Announcement

Collapse
No announcement yet.

'பயத்தம்பருப்பு சுகியன்'

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'பயத்தம்பருப்பு சுகியன்'

    'பயத்தம்பருப்பு சுகியன்'

    முழு பச்சைப்பயிறு அல்லது உடைத்த பயத்தம் பருப்பு – 1 கப்
    மைதா – 1 கப்
    வெல்லம் – 1 கப்
    தேங்காய்த்துருவல் – 1/2 கப்
    ஏலப்பொடி – சிறிதளவு
    அரிசி மாவு – 2 டீஸ்பூன்
    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை:

    பச்சைப்பயிரை 10 நிமிடங்கள் ஊறவைத்து மூழ்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வந்ததும் கேஸை அணைக்கவும்.
    பயத்தம் பருப்பானால் களைந்து அப்படியே வேகவைக்கலாம்.
    வெந்த பாசிப்பயிரை நன்றாக மசிக்கவும்.
    வெல்லத்தை உடைத்து, வைத்துக் கொள்ளவும்.
    ஒரு வாணலியில் வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அது கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
    மீண்டும் வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில், வேக வைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறவும்.
    பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும், தேவையானால் இன்னும் சிறிது நெய் விட்டுக்கொள்ளவும்.
    நன்கு கிளறவும், எல்லாமாக நன்கு சேர்ந்து கொண்டாடும், ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
    அது நன்கு ஆறியபின் சிறுசிறு உருண்டைகளாக ஒரே அளவில் உருட்டிக் கொள்ளவும்.
    இது தான் பூரணம்.

    அடுத்து , மேல் மாவிற்கு, மைதாவுடன் சிறிது உப்பு, அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும் .
    எண்ணெயை சூடாக்கி பருப்பு உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
    இப்போது சுவையான 'பயத்தம்பருப்பு சுகியன்' தயார்.

    குறிப்பு: சிலர் மேல் மாவிற்க்காக அரிசி உளுந்து அரைத்து செய்வார்கள். அப்படியும் செய்யலாம் .

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: 'பயத்தம்பருப்பு சுகியன்'

    Originally posted by krishnaamma View Post
    'பயத்தம்பருப்பு சுகியன்'

    முழு பச்சைப்பயிறு அல்லது உடைத்த பயத்தம் பருப்பு – 1 கப்
    மைதா – 1 கப்
    வெல்லம் – 1 கப்
    தேங்காய்த்துருவல் – 1/2 கப்
    ஏலப்பொடி – சிறிதளவு
    அரிசி மாவு – 2 டீஸ்பூன்
    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை:

    பச்சைப்பயிரை 10 நிமிடங்கள் ஊறவைத்து மூழ்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வந்ததும் கேஸை அணைக்கவும்.
    பயத்தம் பருப்பானால் களைந்து அப்படியே வேகவைக்கலாம்.
    வெந்த பாசிப்பயிரை நன்றாக மசிக்கவும்.
    வெல்லத்தை உடைத்து, வைத்துக் கொள்ளவும்.
    ஒரு வாணலியில் வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அது கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
    மீண்டும் வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில், வேக வைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறவும்.
    பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும், தேவையானால் இன்னும் சிறிது நெய் விட்டுக்கொள்ளவும்.
    நன்கு கிளறவும், எல்லாமாக நன்கு சேர்ந்து கொண்டாடும், ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
    அது நன்கு ஆறியபின் சிறுசிறு உருண்டைகளாக ஒரே அளவில் உருட்டிக் கொள்ளவும்.
    இது தான் பூரணம்.

    அடுத்து , மேல் மாவிற்கு, மைதாவுடன் சிறிது உப்பு, அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும் .
    எண்ணெயை சூடாக்கி பருப்பு உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
    இப்போது சுவையான 'பயத்தம்பருப்பு சுகியன்' தயார்.

    குறிப்பு: சிலர் மேல் மாவிற்க்காக அரிசி உளுந்து அரைத்து செய்வார்கள். அப்படியும் செய்யலாம் .

    நல்ல குறிப்பு. நான் கடலைப்பருப்பில் பண்ணுவேன். எல்லாம் இதே முறைதான், பருப்புதான் வேற. போளி பூரணம் போல இருக்கும்.

    மேல் மாவுக்கு வெறும் மைதா போடுவேன் அல்லது தேன்குழல் மாவு ஒரு கரண்டி எடுத்து கரைச்சாலும் நன்னா இருக்கும். ஸ்ரீ ஜெயந்தி சமயத்தில் பண்றதுன்னா தேன்குழல் மாவிலேயே ஒரு உருண்டையை கரைச்சு பண்ணிடறது வழக்கம். மத்த சமயத்தில் மைதாதான்...

    Comment

    Working...
    X