Announcement

Collapse
No announcement yet.

Markandeya & Yama

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Markandeya & Yama

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(28)*
    ☘தெரிந்தும் தெரியாமலும் தொடர்.☘
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    ☘ *மார்க்கண்டேயர்க்கு அறக்கருணை, எமனுக்கு மறக்கருணை.*☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    நம் அப்பர் சுவாமிகள் வியந்து பாடுவது *இறைவன் ஒருவனைத்தான்*


    ஆனால் இது என்ன புதுமையான தலைப்பு!?? *எமன் உயிரை எடுப்பவன்*


    இவனிடம் அப்பர் பெருமான் வியக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று எண்ணுகிறோம் இல்லையா!! உண்மையில் அப்பர் பெருமான் *மாலயன்* உள்ளிட்ட மேலான தேவர்களிலும் உயர்ந்தவன் எமன் என்று வியந்து பாடும் பாடல் ஒன்று இருக்கிறது,


    *மேலும் அறிந்திலன் நான்முகன்;*


    *மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன் மாலுற்றதே*


    *வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி,*


    *மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே*
    என்பது பாடல், இது நான்காம் திருமுறையின் இறுதியாய் உள்ளது.


    இறைவனது திருமுடியை தேடும் பொருட்டு அன்னமாய் மாறி மேலும் மேலும் பறந்து சென்ற பிரமனும் இறைவனது திருவடியை காண பன்றியாய் உருமாறி பாதாளம் ஏழினும் கீழ் சென்று திருமாலும் தோல்வியைத்தான் தழுவினார்கள். அவர்களின் தேடலில் இறைவனை காண முடியவில்லை என்பதைத்தான்


    *மேலும் அறிந்திலன் நான்முகன்;*


    *மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன் மாலுற்றதே*
    என்ற வரிகளில் கூறும் சுவாமிகள்,


    பாலனாகிய *மார்க்கண்டேயர் சிவபூசை* செய்யும் போது பாசக்கயிற்றை வீசி அறிவிழந்தவனாய் அவர் உயிரை எடுக்க வந்த *எமன், இறைவனது திருவடியை மார்பில் (உதையாக) தாங்கி அறிந்தான்*
    என்பதைத்தான்


    *வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி,*


    *மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே* என்ற வரிகளால் விளக்குகிறார்


    இந்த இடத்தில் இறைதரிசனம் பெற்றவர்கள் *மார்க்கண்டேயரும், எமனும் ஆவர்கள்*.


    இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவருமே அந்த நொடியில் இறைவனை காண வேண்டும் என்ற தேடல் இல்லாதவர்கள்.


    ஆனால் இந்த இருவருக்கும் இறைவன் தரிசனம் தந்தான், காலனுக்கு திருவடி தீண்டும் பேரின்பமும் கிடைத்தது,


    நம்முடைய பார்வைக்கு *அந்த "உதை" கடுமையான தண்டனை போல தெரிந்தாலும் எமனுக்கு அது இன்பமயமான திருவடிப் பேறுதான்* அதனால்தான்
    அப்பர் பெருமான் *காலன் அறிந்தான் அரிதற்கு அரியான் கழலடியே!!* என்று வியந்து பாடினார்.


    ஏன் எமனுக்கு இத்தனை பெரிய அங்கீகாரம்??!! என்றால் *எமன் ஒரு சிறந்த கடைமையாளன்* என்பதால்தான்...


    இறைவன் அவனுக்கு விதித்த பணியை, வாழ்வை எந்த நிலையிலும் யாருக்காகவும் விட்டுத்தராமல் *கடமையே கண்* என்றபடி *பாலகன், சிவபூசை செய்கிறான்* என்பதெல்லாம் பற்றி சிந்திக்காமல் *அறிவிழந்த* நிலையில் தன் கடமையை செய்ய நினைக்கிறான் எமன்;


    மார்க்கண்டேயர் *அறிவுத் தெளிவுடையவர் அதனால் பூரண சரணாகதியுடன் இறைவனிடம் தன்னை ஒப்புக் கொடுக்கிறார்*
    எனவே........


    *மார்க்கண்டேயருக்கு அறக்கருணையும் எமனுக்கு மறக்கருணையும் கிடைக்கிறது*


    இருவரிடமும் தன்முனைப்பு இல்லை; என்னால் முடியும் என்ற எண்ணம் இல்லை; படித்திருக்கிறோம் என்ற கர்வமும் இல்லை.


    ஆனால் *அயனும் மாலும் தங்களது வல்லமையை துணைக் கொண்டு இறைவனை தேடத் துவங்கினார்கள்*


    என்னால் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணம் உடையவர்கள்தான் தேடுவார்கள். அதனால் *முடிந்தால் கண்டுபிடி என்று இறைவன் தழலாய் ஓங்கி நின்றான்* அவர்களால் முடியவில்லை.


    இறைவனுக்கு முன்பு *நம்முடைய படிப்பும் அறிவும் செயலற்று போய்விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்* அதனால்தான் *கற்றாரை யான் வேண்டேன்* என்கிறார் போலும் மணிவாசகப் பெருமான்.


    நாம் எத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும் இறைவனுக்கு முன்பு செல்லாது.


    *பரிபூரண அர்ப்பணிப்பு கொண்ட அடியார்களுக்கும்*
    *வணங்கவில்லை என்றாலும் எமனைப் போல தர்மவானாக, கர்மயோகியாக இருப்பவர்களுக்கும்* தான் இறைதரிசனம் வாய்க்கும் என்பது இப்பாடல் மூலம் அப்பர் பெருமான் காட்டும் கருத்து.


    *எமனைப்போல நூல் பிசகாத தர்மவானாக கர்மயோகியாக இருப்பது மிகக்கடினம்; ஆனால் மார்க்கண்டேயரைப் போல பரிபூரண அன்பாளராக இருப்பது எளிது*
    இதில் எது நம்வழி என்று சிந்திப்போம்.


    சரிதானே!


    திருச்சிற்றம்பலம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X