Announcement

Collapse
No announcement yet.

உர்வாருகமிவ பந்தனாத்.........

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உர்வாருகமிவ பந்தனாத்.........

    ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும்.


    "த்ரயம்பகம் யஜாமஹே
    ஸுகந்திம்
    புஷ்டிவர்தனம்.
    உர்வாருகமிவ
    பந்தனாத் ம்ருத்யோர்
    முக்க்ஷீய மாம்ருதாத்."


    இதில் 'உர்வாருகமிவ பந்தனாத்' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்பதாக அமையும்.

    எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே !

    இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.

    பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது.

    அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும்.

    வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப்பழமும், தரைத்தளத்திலேயே பழுத்துக்கிடக்கும்.

    அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம்.

    அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

    அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்து விட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே - எப்படி வெள்ளரிக்கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகி விடுமாம்.

    அற்புதமான விளக்கம்.

    நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது.

    மஹா பெரியவா சரணம் !

    நன்றி : whatsup
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: உர்வாருகமிவ பந்தனாத்.........

    Respected Madam,
    After a long gap we could meet you. we [forum members] are very glad.லேட்டாவந்தாலும் லேட்டஸ்டா புயல் மாதிரி இவ்வளவு போஸ்டோட வந்திருக்கேள் ரொம்ப சந்தோஷம்

    Comment


    • #3
      Re: உர்வாருகமிவ பந்தனாத்.........

      ஸ்ரீ:
      வணக்கம், வந்தனம், நமோஷ்கார் க்ருஷ்ணாம்மா அவர்களே,
      தாங்கள் இல்லாமல் போரம் இளைத்துப்போய் இருந்தது,
      திரு.சௌந்தரராஜன் ஒருவர் மட்டும் தன் முயற்சியால் அதை வற்றாத ஜீவ நதியாக காத்து வந்தார்.
      நமது போரத்திற்கு புத்துணர்வு டானிக் கிடைத்திருக்கிறது,
      இனி உறுப்பினர்கள் காட்டில் கனஜோரான மழைதான்
      வெளுத்துக்கட்டுங்கோ! புதுப்புனல் கங்கையாக ப்ரவாகம் எடுக்கட்டும் பதிவுகள்.
      நன்றிகள் பலப்பல!


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: உர்வாருகமிவ பந்தனாத்.........

        Originally posted by soundararajan50 View Post
        Respected Madam,
        After a long gap we could meet you. we [forum members] are very glad.லேட்டாவந்தாலும் லேட்டஸ்டா புயல் மாதிரி இவ்வளவு போஸ்டோட வந்திருக்கேள் ரொம்ப சந்தோஷம்
        நமஸ்காரம் மாமா, நீங்க என்னைக் கிருஷ்ணாம்மா என்றே கூப்பிடலாம் .....என் பெயர் சுமதிசுந்தர், என் பிள்ளை பேர் கிருஷ்ணா, எனவே நிக் நேம் ஆக க்ருஷ்ணாம்மா என்று வைத்துக்கொண்டேன் .........நன்றி மாமா, இனி தொடர்ந்து வருகிறேன்
        .
        .

        ரொம்ப நாள் கழித்து உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் எனக்கும் மிகவும் சந்தோஷம்
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: உர்வாருகமிவ பந்தனாத்.........

          Originally posted by bmbcAdmin View Post
          ஸ்ரீ:
          வணக்கம், வந்தனம், நமோஷ்கார் க்ருஷ்ணாம்மா அவர்களே,
          தாங்கள் இல்லாமல் போரம் இளைத்துப்போய் இருந்தது,
          திரு.சௌந்தரராஜன் ஒருவர் மட்டும் தன் முயற்சியால் அதை வற்றாத ஜீவ நதியாக காத்து வந்தார்.
          நமது போரத்திற்கு புத்துணர்வு டானிக் கிடைத்திருக்கிறது,
          இனி உறுப்பினர்கள் காட்டில் கனஜோரான மழைதான்
          வெளுத்துக்கட்டுங்கோ! புதுப்புனல் கங்கையாக ப்ரவாகம் எடுக்கட்டும் பதிவுகள்.
          நன்றிகள் பலப்பல!
          மன்னிக்கணும் மாமா, எப்பவும் வரணும் என்று தான் நினைத்துக் கொள்வேன், வரமுடியாமல் போனது, இனி தொடர்ந்து வருகிறேன் .நீங்க சௌக்கியமா மாமா, உங்கள் உடல் நிலை இப்போ எப்படி இருக்கிறது? ........ஆத்தில் மாமி சௌக்கியமா?
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          Working...
          X