Announcement

Collapse
No announcement yet.

5 copper statues of Natarajar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5 copper statues of Natarajar

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    いいいいいいいいいいいいい
    *(21)*
    *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""'''
    *ஐவகை செப்பு நடராசப் பெருமான்.*
    いいいいいいいいいいいいい
    பல்லவ மரபின் தோற்றத்திற்குக் காரணமானவனாக கருதப்படுபவன் சிம்மவர்மன் என்னும் மன்னன். இவன் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டிருந்தான். அவனுக்கு, சிவபெருமானின் *படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்* எனும் ஐந்தொழில்களையும் ஒன்றாகக் கொண்ட நடராசப் பெருமான் தோற்றத்தை, சிலையாக வடிவமைத்து *சிதம்பரத்தில்* வைத்து வழிபட வேண்டும் என்பது அவனது விருப்பமாக இருந்தது.


    அந்த விருப்பம் ஒன்றல்ல...இரண்டல்ல...ஐந்து நடராசப் பெருமான்கள் சிலைகளை உருவாக்க காரணமாக இருந்தான். மேலும் ஒவ்வொரு நடராசப் பெருமான் திருவுருவம் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டது.


    *(1)சிதம்பரம்.*
    """"""""""""""""""""""""
    சிம்மவர்மன், நடராசப்பெருமான் சிலையை வடிக்க வேண்டும் என எண்ணினான். அதற்காக சிற்பியை வரவழைத்தான்.


    அந்தச்சிற்பி, சோழநாட்டையைச்
    சார்ந்தவன். அந்த சிற்பியின் பெயர் *நமசிவாய முத்து.*


    மன்னனின் விருப்பப்படி சிற்பியும், நடராசப்பெருமானின் செப்புச் சிலை ஒன்றை வடித்தெடுத்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு வியந்த மன்னன், செப்பினால் செய்யப்பட்ட சிலை இவ்வளவு அழகாக இருக்கும் போது, தங்கத்தினால் சிலையை வடித்தால் இதைவிட மிகவும் அழகாக இருக்குமே!, என்று எண்ணினான்.


    சிற்பியை அனுகி, இச் செப்புச் சிலைபோலத் தங்கத்தில் நடராசத் திருமேனி வடிக்க எவ்வளவான தங்கம் தேவையாகும் எனக் கேட்டு, அத்தங்கத்தையும் சிற்பிகொடுத்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான்.


    சிற்பியும் தூய தங்கத்தில் நடராசப்பெருமான் சிலையை செய்தார். சிலையை பூர்த்தி செய்து பார்த்தபோது, அது செப்புச் சிலையாகவே தோற்றமளித்தது.


    இதைக் கண்ட மன்னன், தங்கத்திற்கு ஆசைப்பட்ட சிற்பி, இப்படி செய்துவிட்டானென எண்ணி, சிற்பியை சிறையிலடைத்தான்.


    அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், *சிற்பியின் மீது தவறேதுமில்லை.* அவர் வடித்த தங்கச்சிலையை நானே செப்புருவமாக உருமாறச் செய்தோம்.


    நான் செப்புச் சிலையாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, ஏற்கனவே செய்து வடித்தச் செப்புத் திருமேனியை சிற்பியிடமே அளித்து தென்பகுதிக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்து என்றார்.


    இதனையடுத்து மன்னன், தங்கம் செப்பாக மாறிய சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த செப்புத் திருமேனியை சிற்பியிடம் கொடுத்து, இறைவன் கட்டளைப்படி தென்பகுதிக்கு கொண்டு செல்லும்படி பணித்தான் மன்னன்.


    *(2)செப்பறை.*
    """"""""""""""""""""""""
    முதன் முதலில் வடித்தெடுக்கப்பட்ட செப்புச் சிலையுடன் சிற்பி தென் பகுதி நோக்கி புறப்பட்டார். அவருடன் மன்னனின் படை வீரர்கள் சிலபேர்கள் பாதுகாப்புக் கருதி உடன் சென்றனர்.


    திருநெல்வேலியை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், படைவீரர்கள் சுமந்து வந்த செப்புத்திருமேனியின் எடை அதிகரித்து கணத்தது போல் இருந்தன என சொன்னார்கள்.


    எனவே சற்று ஓய்வெடுத்து, பின் செல்லலாமென முடிவெடுத்தனர். சிலையை இறக்கி வைத்துவிட்டு அனைவரும் ஓய்வெடுத்தனர்:: கண்ணயர்ந்தனர். பின் விழித்தெழுந்த போது, நடராசப்பெருமான் திருமேனியைக் காணவில்லை.


    இதைப் பற்றி, சிற்பியும் படைவீரர்களும் அந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருக்கும் ராமபாண்டியனிடம் சென்று தெரிவித்தனர்.


    நெல்லையப்பரின் அதீத பக்தரான ராமபாண்டியன், நடராசப்பெருமான், சிலை திருடு போனதை கேள்வியுற்று மிகவும் வருந்தினான்.


    ராமபாண்டியனும் தன் படை வீரர்கள் சிலரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து சிலையைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டான்.


    சிலை திருட்டுப் போன இடத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். அப்போது அக்காட்டுக்குள்ளிருந்து சிலம்பொலியோசை பரவி வந்தது. மன்னனும் மற்றவர்களும் சிலம்பொலி வந்த திசை நோக்கி நடந்து சென்றனர்.


    சிலம்பொலி வரும் திசையறிந்து சென்ற அவர்களின் முன்னே, எறும்புகளும் சாரை சாரையாக படையெடுத்துச் சென்றன.


    சிலம்பொலி வந்த திசையும், எறும்புகள் சென்ற திசையும் ஒரே வழியாக இருப்பதையறிந்து, எறும்புகளைத் தொடர்ந்தும் சென்றார்கள்.


    எறும்புகள் சென்ற வழி ஓர் இடத்தில் நிலைபெற்று இருந்துவிட்டன. அவ்விடத்தை அடைந்ததும் சிலம்பொலி கேட்பதும் நின்றன. எறும்புகள் முற்றுகையிட்ட இடத்தை மன்னன் உண்ணிப்பாக குனிந்து பார்க்க, அங்கு சுயம்புவான லிங்கம் ஒன்றும், செப்புத் திருமேனியுடன் நடராசப்பெருமான் சிலையொன்றும் இருப்பதைக் கண்டு வியந்து போனான். அப்போது, அசரீரி ஒலித்தது. *"மன்னனே! இந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்"* என்றன அந்த அசரீரி.


    அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டது. செப்புத் திருமேனி நடராசர்க்கு தனிச் சன்னதி நிர்மாணிக்கப்பட்டது. சிற்பியால் செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அமைந்திருக்கும் இந்த ஊர் *செப்பறை* என்றழைக்கப்படுகிறது.


    திருநெல்வேலி சந்திப்புலிருந்து வடகிழக்கே ஒன்பது கி.மீ தூரத்தில் இருக்கிறது இராஜவல்லிபுரம். மேலும் இங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் செப்பறொற திருத்தலம் இருக்கிறது.


    *(3)கட்டாரிமங்கலம்.*
    """"""""""""""""""""""""""""""""
    மன்னன் ராம பாண்டியன் தான் தினமும் வழிபடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும், அதே போன்றதொரு நடராசர் செப்புச் சிலையை அமைக்க விரும்பினான்.


    அதேபோல ரிமபாண்டியனின் ஆளுகைக்குட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் என்பவனும், தன்னுடைய ஆளுகையான இவ்விடமான கட்டாரிமங்கலத்தில் ஒரு நடராசர் சிலையை வைத்து வழிபட எண்ணினான்.


    இதனையடுத்து மன்னன் ராமபாண்டியன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு ஒன்றும், சிற்றரசர் வீரபாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப கட்டாரிமங்கலத்துக்கென ஒன்றும், ஆக இரண்டு செப்பு சிலைகளைச் செய்து தரும்படி அதே சிற்பியிடம் சொன்னான்.


    சிற்பியும், நடராசர் தோற்றத்திலான இரண்டு செப்புச் சிலைகளை செய்து முடித்தார்.


    தனக்குரிய செப்புச் சிலையை வாங்கிப் போக வந்திருந்த சிற்றரசான வீரபாண்டியனுக்கு, சிலைகளின்அழகைக் கண்டவன் அப்படியே தன்னையே மறந்து மெய்மறந்து போனான்.


    இரு சிலைகளின் அழகும் ஒருங்கே அமையப்பட்டிருப்பதைக் கண்டு, இரண்டு சிலைகளையும் தாமே எடுத்துச் செல்ல எண்ணம் கொண்டான். மேலும் இதே போன்றதொரு அழகுசிலையை சிற்பி வடித்து விடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கையை துண்டித்து விட்டான்.


    பின்பு அவரது படைவீரர்கள் இரு பிரிவாக பிரிந்து இருசிலையையும் தனியாக பிரித்து எடுத்துச் சென்றனர்.


    ஒரு பிரிவினர் கட்டாரிமங்கலத்துக் கொண்டு சென்று அங்குள்ள ஆலயத்தில் செப்புசிலையை பிரதிஷ்டை செய்வித்தனர்.


    திருநெல்வேலி புது பேருந்து நிலையத்திலிருந்து, சுமார் முப்பது கி.மீ தூரத்தில் உள்ளன *பேய்குளம்.* இங்கிருந்து மூன்று கி.மீ தொலையில் இருக்கிறது கட்டாரிமங்கலத் தலம்.


    *(4) கரிசூழ்ந்த மங்கலம்.*
    """"""""""""""""""""""""""""""""""""""""
    சிற்றரசன் வீரபாண்டியனின் மற்றொரு படைபிரிவானவர்கள், இன்னொரு செப்புச் சிலையுடன் வேறு வழியில் பயணத்தை மேற்க்கொண்டிருந்தனர்.


    அப்பயணத்தின் வழியில் தாமிரபரணி ஆறு குறுக்கிட்டது. ஆற்றிவலும் இறங்கி பயணத்தைத் தொடர்ந்தனர். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருகி வந்து, வெள்ளம் அகழ்ந்து கரைபுரண்டு ஓடியது. திடீர் வெள்ளத்தில் படைவீரர்கள் அனைவரும் வெள்ளத்தினுள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டனர். படைவீர்களையும் அடையாளம் காணமுடியவில்லை. நடராசர் செப்புத் திருமேனியும் ஆற்றினுள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுப் போயின.


    சில நாட்கள் கழிந்தன. ஆற்றின் வெள்ளம் வடியத் தொடங்கின. ஒரு கரையோரமாக நணராசர் செப்புத் திருமேனி ஒதுங்கிக் கிடந்தன.


    செப்புத் திருமேனியைப் பார்த்த அந்த ஊர் பகுதிமக்கள் அச்சிலையை எடுத்துப் போய் ஓரிடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர்.


    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட செப்புச் சிலையை, ஊர்மக்கள் எடுத்து வழிபடும் செய்தியறிந்த மன்னன் ராமபாண்டியன்,,,,,,,,
    அந்தச் சிலையை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தான்.


    ஆனால் அது மடியாமல் போயின. காரணம். மன்னன் நினைத்த அன்றைய தினம் அவனுடைய கனவில் இறைவன் தோன்றி...... *கரிய மேகங்கள் சூழ்ந்த இவ்விடத்திலேயே இருக்க விருப்பம் கொண்டேன்* இங்கேயே எனக்கொரு ஆலயத்தையும் புணர்வித்து வழிபடுவாயாக! என்றார்.


    கனவில் இறைவன் தோன்றிக் கூறியபடியே ராமபாண்டியன், அங்கு ஓர் ஆலயத்தை எழுப்பினான். இவ்வாலயத்தில் இருக்கும் சிலை, சிற்பி செய்த நான்காவது நடராசர் செப்புத் திருமேனியாகும்.


    சிற்பி செய்த நான்காவது செப்புசிலை கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


    திருநெல்வேலி புது பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி செல்லும் பாதையில் உள்ளது பத்தமடை. இவ்வூரிலிருந்து மூன்று கி.மீ தூரம் போனால் கரிசூழ்ந்தமங்கலம் தலத்தை அடையலாம்.


    *(5) கரிவேலங்குளம்.*
    """""""""""""""""""""""""""""""""""
    நான்கு செப்புத் திருமேனிகள் நிறுவப்பட்ட பிறகு, சிற்பிக்கு மன்னன் ராமபாண்டியன் செயற்கை மரக்கை ஒன்றை உருவாக்கி, அதை சிற்பியின் முழங்கையினிலே பொருத்தினான்.


    மரக்கை பொருத்தப்பட்ட பின்பு சிற்பி தனக்கு ஒரு உதவியாளனை வைத்துக் கொண்டு, அவனுடன் சேர்ந்து ஒரு நடராசர் செப்புத் திருமேனியைச் செய்யத் தொடர்ந்தான்.


    ஐந்தாவதாக உருவாகி வந்த அந்த ச் செப்பு சிலையோ, இதற்கு முன் வடித்த நான்கு செப்புச் சிலைகளையும் விட மேலும் அழகாக காட்சியளித்தன.


    அந்த சிலையின் அழகில் மயங்கிய சிற்பி, சிலையின் கன்னத்தில் செல்லமாக கிள்ளி விட்டான்.


    அவன் கிள்ளிய வடு அப்படியே பதிந்து போயிற்று. அந்த கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் நடராசர் செப்புசிலை *கருவேலங்குளம்* எனும் ஊரிலிருக்கும் திருக்கோவிலில் நிறுவப்பட்டது.


    திருநெல்வேலி புது பேருந்து நிலையத்திலிருந்து முப்பத்தேழு கி.மீ தூரத்தில், சேரன்மகாதேவி வழியாக களக்காடு செல்லும் பாதையில் உள்ளன கருவேலங்குளம் திருத்தலம்.


    திருச்சிற்றம்பலம்.
    *மீண்டும் தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு தொடரில்.....*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X