பிரபல கம்பெனி ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது !

விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி *டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே விமான நிலையம் போகுமாறு* டிரைவரிடம் சொன்னார் !

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு *முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட* ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை *இடிக்காமல்* நிறுத்தினார் !

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த *அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான் !*

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் *ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார் !*

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.

ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..? என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்டார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னார் ! *இப்படிப்பட்ட மனிதர்களுக்கு குப்பை வண்டி என்று பெயர் !*

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள் !

*மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள்*.

விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும் !

அது போன்ற *குப்பைகள் சேரச் சேர* அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை.

*சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள்*. அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும் !

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது . நம்ம பேர் தான் கெட்டுப்போகும்!! என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்!

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் *வெற்றி பெற்ற சாதனையாளர்கள்* எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள *அனுமதிக்கவே மாட்டார்கள்* என்பது தான் ! !

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ *காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ* பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு *புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்*.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை *நேசிப்போம் !*
அப்படி நடத்தாதவர்களுக்காக *பிரார்த்திப்போம் ! !
*
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends