத்தவும், அத்திருமாலையும் உருக்கொண்டார்.


பின்னர் திருமால் முதலிய தேவர்கள் ஆகம முறைப்படி வழிபாடு செய்து எல்லாவித இன்பங்களை எய்தினர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இதுவே *புற்றிடங்கொண்ட பெருமான்* தோன்றிய வரலாறு.


திருச்சிற்றம்பலம்.


*திருவாரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*