நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம்
மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள்.
கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம்
எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும்
இல்லை.


* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால்
புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும்.
போன பிறவியில்செய்த பாவங்களை இந்த
பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான்
இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார்.


* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான்
செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும்.
மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில்
இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல்
ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது.


மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும்
ஆதாரமான நிலை உருவாகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக
இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல்
அப்படியேஉண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,
வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.


* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல்
நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும்
எதைக்காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப்
பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும்.