இஞ்சி டீ - இது ரொம்ப சுலபம்

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் துருவின இஞ்சி
சர்க்கரை
பால்

செய்முறை:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து துருவின இஞ்சி போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் துருவின இஞ்சி போடுவதால் சில சமயம் கசக்க வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.