Announcement

Collapse
No announcement yet.

பவானி ஜயந்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பவானி ஜயந்தி

    ப்ருஹ்ம வைவர்வதம் யார் சைத்ர மாதத்தில் சுக்ல பக்ஷ அஷ்டமியில் பவானி அம்மனை 16 உபசார பூஜை; தரிசனம் செய்கிறார்களோ அவர்கலுக்கு துன்பம் வராது. ஆநந்தமாக இருப்பார் என்கிறது காசி கான்டம்; பவானி ஸ்தோத்ரங்கள் சொல்லுங்கள்; சரண்யே; வரேண்யே ஸு ந்காருண்ய மூர்த்தே ஹிரண்யோ த ராத்யை ர கண்யே ஸு புண்யே பவாரண்ய பீதேஸ்ச மாம் பாஹி பத்ரே நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவணி என்றாவது சொல்லுங்களேன்.

    அகஸ்திய ஸம்ஹிதை; உமா ஸம்ஹிதையில் ராமாயணம் நவாஹ பாராயணம் மேன்மை பற்றி கூருகிறது; பிறர் சொன்னாலும் காதால் கேட்கலாம். மனம் அங்கு இங்கு ஓடாமல் கேளுங்கள்; முதல் நாள் ராமாயணத்தில் பால காண்டம் ஒன்று முதல் 70 ஆவது ஸர்க்கம் வரை படியுங்கள்; இரண்டாம் நாள் பால காண்டம் 71ஆவது சர்கத்திலிருந்து அயோத்யா காண்டம் 64 ஆவது ஸர்க்கம் வரையிலும்; மூன்றாம் நாள் அயோத்யா காண்டம் 65 முதல் 119 ஸர்க்கம் வாஇயிலும்; நான்காம் நாள் ஆரண்ய

    காண்டம் ஒன்று முதல் 68 ஆவது ஸர்க்கம் வரையிலும்; ஐந்தாம் நாள் ஆரண்ய காண்டம் 69 ஆவது ஸர்க்கம் முதல் கிஷ்கிந்தா காண்டம் 49 முடியவும்; ஆறாம் நாள் கிஷ்கிந்தா காண்டம் 50 முதல் சுந்தர காண்டம் 57 ஆவது ஸர்க்கம் வரையிலும் ஏழாம் நாள் சுந்த்ர காண்டம் 58 ஆவது முதல் யுத்த காண்டம் 50 முடியவும்; எட்டாம் நாள் யுத்த காண்டம் 51ஆம் ஸர்க்கம் முதல் 111 ஆவது ஸர்க்கம் முடியவும்; ஒன்பதாம் நாள் யுத்த காண்டம் 112 ஆம் ஸர்க்கம் முதல் 131 ஆவது ஸர்க்கம் முடியவும்

    படிக்கலாம்.ஒவ்வொரு ஸர்க்க முடிவிலும் செய்ய தக்க நிவேதன ங்கள் ஸ்ரீ ராம பக்தி கல்பலதா என்னும் புத்தகத்தில் விரிவாக உள்ளது.தற்காலத்தில் செய்ய முடியாது.
Working...
X