Announcement

Collapse
No announcement yet.

Tiruvarur temple part13

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvarur temple part13

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(13)*
    *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    சோமாசிமாற நாயனார் தான் செய்யும் யாகத்தில் இறைவனே நேரில் வந்து அவரிப்பாகம் ஏற்றருளும்படி சுந்தரரைக் கொண்டு வேண்டிக் கொண்டார் என்றும் அவ்வாறே இறைவன் உமையோடு பறையர் திருக்கோலமாக எழுந்தருளி ஏற்றுக் கொண்டார்.


    ஆனால் இவ்வரலாறை பெரிய புராணத்தில் கூறப்படவில்லை. திருக்கடவூர்த் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. திருமகளாகக் தல புராணம் துணை நிற்கிறது.


    தியாகப் பெருமான் அவ்வாறு எழுந்தருளிச் சென்றுலதற்கு அடையாளமாக *ஐயடிமங்கலம்,* *அடியக்கமங்கலம்,* *சகடமங்கலம்,* *பொங்குசாராநல்லூர்* என்ற ஊர்ப்பெயர்கள் சான்று பகர்கின்றன.


    மனுநீதிச் சோழன் நீதியைக் காக்க- பசுத்துயரம் தானடைய- தேர்காலில் மகன் வீதி விடங்கனைக் கிடத்தி தேருட்டியபோது தியாகப் பெருமானே விடைமீது தோன்றிக் காட்சி வழங்கி உயிர்பித்தார் என வரலாறு பெரிய புராணத்தில் காணப்பெறுகிறது.


    நமிநந்தியடிகள் கனவில் தியாகப் பெருமான் எழுந்தருளித் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் சிவகணமாதலைத் தெரிவித்தனர் என்பதும் பெரிய காணப் பெறுகிறது. அவ்வாறே விறன்மிண்டர், கழற்சிங்கர், வரலாறுகளும் தியாகப் பெருமானுடைய திருவருள் தொடர்புடையன.


    மற்றும் பச்சைக் கற்பூரம் அணிதலும், செவ்வந்தித் தோடணிதலும், செங்கழுநீர்மாலையணிதலும் இறைவனுக்குச் சாத்தப்பெறும் ஆடையில் தியாகர் என்ற பெயர் வரைதலும் பாகற்காய் பறித்தலும் தென்னந்திருவாசல் வழியாகப் பாடுவார் பாடல் கேட்டலும் தியாகர்க்குரிய வழக்கங்களாம்.


    தியாகப்பெருமானுக்குரிய பத்துவகை அங்கப் பொருள்களுக்குத் தனிப்பெயர்கள் உண்டு. அவை
    *ஆடுதண்டு*
    *மணித்தண்டுக் கொடி*
    *தியாகக்கொடி ஆசனம்*
    *இரத்தின சிம்மாசன மாலை*
    *செங்கழுநீர் மாலை*
    *வாள்*
    *வீரகண்டயம் நடனம்*
    *அஜபா நடன யானை*
    *ஐராவணம் மலை*
    *அரதனசிருங்கம் முரசு*
    *பஞ்சமுக வாத்தியம் குதிரை*
    *வேதம் நாடு*
    *சோழநாடு ஊர்*
    *திருவாரூர் ஆறு*
    *காவிரி பண்* பதிணெண்வகைப் பண் என்பவனவாம். இவற்றின் விரிவும் மேற்கோளும் தனிப் புத்தகத்தில் காணத்தக்கன.


    தியாகப்பெருமானைப் பற்றி அசைந்தாடி அகிலமும் ஆட்டுந் தியாகர் ஆடாதும் ஆடி பாகற்காய் பறிக்கும் தியாகர் முதலிய பழமொழிகளும் வழங்கி வருகின்றன.


    பல காரணங்களால் தியாகப் பெருமானுக்கு
    *வீதிவிடங்கர் தேவர்கண்டப் பெருமான்,*
    *தியாகப் பெருமான்,*
    *ஆடவரக்கிண்கிணிக் காலழகர்,*
    *செங்கழூநீரழகர்,*
    *செவ்வந்தித் தோடழகர்,*
    *கம்பிக்காதழகர்,*
    *தியாக விநோதர்,*
    *கருணாகரத் தொண்டமான்*
    (இவை விருதாவளியில் உள்ளன சோழ மண்டல சதக்கத்தில் பார்க்கலாம்.)
    *அசைந்தாடும் அப்பர்,*
    *அடிக்காயிரம் பொன்னளித்தார்,*
    *கமலேசர்,*
    *செம்பொற்றியாகர்,*
    *திருந்திறைகோலத்தர்,*
    *தேவசிந்தாமணி,*
    *தியாகசிந்தாமணி,*
    *சிந்தாமணி* முதலிய அறுபதுக்கு மேற்பட்ட திருநாமங்கள் பிரபந்தங்களிலும் தேவாரத் திருமுறைகளிலும் வழங்குகின்றன.


    *திருவாரூர் திருக்கோயிலில் நாயன்மார்கள்.*
    ---------------------------------------------------------------------
    *சுந்தரர்.*
    மூவர் முதலிகளுள் ஒருவரான ஆலால சுந்தரர் ஆரூரான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். இவரின் தாயார் இசை ஞானியார் திருவாரூரில் பிறந்தவர். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் தியாகேசன் திருவருளால் திருத்தொண்டத் தொகைபாடி தொகையடியார் பெருமையை உலகுக்குக் காட்டி நின்றார். ஆரூர் பரவையாரை மணந்தார்.


    *விறன்மிண்ட நாயனார்.*
    மலை நாடெனும் சேரநாட்டில் திருச்செங்கனூரில் பிறந்த இவர் திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி அடியார்களைப் போற்றி வந்தார்.


    ஒருநாள் சுந்தரர் திருவாரூர் பெருமானை வழிபடச் சென்ற போது சிவனடியார்களை வணங்கி வழிபடாது ஒதுங்கிச் செல்வதைக் கண்ட விறன்மிண்டார், சிவனடியார் திருக்கூட்டம் இதனைப் பேனாது ஒதுங்கிச் செல்லும் ஆரூரனுக்கும் அவனா வலிய ஆட்கொண்ட சிவபெருமானுக்கு புறகு (புறம்பானது) என்று கூறினார். பின்னர் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியது கண்டு நேசமாகி ஆரூர் பெருமானின் அருள் நலம் பெற்றார்.


    *நமி நந்தியடிகள்.*
    சோழநாட்டு ஏமப்பேனூரில் பிறந்தார் இவர்.ஆரூர் அறநெறிப் பெருமானுக்கு நாளும் திருவிளக்கேற்றி வழிபட்டு வந்தவர். சமணர்கள்.வாது செய்வித்த சமயம் குளத்து நீரை மொண்டூற்றி விளக்கெரித்து ஆரூரான் பெருமையை உலகறியச் செய்தவர். திருவாரூர் பிறந்தார்கள் அனைவரும் சிவகணங்களே என்பதை ஈசன் உணர்த்த அறிந்த பெருமகனானார் இவர்.


    *தண்டியடிகள்.*
    இவர் திருவாரூரில் பிறந்தவராவார். பிறவியிலே குருடாக விளைந்தவர். இவரின் குருட்டுத்தனத்தை சமணர்கள் சூது செய்தனர். இவர் அவர்களின் சூதுவுக்கு கவலையுறாமல் திருக்குளத் திருப்பணியாற்றி வெற்றி பெற்றவர். நாட்டமிகு தண்டி என சுந்தரர் போற்றிய பெருமைக்குண்டானவர்.


    *சேரமான் பெருமாள் நாயனார்.*
    நம்பியாரூரரின் தோழராய் விளங்கியவர். திருவாரூர் மும்மணிக் கோவை பாடியவர். ஆறாத சிவத்தொண்டால் சுந்தரர் கயிலை செல்வதை முன்னறிந்து, சுந்தரர்க்கு முன் கயிலையில் முன்னிருந்தவர்.


    *செருத்துணை நாயனார்.*
    மருகல் நாட்டு தஞ்சாவூரில் பிறந்தவர். இவர் ஆரூர் இறைவனுக்கு திருத்தொண்டு புரியும் நாளில் பல்லவமன்னன் கழற்சிங்களின் தேவி திருக்கோயில் பூமண்ட பத்து புதுமலரை எடுத்து முகந்ததைக் கண்டு அவளது மூக்கை அரிந்தவர். உறுதிப் பணிபுரிந்து இறையருள் பெற்றவர்.


    *கழற்சிங்க நாயனார்.*
    காடவர்கோன் கழற்சிங்கரான இம்மன்னவன் தன் தேவியோடு ஆரூர் வந்தபோது அத்தேவி ஈசனுக்குரிய புது மலரை முகர்ந்ததற்காக செருத்துணை நாயனாரால் மூக்கரியப்பட்டாள்.


    இதுகண்ட கழற்சிங்கர் அவள் செய்த தவறுக்கு பூவை எடுத்த கையையன்றோ முதலில் தண்டித்தல் வேண்டும் எனக்கூறி எனக்கூறி தன் வாளால் அத்தேவியின் கரத்தை தண்டித்தார். பின் மூவருமே ஆரூரன் அருள் கிடைக்கப் பெற்றனர்.
    இவ்வடியார்கள் மட்டுமல்ல, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மணிவாசகப் பெருமான், திருநீலகண்ட பெரும்பாணர், மற்றும் அவரது தேவியரானமாதங்க சூளாமணியார் போன்ற பலரும் ஆரூரன் அடிபணிந்து போற்றிய வர்கள் ஆவார்கள்.


    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்.
    தில்லையம்பலம்.
    திருநீலகண்டம்.


    *இப்பதிவுடன் திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.*


    திருச்சிற்றம்பலம்.


    *சில தினங்களில் அறுபத்து மூவரின் பக்தி வரலாறு வ(ள)ரும்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X