லம்பாடிப் பெண்ணின் தேவுடு

ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் நம் பெரியவா முகாம்.

ஒருநாள் கோவில் வாஸலில் ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை சுழல விட்டாள்.

பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்!

அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய local டாக்டரோ, அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.

பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள்.


அவளுக்கு பெரியவா யாரென்றே தெரியாது! ஆனால் அந்த ஊருக்கு வந்திருக்கும் "தேவுடு" [தெய்வம்] என்று கேள்விப்பட்டு, புருஷனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வந்துவிட்டாள்!


"தேவுடு....தேவுடு...."


குத்துமதிப்பாக யார் அந்த 'தேவுடு'.... என்று தெரியாமல் கையில் புருஷனோடு நின்றவளை, அங்கிருப்பவர்கள் பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.

புருஷனைப் பெரியவா முன் தரையில் கிடத்திவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு "காரே-பூரே" என்று அவளுடைய பாஷையில் அழுது, கதறி ப்ரார்த்தித்தாள்.

ஒருவருக்கும் ஶுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

எந்த பாஷையானால் என்ன? பகவானுக்கு வெண்ணையாக உருகும் உள்ளத்தின் அழுகுரல் தெரியாதா என்ன?

பெரியவா ஒரு ஆரஞ்சுப் பழத்தை கையிலெடுத்துக் கொண்டு சில நிமிஷங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, அந்த லம்பாடிப்பெண்ணின் கைகளில் அதைப் போட்டார். கண்களில் கண்ணீரோடு பழத்தைப் பெற்றுக்கொண்டு, விழுந்து ஸாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தையும் பண்ணிவிட்டு, அதே ஜோரில்.... மறுபடியும் புருஷனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் படுக்க வைத்துக்கொண்டு, சென்றுவிட்டாள்.

பெரியவா, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்களிடம் சொன்னார்....

"இந்த லம்பாடிக்கி எவ்ளோவ் பதிபக்தி பாரு! ஒரு ஆம்பிளையை, தான்.... ஒர்த்தியாவே தூக்கிண்டு வந்திருக்காளே! பகவான் இவளுக்கு அவ்ளோவ் ஶக்தியைக் குடுத்திருக்கான் !... ஸத்யவான் ஸாவித்ரி கதையை புராணத்ல படிக்கறோம்... இவளும் ஸாவித்ரிதான்! ஆனா...நா.....!!!"

மேலே எதுவும் சொல்லாமல் குஸும்பு வழிய, மெல்லிய புன்முறுவல் பூத்தார்.

அவர் சொல்லவே வேண்டாம்...!

பக்கத்திலிருந்த பாரிஷதர் யுக்திபூர்வமாக பதில் கூறினார்....

"பெரியவா..... ஸத்யமா.... எமன் இல்ல! அந்த எமனுக்கு எமன்! காலகாலனாக்கும்!"

மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவள் புருஷனும் ஜோடியாக நடந்து வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தார்கள்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநேற்றுவரை கிழிந்த நாராகக் கிடந்தவன், பிழைப்பானா? என்று கேள்விக்குறியானவன், இன்றோ ஜம்மென்று நடந்து வருகிறான் என்றால்.....!

"தேவுடு! தேவுடு!.."

லம்பாடிப் பெண், வாயார தேவுடு நாம உச்சாடனத்தோடு, கண்களில் நன்றிக் கண்ணீரோடு விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள்.

உருகாத வெண்ணையும், ஒரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்

ஸத்யவானின் தர்மபத்னியான ஸாவித்ரி தேவி, காட்டில் இருந்த போது, காரடையான் நோன்பு நூற்றாள்.


கணவன் மேல் உள்ள ஆழ்ந்த அன்பால், தன் கணவனையே ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, உயிர்ப்பிச்சை கேட்ட அந்த லம்பாடிப் பெண்ணை, பெரியவாளும் தன் திருவாக்கால் ஒரே தூக்காகத் தூக்கி, அந்த ஸாவித்ரி தேவிக்கு ஸமமாக அனுக்ரஹித்தது என்ன ஒரு கருணை!

நம்முடைய காலாந்தக மூர்த்தி, ஸாதாரண ஆரஞ்சுப் பழத்தையா அவள் புருஷனுக்கும், அவளுடைய ஸௌமாங்கல்யத்துக்கும் குடுத்தார்?


"தீர்க்க ஸுமங்கலியா இரு!" என்ற ஆஶீர்வாதத்தை அனுக்ரஹித்த அம்ருதம் அல்லவா அது!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம் !

nandri whatsup !