Announcement

Collapse
No announcement yet.

Durga sooktam & its meaning

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Durga sooktam & its meaning

    Durga sooktam & its meaning
    Courtesy: ramanan50.tumblr.com/post/.../த-ர-க-க-ஸ-க-தம-அர-த-தம
    துர்கா சூக்தம் - தமிழ் விளக்கம்...
    ஜாத வேதஸே -அனைத்தையும் அறிபவரான அக்னியே !
    ஸோமம் -சோமத்தை ,
    ஸுனவாம -பிழிந்து உமக்கு அளிக்கிறோம் .
    வேத :அக்னி தேவன் ,
    அராதீயதே -தடைகளை , இடர்ப்பாடுகளை ,
    நிதஹாதி -சுட்டு எரிக்கட்டும் .
    நாவா -படகு ,
    ஸிந்தும் இவ -கடலைக் கடக்க உதவுவது போல் ,
    ந -எங்களை ,
    துர்காணி -துன்பங்களில் இருந்து,
    பர்ஷததி -காக்கட்டும் .
    துரிதா -நாம் செய்யும் தவறுகளில் இருந்து நம்மை ,
    அக்னி -அக்னி ,
    அதி -நம்மைக் காக்கட்டும் .
    அக்னியே !
    சோமத்தைப் பிழிந்து அதன் ரசத்தை உனக்கு அளிக்கிறோம் .
    வாழ்வில் வரும் இடையூறுகளை அக்னி அழிக்கட்டும் .
    படகின் வழியே கடலைக் கடத்துவித்தல் போல், அக்னி தேவன் , எங்களை எல்லாத் துன்பங்களிலும்
    தவறுகளிலும் இருந்து காக்கட்டும் .
    2.தாமக்னிவ'ர்ணாம் தப'ஸா ஜ்வலம்தீம் வை'ரோசனீம் க'ர்மபலேஷுஜுஷ்டா"ம் |
    துர்காம் தேவீக்ம் ஶர'ணமஹம் ப்ரப'த்யே ஸுதர'ஸி தரஸே' னமஃ' ||
    அக்னி வர்ணாம் -செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,
    தபஸா -மேன்மையான தவத்தினால் ,
    ஜ்வலந்தீம் -ஒளிர்பவளும் ,
    வைரோசனீம் -ஈசருக்கு உரியவளும் ,
    கர்ம பலேஷு -செய்யப்படும் செயல்களுக்கு மற்றும் அதன் பலன்களுக்கு ,
    ஜுஷ்டாம் -ஆற்றலாக இருப்பவளும் ,
    (ஆகிய ),
    துர்காம் தேவீம் -துர்கா தேவியை ,
    சரணம் ப்ரபத்யே -நான் சரணடைகிறேன் .
    தரஸே -கரை சேர்ப்பவளே !
    ஸுதரஸி -கரை சேர்ப்பாய் ,
    நம :-நமஸ்காரம் .
    செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,மேலான தவத்தினால் ஒளிர்பவளும் ,இறைவனுக்கு உரியவளும்
    ,செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் இவற்றின் ஆற்றலாக இருப்பவளும் ஆனா துர்கா தேவியை ,
    நான் சரணடைகிறேன் .
    துன்பக் கடலில் இருந்து கரி சேர்ப்பவளே !
    எங்களைக் காப்பாய் .
    உனக்கு நமஸ்காரம் .
    3.அக்னே த்வம் பா'ரயா னவ்யோ' அஸ்மாம்த்-ஸ்வஸ்திபிரதி' துர்காணிவிஶ்வா" |
    பூஶ்ச' ப்றுத்வீ ப'ஹுலா ன' உர்வீ பவா' தோகாய தன'யாய ஶம்யோஃ ||
    அக்னே -அக்னியே !
    த்வம் -நீவிர் ,
    நவ்ய ;-போற்றுதலுக்கு உரியவர் ,
    ஸ்வஸ்திபி -மகிழ்ச்சியான பாதைகளின் மூலம், வழியாக ,
    அஸ்மான் -எங்களை ,
    விஸ்வா -அனைத்து ,
    துர்காணி -இன்னல்களுக்கும்
    அதிபராய -அப்பால் எடுத்துச் செல்வாய் ..
    ந -எங்கள் ,
    பூ : -ஊரும் ,
    ப்ருத்வீ ,-நாடும் ,
    உர்வீ ச -உலகும் ,
    பஹுலா -செழித்து ஓங்கட்டும் .
    தோகாய -பிள்ளைகளுக்கும் ,
    சம்யோ :இன்பம் தருபவனாக ,
    பவா -இருப்பாய் .
    அக்னியே !
    நீ போற்றுதலுக்கு உரியவன் .
    இன்பம் நிறைந்த பாதகளின் வழியே எங்களை எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்வாய் .
    எங்கள் ஊரும் நாடும் உலகும் செழிக்கச் செய்வாய் .
    எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்வைத் தருவாய் .
    4.விஶ்வா'னி னோ துர்கஹா' ஜாதவேதஃ ஸிம்துன்ன னாவா து'ரிதாஉதி'பர்-ஷி |
    அக்னே' அத்ரிவன்மன'ஸா க்றுணானோ"உஸ்மாகம்' போத்யவிதாதனூனா"ம் ||
    ஜாத வேத: -அக்னியே !
    விஸ்வானி -அணைத்து ,
    துர்கஹா -துன்பங்களையும் அழிப்பவனே ,
    ஸிந்தும் நாவா -கடலில் படகின் மூலம் ,
    துரிதா -இன்னல்களிருந்து ,
    ந -எங்களை ,
    அதி பர்ஷி -காப்பாய் .
    அக்னே -அக்னே !
    அஸ்மாகம்-எங்கள் ,
    தனுனாம் -உடல்களை ,
    அவிதா -காப்பவனே !
    மனஸா -மனத்தால் ,
    க்ருணான -மீண்டும் ,மீண்டும் சொல்கின்ற ,
    அத்ரிவத் -அத்ரி முனிவரைப் போல் ,
    போதி -மனதில் கொள்வாய் .
    அக்னியே !
    எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காப்பவனே !
    கடலில் கஷ்டப்படவடுவனைப் படகின் மூலம் காப்பது போல் ,இன்னல்களிருந்து எங்களைக் காப்பாய் .
    எங்கள் உடல்களைக் காப்பவனே !
    எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனத்தால் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்ற
    அத்ரி முனிவரைப் போல் எங்கள் நலனை மனதில் கொள்வாய் .
    5. ப்றுதனா ஜிதக்ம் ஸஹ'மானமுக்ரமக்னிக்ம் ஹு'வேம பரமாத்-ஸதஸ்தா"த் |
    ஸ னஃ' பர்-ஷததி' துர்காணி விஶ்வா க்ஷாம'த்தேவோ அதி' துரிதாஉத்யக்னிஃ
    ப்ருதனாஜிதகும் -எதிரிகளின் படையை அழிப்பவனும் ,
    ஸகமானம் -தாக்குபவனும் ,
    உகரம்-உக்ரமானவனுமான ,
    அக்னிம் -அக்னி தேவனை ,
    பரமத் சதஸ்யாத் -மன்றத்தின் உயர்ந்த இடத்தில் இருந்து ,
    ஹுவேம -அழைக்கிறோம் .
    ஸ -அந்த ,
    அக்னி -அக்னி ,
    தேவ -தேவன் ,
    ந -எங்களை ,
    விஸ்வா -அணைத்து ,
    துர்காணி -துன்பங்களுக்கும் ,
    ஷாமத் -அழியக் கூடியவற்றிற்கும்,
    துரிதாத் -தவறுகளுக்கும் ,
    அதி -அப்பால் ,
    பர்ஷாத் -காக்கட்டும் .
    எதிரிகளின் படைகளைத் தாக்கி அழிப்பவனும் ,உக்ரமானவனும் ஆகிய அக்னி தேவனை உயர்ந்த
    இடத்திலிருந்து இங்கே எழுந்து அருளுமாறு வேண்டுகிறோம் .
    அவன் , எங்களை அனைத்துத் துன்பங்களுக்கும் ,மற்றும் அழியக் கூடியவற்றிர்க்கும் தவறுகளுக்கும்
    அப்பால் எடுத்துச் செல்லட்டும் .
    எங்களைக் காக்கட்டும் .
    6.ப்ரத்னோஷி' கமீட்யோ' அத்வரேஷு' ஸனாச்ச ஹோதா னவ்ய'ஶ்ச ஸத்ஸி' |
    ஸ்வாம்சா"உக்னே தனுவம்' பிப்ரய'ஸ்வாஸ்மப்யம்' ச ஸௌப'கமாய'ஜஸ்வ II
    அக்னே -அக்னியே !
    அத்வரேஷு வேள்விகளில் ,
    ஈட்ய – புகழப்படுகின்ற ,
    கம் -ஆனந்தத்தை ,
    ப்ரத்னோஷி -அதிகரிக்கிறாய் .
    ஹோதா -வேள்வி செய்பவர்களுள் ,
    ஸனாத் ச -தொன்மையானதும் ,
    நவ்ய ச -புதியனாகவும் ,
    ஸத்ஸி -இருக்கிறாய்.
    ஸ்வாம்- உனது ,
    தனுவம் ச -வடிவாக இருக்கின்ற ,
    அஸ்மப்யம் -எங்களுக்கு ,
    பிப்ரஸ்ய -மகிழ்ச்சியைத் தருவாய் .
    ச -மேலும் ,
    ஸௌபகம் -நன்மையை ,
    அயுஜஸ்ய -எல்லாப் புறங்களில் இருந்தும் கொண்டு வருவாய் .
    அக்னியே !
    வேள்விகளில் புகழ்ச்சியால் சிறப்பிடப் படுகின்ற நீ எங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கின்றாய் .
    வேள்வி ஆற்றுபவர்களுள் நீ தொன்மையானவனும் மற்றும் புத்யவனும் ஆக விளங்குகிறாய் .
    உனது வடிவவி இருக்கின்ற எங்களுக்கு இன்பத்தைத் தருவாய் .
    அனைத்துப் புறங்களிலிருந்தும் எங்களுக்கு நன்மையைக் கொண்டு வருவாய் .
    7.கோபிர்ஜுஷ்ட'மயுஜோ னிஷி'க்தம் தவேம்"த்ர விஷ்ணோரனுஸம்ச'ரேம |
    னாக'ஸ்ய ப்றுஷ்டமபி ஸம்வஸா'னோ வைஷ்ண'வீம் லோக இஹ மா'தயம்தாம் ||
    இந்த்ர -தேவர்களின் தலைவனே !
    அயுஜ – பாவக் கலப்பில்லாதவன் ,
    விஷ்ணோ -எங்கும் நிறைந்தவன் ,
    கோபி :-பசுக்களுடன் ,
    ஜுஷ்டம்-மேலான ஆனந்தம் ,
    நிஷிக்தம் -மிகுதியாகப் பெற ,
    தவ -உன்னை ,
    அனு சஞ்சரேம-பின் தொடர்கிறோம் .
    பிருஷ்டம் அபி -உயர்ந்த ,
    நாகஸ்ய 'தேவர்கள் உலகில் ,
    ஸம்வஸான -உறைகின்ற ,
    வைஷ்ணவீம் -விஷ்ணு உருவான தேவியிடம் ,
    இஹ -இந்த ,
    லோகே -உலகம் ,
    மாதயந்தாம் -இன்பத்தைத் தரட்டும் .
    இறையே !
    நீ பாவக் கலப்பிலாதவன் .
    எங்கும் நிறைந்தவன் .
    ஏராளமான பசுக்களுடன் நிறைந்த செல்வம் பெற்று இன்புறுவதர்க்காக உன்னைத் தொடர்கிறோம் .
    விஷ்ணு வடிவினளான தேவியிடம் நான் கொண்ட பக்திக்காக ,உயர்ந்த தேவருலகில் வாழுகின்ற தேவர்கள்
    இந்த உலகில் எனக்கு மகிழ்வைத் தரட்டும்.
    ஓம் காத்யாயனாய' வித்மஹே' கன்யகுமாரி' தீமஹி | தன்னோ' துர்கிஃ ப்ரசோதயா"த் ||
    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ' ||
    காத்யயனாய -காத்யாயனி தேவியை ,
    வித்மஹே -அறிவோமாக .
    கன்யாகுமாரி . -கன்யா குமாரியை ,
    தீ மஹி -த்யானிப்போம் .
    தத் துர்கி -அந்த துர்கா தேவி ,
    ந -நம்மை ,
    ப்ரசோதயாத் -தூண்டட்டும் .
    காத்யாயனி தேவியை அறிவோமாக .
    அதன் பொருட்டு , அந்த கன்னியாகுமரி தேவியை த்யாநிப்போம் .
    அந்த துர்கா தேவி நம்மைத் துண்டுவாளாக .
Working...
X