ஆர்யபட்டர் - வராகமிகிரர்
உலகின் முதல் வான சாஸ்திர நிபுணர், குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆர்யபட்டர் ஆவார். இவர்தான் முதலில் 'பஞ்சாங்கம்' கணித்து வெளியிட்டார். இவருடன் சமகாலத்தில் வாழ்ந்த வராகமிகிரரும் ஒரே அரசவையில் ஆஸ்தான வித்வான்களாகப் பதவி வகித்தார்கள். இருவருமே வான சாஸ்திரக் கலையில் உயர்ந்தவர்கள்.
ஆறியபட்டர் பூமி உருண்டை என்றும் பூமி உட்பட சில கோள்கள் வான மண்டலத்தில் தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட நியமத்துடன் வலம் வந்துகொண்டே இருக்கின்றன என்றும் அந்தக் காலத்திலேயே கண்டரிந்து கூறியவர். இவர், தான் கண்ட உண்மைகளை வரிசைப்படுத்தி
வாரம் ( கிழமைகள் ) = 7
திதிகள் ( 15 + 15 ) = 30
நட்சத்திரங்கள் = 27
யோகம் = 27
கர்ணம் = 11
என்ற ஐந்து விதமான அங்கங்களின் கணிதம், அன்றாட நடைமுறை ஆகியவர்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் பஞ்சாங்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அந்நூலில் ஒரு நாளில் விளங்கும் மேற்கண்ட பஞ்ச அங்கங்களைத் தெளிவாக வெளியிட்ட காரணத்தல்தான் அதற்குப் பஞ்சாங்கம் எனப்பெயர் வந்தது.
-- ( ஜோதிடம் தெளிவோம் ) பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 16, 2014.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends